Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!

ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!

கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கொல்ல

By Udhaya

கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கொல்லம் நகரின் பங்கு மிக முக்கியமானதாகவும் அறியப்படுகிறது. சீனா, ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் பண்டைய காலத்திலேயே வலிமையான வியாபாரத்தொடர்புகளை கொல்லம் நகரம் பெற்றிருந்ததாக வரலாற்றுச்சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மற்ற நகரங்களுடனும் வணிகப்பரிமாற்றங்களை கொண்டிருந்த இந்நகரம் பின்னாளில் கேரள மாநிலத்தின் முதன்மையான தொழில் நகரங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. இன்று முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகிலேயே மிகப்பெரிய இடத்தை வகிக்கும் நகரமாக இது புகழ் பெற்றிருக்கிறது. கேரளாவில் கொல்லத்தை முந்திரி நகரம் என்றும் அழைக்கின்றனர். தென்னை நார் தொழிலில் பலவித முன்னேற்றங்களை கண்டு சிறுதொழில் அம்சங்களின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது. செழிப்பான கலாச்சாரம் 'கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள். அதன்படியே நாமும் கொல்லம் நகரை சுற்றி ஒரு சுற்றுலா சென்று வரலாம் வாங்க...

கொல்லம் நகரத்தின் குதூகலிக்கச் செய்யும் திருவிழாக்கள்

கொல்லம் நகரத்தின் குதூகலிக்கச் செய்யும் திருவிழாக்கள்

திருவிழாக்களின் கண்கொள்ளா காட்சிகள் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் பலவிதமான திருவிழாக்கள் கொல்லம் நகரில் கொண்டாடப்படுகின்றன. ‘பாரம்பர்யா' எனப்படும் கைவினைப்பொருள் கண்காட்சித்திருவிழா இங்கு வருடாவருடம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அற்புதமான கைவினைப்பொருட்கள் இந்தகண்காட்சிக்கு கொண்டு வரப்படுகின்றன. இது தவிர கொல்லத்தில் நடைபெறும் படகுப்போட்டிகளும், யானைத்திருவிழாக்களும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக பேசப்படுகின்றன. அஷ்டமி ரோகிணி, ஓணம் மற்றும் விஷு போன்ற பண்டிகைகள் கொல்லத்தில் மிகக்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.

ஓச்சிரக்களி எனும் பாரம்பரிய வாற்சண்டை வருடாவருடம் ஜுன் மாதத்தில் இங்கு நடத்தப்படுகிறது. வித்தியாசமான இந்த போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவரும் நிகழ்ச்சியாக புகழ் பெற்றுள்ளது. மரமடி மல்சாரம் (காளைப்பந்தயம்), கொல்லம் பூரம், பரிபள்ளி கஜமேளா, ஆனயடி யானை அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் பன்மனா பூரம் ஆகியவையும் கொல்லம் நகரில் பிரசித்தமாக கொண்டாடப்படும் இதர விசேஷ நிகழ்ச்சிகளாகும். இவை யாவுமே இந்திய மற்றும் சர்வதேச பயணிகளால் அதிக அளவில் விரும்பி ரசிக்கப்படும் கொண்டாட்டங்களாகும்.

Espen Klem

 காண்போரை கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியங்கள்

காண்போரை கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியங்கள்

ஈடு இணயற்ற அழகுக்காட்சிகளும் வசீகரங்களும் எண்ணற்ற எழில் அம்சங்களையும், சுற்றுலா ஸ்தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள கொல்லம் நகரம் வருடம் முழுதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை. கொல்லம் பீச், தங்கசேரி பீச், அட்வெஞ்சர் பார்க் மற்றும் திருமுல்லாவரம் பீச் போன்றவை பயணிகளுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களாகும். இவை தவிர, அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம், மன்ரோ தீவு, நீண்டகரா துறைமுகம், அலங்கடவு படகுக்கட்டுமான தளம் மற்றும் சாஸ்தாம்கொட்டா ஏரி ஆகியவை ரம்மியமான இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலாஸ்தலங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Thangaraj Kumaravel

ஆன்மீகமும் அற்புதங்களும்...

