Search
  • Follow NativePlanet
Share
» »1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..!

1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..!

ஒடிசா மன்னரால் தமிழகத்தில் அழிக்கப்பட்ட சிவன் கோவில் ஒன்று பத்தே ஆண்டுகளில் மீண்டும் வளர்ந்து நின்ற ஆச்சரியமிக்க வரலாறும், அதிசயமும் உங்களுக்குத் தெரியுமா ?

நம் இந்தியாவில் மொழி, நிலத்தின் தன்மை, நாகரீகம், செல்வம் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், தங்களது வளத்தை மேம்படுத்திக்கொள்ள பிற நாட்டுடன் போர்தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது நாம் அறிந்த தகவல்தான். அவ்வாறு பண்டைய காலம் தொட்டு நடைபெற்று வந்த போரில் ஒரு நாட்டின் படை வீரர்களையும், மக்களையும் அழிப்பதில் எந்தளவிற்கு பிற நாட்டு மன்னர்கள் கவணம் செலுத்தினார்களோ அந்தளவிற்கு ஒரு நாட்டினுடைய அடையாளமான கோட்டைகளையும், கோவில்களையும் அழிப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டனர். போரின் போது ஒரு ஊரின் மூலஆதாரமாக, அந்த ஊரின் செல்வத்திற்கு வழிவகுப்பதாக கருதப்பட்ட கோவில்கள் பல இந்தியாவில் குறிவைத்து தகர்க்கப்பட்டன. அப்படி, இந்தியாவில் கிழக்குப் பகுதியான கலிங்கம் எனும் சரித்திரக் காலப் பெயர் கொண்ட ஒடிசாவினை ஆட்சி செய்து வந்த மன்னர் தமிழகத்தில் போர்த்தொடுத்து வருகையில் அழிக்கப்பட்ட சிவன் கோவில் ஒன்று மீண்டும் பத்தே ஆண்டுகளில் வளர்ந்து நின்ற ஆச்சரியமிக்க வரலாறும், அதிசயமும் உங்களுக்குத் தெரியுமா ? வாருங்கள், அத்தகைய கோவில் தமிழகத்தில் எங்கே உள்ளது ? அக்கோவிலின் சிறப்பு உள்ளிட்டவற்றை குறித்து தெரிந்து கொள்வோம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரம் மாவட்டம், திருஇடையாறுவில் அமைந்துள்ளது அருள்மிகு மருந்தீசர் திருக்கோவில். விழுப்புரம் மாநகரத்தில் இருந்து கொண்டாங்கி சாலையில் தென்பெண்ணை ஆற்றுப் பாலம் கடந்து, ஏனாதிமங்கலம், திருவெண்ணெய் நல்லூர் வழியாக சுமார் 22.6 கிலோ மீட்டர் பயணித்து இக்கோவிலை அடைய வேண்டும். விழுப்புரம், பெரங்கியூர், அரசூர், திருவெண்ணெய் நல்லூர் வழியாகவும் சுமார் 26 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இத்தத்தை வந்தடையலாம்.

Joshri

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


சிவனின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் இக்கோவில் 224-வது சிவதலமாகும். சிவன் கோவில்களில் பெரும்பாலும், கிழக்கு நோக்கிய திசையில் சிவ பெருமான் அருள்பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் சிவன் மேற்கு நோக்கிய திசையில் உள்ளார். மாசி மாதத்தில் இரண்டு நாட்களில் மட்டும் மாலை நேரத்தில் சுமார் பத்து நிமிடங்கள் வரை சூரியக் கதிர்கள் லிங்கத்தின் மீது படரும். அச்சமயம் சிறப்பு சூரிய பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

MADHURANTHAKAN JAGADEESAN

போர் தொடுத்த ஒடிசா மன்னர்

போர் தொடுத்த ஒடிசா மன்னர்


கி.பி.1471யில் ஒடிசாவை ஆட்சி செய்து வந்த மன்னர் தமிழகத்தில் போர்தொடுத்து வருகையில் இவ்வூரிர் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருந்தீசர் கோவிலின் மீது போர்தொடுத்து அழித்தார். பின், பத்தே ஆண்டுகளில் இப்பகுதியினை ஆட்சிசெய்து வந்த சாளுவ நரசிம்ம மன்னர் மீண்டும் அக்கோவிலை மாபெரும் வலிமைமிக்கதாக எழுப்பினார். இதற்கான சான்றுகள் இத்தலத்தில் கல்வெட்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

V&A Museum

திருவிழா

திருவிழா

மருந்தீசர் கோவிலில் மைதாமத்தில் ஆற்றுத் திருவிழா என்னும் மாபெரும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இத்திருவிழாக் காலத்தில் விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரலாகப் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் உள்ளிட்டவற்றை செலுத்துவர்.

Ganesan

நடைதிறப்பு

நடைதிறப்பு


திருக்கோவிலூர் அருள்மிகு மருந்தீசர் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

வழிபாடு

வழிபாடு


திருமண வயது கடந்தும் தோஷம் காரணமாக திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் இக்கோவிலில் உள்ள சுவாமிக்கும், ஞாணாம்பிகை அம்மனுக்கும் திருமண மாலை அணிவித்து அபிஷேகம் செய்து பின், அந்த மாலையைப் பிரசாதமாக பெற்றுச் சென்றால் விரைவில் சுபகாரியம் அரங்கேறும் என்பது தொன்நம்பிக்கை.

Alain6963

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கும், சன்னதியில் வீற்றுள்ள ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி அம்மையாருக்கும் புத்தாடைகள் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

Peenumx

தலஅமைப்பு

தலஅமைப்பு

பெரும்பாலான சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் அருகில் முருக பெருமான் அருள்பாலிப்பார். ஆனால், மருந்தீசர் தலத்தில் மூலவர் சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் உள்ள லிங்கம் அகத்தியரால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அகத்தியருக்கு என தனி சிலையும் இச்சன்னதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ssriram mt

புராணக் கதை

புராணக் கதை


கயிலையில் உமாதேவியுடன் சிவன் உரையாடிக்கொண்டிருந்த போது சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் முனிவரை பூமியில் அவதரிக்குமாறு சபித்தார். இதனால் வேதனையுற்ற முனிவர் தனது சாபத்திற்கு விமோட்சனம் வேண்டிய போது, பூமியில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து பெண்ணை நதிக்கரை, இடையாற்றில் அமைந்துள்ள சிவதலத்திற்கு சென்று தவமிருக்க அறிவுரை வழங்கினார். முனிவரும் தவமிருந்து தனது சாபத்தில் இருந்து விடுபட்டார்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


விழுப்புரத்தில் இருந்து கொண்டாங்கி சாலையில் திருவெண்ணெய் நல்லூர் வழியாக சுமார் 22.6 கிலோ மீட்டர் தொலைவிலும், அரசூர் வழியாக சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அருள்மிகு மருந்தீசர் ஆலயம். திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகள், ஆற்காடு செல்லும் சில பேருந்துகள் என இத்தலத்தை சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X