ஆன்மீகமும் அற்புதங்களும்...

ராமேஷ்வரா கோயில், அச்சன்கோயில் மற்றும் மயநாட் போன்றவையும் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களாகும். மாதா அமிருதானந்தா மாயி'யின் அமிருதபுரி ஆசிரமமும் ஒரு முக்கியமான ஆன்மிக தலமாக கொல்லத்தில் புகழ் பெற்றுள்ளது. ஆரியங்காவு, சவரா, கொட்டாரக்கரா, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

albert

 உணவுகளும் ருசிகளும்

உணவுகளும் ருசிகளும்

தனித்தன்மையான சுவைகளும் வரவேற்கும் சீதோஷ்ணநிலையும் கொல்லம் நகரம் தனது தனித்தன்மையான கடலுணவு தயாரிப்புகளின் சுவைக்கு புகழ் பெற்றுள்ளது. மீன், நண்டு, எறால் மற்றும் கணவாய் மீன் போன்ற கடலுணவு வகைகள் இங்குள்ள ஏராளமான உணவகங்களில் கேரள பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.

spykster

நினைவூட்டும் என்றென்றும்

நினைவூட்டும் என்றென்றும்

கொல்லம் நகரமானது திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா போன்ற மாவட்டங்களை தன் எல்லைகளாக கொண்டுள்ளதால் நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. வருடமுழுதுமே இனிமையான பருவநிலை இப்பகுதியில் நிலவுகிறது. மழைக்காலத்தில் கொல்லம் நகரம் இன்னும் அழகாக பசுமையுடன் காட்சியளிக்கவும் தவறுவதில்லை. மேலும், கொல்லம் நகருக்கு பயணம் செய்து திரும்பும்போது பயணிகள் ஞாபகார்த்தப்பொருட்கள் வாங்குவதற்கேற்ற மார்க்கெட் பகுதிகளும் இங்கு நிறைந்துள்ளன. பிரமிப்பூட்டும் வரலாற்றுப்பின்னணி, இதமான பருவநிலை, ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் மற்றும் குறையில்லாத உணவுச்சுவைகள் போன்றவற்றை ஒருங்கே கொண்டுள்ள கொல்லம் நகரம் ஒரு மாறுபட்ட கனவு போன்ற சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு அள்ளி வழங்க காத்திருக்கிறது.

Joseph Jayanth

 திருமுல்லாவரம் கடற்கரை

திருமுல்லாவரம் கடற்கரை

திருமுல்லாவரம் கடற்கரை

கொல்லம் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த திருமுல்லாவரம் பீச் எனும் கடற்கரைப்பகுதியானது அழகிய மணற்பிரதேசத்துடன் வணிக ஆரவாரங்களால் பாதிப்படையாமல் காட்சியளிக்கிறது. ஆழம் குறைந்த நீர்ப்பகுதி என்பதால் பயமில்லாமல் பயணிகள் குழந்தைகளுடன் இந்த கடற்கரையில் நீந்திக்குளித்தும் மகிழலாம். மொத்தத்தில், சுற்றுலாப்பயணிகள் குடும்ப உறுப்பினர்களுடன் இயற்கையை ரசித்தபடி மகிழ்ச்சியாக பொழுதுபோக்க இது மிகவும் உகந்ததாக உள்ளது. நகரச்சந்தடியிலிருந்து விலகியிருப்பதால் இது அமைதியை விரும்பும் மனங்களுக்கு இது பிடித்தமான ஸ்தலமாக திகழ்கிறது.

இங்குள்ள ‘நியாரழ்ச்ச பாறா' எனும் ஒரு பாறை அமைப்பும் பிரசித்தமான அம்சமாக அறியப்படுகிறது. இந்த பாறையானது கடற்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ளது. அலையிறக்க காலத்தில் நீர் மட்டம் உள்வாங்கும்போது இந்த பாறை அமைப்பை காண முடியும். மாலை நேரம் இந்த கடற்கரையை சுற்றிப்பார்த்து ரசிக்க உகந்ததாக உள்ளது. மழைக்காலம் தவிர்த்து வருடத்தின் மற்ற எல்லா நாட்களிலும் திருமுல்லாவரம் கடற்கரைக்கு விஜயம் செய்து ரசிக்கலாம்.

Santhosh Janardhanan

தங்கசேரி பீச்

தங்கசேரி பீச்

கொல்லம் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தங்கசேரி பீச் எனும் கடற்கரைப்பகுதி ஒரு அற்புதமான பிக்னிக் ஸ்தலமாகும். மணற்பாங்கான இந்த கடற்கரைப்பகுதியில் புராதனமான போர்த்துகீசிய கோட்டையின் சிதிலங்கள் காணப்படுவதால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் அறியப்படுகிறது. இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் இக்கடற்கரைப்பகுதிக்கு பயணிகள் ஓய்வெடுக்கவும் உற்சாகப்படுத்திக்கொள்ளவும் ஏராளமாக வருகை தருகின்றனர்.

இந்த கடற்கரையின் முக்கியமான கவர்ச்சி அம்சம் இங்கு அமைந்திருக்கும் ஒரு பழமையான கலங்கரை விளக்கமாகும். 144 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கலங்கரை விளக்கம் 1902ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் இந்த கலங்கரை விளக்கத்தை பார்ப்பதற்கு பிற்பகம் 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

கோட்டைச்சிதிலங்கள் மட்டுமல்லாமல் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சில தேவாலயங்களையும் இந்த கடற்கரைப்பகுதியில் பயணிகள் பார்க்கலாம்.
தனது இயற்கை எழில் மற்றும் வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றால் இந்த தங்கசேரி பீச் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின் தங்கக்கதிர்கள் இந்த கடற்கரையை குளிப்பாட்டும் காட்சியை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கூடுவதால் கடற்கரைச்சூழல் உற்சாகமாக தோற்றமளிக்கிறது. நீச்சல், உலாவுதல் மற்றும் நீர்விளையாட்டுகள் போன்றவற்றுக்கு இந்த தங்கசேரி பீச் ஏற்ற ஸ்தலமாக உள்ளது.

Lip Kee

மஹாத்மா காந்தி பீச்

மஹாத்மா காந்தி பீச்

கொல்லம் பீச் அல்லது மஹாத்மா காந்தி பீச் என்று அழைக்கப்படுகிற இந்த கொல்லம் கடற்கரையானது நீண்டு பரந்திருக்கும் மணற்பரப்புடன் கூடிய கண்களை கொள்ளை கொள்ளும் ஒரு கடற்கரையாகும். கொல்லம் பகுதியின் முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக அறியப்படும் இந்த கடற்கரையானது கொல்லம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கொச்சுபிலாமூடு எனும் இடத்தில் உள்ளது.

கடற்கரைக்கு அருகிலேயே மஹாத்மா காந்தி பார்க் எனப்படும் பூங்கா ஒன்றும் உள்ளது. அமைதியாக நடை பழகவும் இளைப்பாறவும் ஏற்ற இடமாக இது காட்சியளிக்கிறது. சூரிய ஒளியில் தகதகக்கும், அலைப்பரப்பையும், அசைந்தாடும் ஈச்சமரங்களையும், வெண் மணல் கரையையும் பார்த்து ரசிக்கும் விதத்தில் இந்த கடற்கரைப்பகுதியும் அதனோடு இணைந்த பூங்காவும் அமைந்துள்ளன.

இது நீந்திக்குளிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான கடற்கரையாகவும் உள்ளது ஒரு கூடுதல் விசேஷமாகும். ஒரு இனிய மாலை நேரத்தை கொல்லம் கடற்கரையில் கழித்துவிட்டு திரும்பும்போது சுற்றுலாக்களைப்பை எல்லாம் மீறி உடலும் மனமும் புத்துணர்ச்சியடைந்திருப்பதை இங்கு வருகை தரும்போது அனுபவித்து உணர்வீர்கள்.

Navaneeth Kishor

மன்ரோ தீவுப்பகுதி

மன்ரோ தீவுப்பகுதி

மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்திலுள்ளது.

பெயர்க்காரணம்

ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட கர்னல் ஜான் மன்ரோ என்ற அதிகாரியின் பெயரால் இத்தீவுப்பகுதி அழைக்கப்படுகிறது. பலவித கால்வாய்களை உருவாக்கியது மற்றும் நீர்வழிப்பாதைகளை இணைத்து போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கியது போன்ற பல பயனுள்ள மாற்றங்களை அவர் அக்காலத்திலேயே இந்தத் தீவுப்பகுதியில் நிகழ்த்தியுள்ளார்.

சுற்றுலா

இன்று மன்ரோ தீவுப்பகுதியானது அதிகமான சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஒரு ரம்மியமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. மூலசந்தாரா கோயில் மற்றும் கல்லுவிலா கோயில் என்ற இரண்டு கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. 1878ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளியம் துருத் எனும் புராதன தேவாலயமும் தன் அமைதி தவழும் அழகால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இயற்கையின் சிலிர்ப்பு

அஷ்டமுடி நீர்த்தேக்கம் கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் இந்த தீவுப்பகுதி அமைந்துள்ளது. விடுமுறைச்சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இந்த தீவுஸ்தலத்தில் பறவை வேடிக்கை, மீன்படித்தல் மற்றும் இயற்கைக்காட்சி ரசிப்பு போன்ற பொழுது போக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். இவை தவிர தென்னை நார் தொழில் இப்பகுதியில் பிரதானமாக காணப்படுவதால் அது தொடர்பான நார்த்தயாரிப்பு நுணுக்கங்களை நேரில் பார்த்து ரசிக்கலாம்.

Joseph Jayanth

 அஷ்டமுடி உப்பங்கழி

அஷ்டமுடி உப்பங்கழி


சுற்றுலாப்பயணிகள் இயற்கையின் களங்கமடையாத வனப்பை வெகு அருகில் தரிசிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை இந்த அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்குகிறது. ஏராளமான தனியார் ‘ரிசார்ட் விடுமுறை பொழுதுபோக்கு விடுதி'களும் இப்பகுதியில் அமைந்திருப்பதோடு அவை தம் விருந்தினர்களுக்கு ஸ்பா எனப்படும் நீராவிக்குளியல், ஆயுர்வேதிக் மசாஜ் மற்றும் படகுவிருந்து போன்ற பிரத்யேக சொகுசு சேவைகளை அளிக்கின்றன.

படகுவீடு சுற்றுலா

அஷ்டமுடி எனும் நன்னீர் ஏரியின் நீட்சியாக இந்த உப்பங்கழி தோன்றியுள்ளது. இது கேரளாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இந்த ஏரித்தேக்கத்தில் படகு வீடுகளில் பயணம் செய்தபடியே சுற்றிலுமுள்ள தென்னந்தோப்புகளையும், பனந்தோப்புகளையும், பசுமையான இயற்கை வனப்பையும் ஏகாந்தமாக பார்த்து ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.

அப்படி ஒரு இணையிலா அனுபவத்தை தரும் ‘படகுவீடு சுற்றுலா' எனப்படும் படகுப்பயணமே அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்கும் பிரதான விசேஷமாகும். கொல்லம் சுற்றுலா வளர்ச்சிக்குழுமம் இதற்காக பலவகையான வசதிகளுடன் கூடிய வித விதமான படகு வீடுகளை ஏற்பாடு செய்துள்ளது.
பிரமிப்பூட்டும் நவீன வசதிகளுடன் இந்த படகு வீடுகள் உருவாக்கப்பட்டிருப்பது பயணிகளை மலைக்க வைக்கும் ஒரு காட்சியாகும். அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், சமையலறை, வேடிக்கை பார்க்க பலகணி போன்ற அமைப்பு மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை இந்த படகு வீடுகள் கொண்டுள்ளன.

sen

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X