Search
  • Follow NativePlanet
Share
» »கஷ்மீர்ல இந்த இடம் ஒரு சொர்க்கம்!! அது என்ன இடம்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

கஷ்மீர்ல இந்த இடம் ஒரு சொர்க்கம்!! அது என்ன இடம்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

By Balakarthik Balasubramanian

சொர்க்கமே என்றாலும், அது இந்த இடத்தை போல வருமா? என்னும் கூக்குரலானது நாளாப் பக்கமும் முழங்குகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னராக, பெர்சிய கவிஞர் ஒருவரால் புகழப் பட்ட வார்த்தையே இதுவாகும். காஷ்மீருக்கு அழகினை தேடி தரும் ஒரு இடமாக இது காணப்பட, இங்கே வரும் நாம்... காலம் மறந்து கால்போன போக்கிலே, அழகால் சுண்டி இழுக்கப்படுகிறோம் என்பதே உண்மை. இங்கே வரும் பயணிகளின் மனதினை இவ்விடங்கள் திருடி செல்ல, மீண்டும் நம்மை வரவழைக்ககூடிய எண்ணத்தையும் நம்மிடம் விதைக்கிறது. 6640 அடி உயரத்தில் காணப்படும் இந்த பீடபூமியானது இமயமலையின் சிவலிக் பட்டையுடனும் தாங்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. காஷ்மீரின் அழகினை உணர்த்தும் இந்த பத்னி உச்சத்திற்கு நாம் வருவதன் மூலம் கண் கொள்ளா காட்சிகளால் மனதில் ஆனந்தத்தை விதைத்து மனமகிழலாம்.

ஜம்மு & காஷ்மீரின், உதம்பூர் மாவட்டத்தில் காணப்படும் இவ்விடம், பசுமையான பைன் மரக்காடுகளையும், விதவிதமான ஆல்பைன் காடுகளையும் கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொண்டு விளங்குகிறது. அழகிய சினாப் நதிக்கு அருகாமையில் இவ்விடம் காணப்பட, வழியெங்கும் இயற்கை அழகை கொண்டு மனதில் அள்ளி தெளிக்கிறது. ஆராயப்படாத மலை பகுதியாய் இது காணப்பட, இயற்கையுடன் தன் நேரத்தை செலவிட்டு மனம் நெ(ம)கிழ இந்த இடமானது நம்முடன் ஒட்டி உறவாடி இயல்பான இயற்கை பாசத்தை தருகிறது.

வருடமுழுவதும் நாம் பார்க்க உகந்த இடமாக பத்னி உச்சம் காணப்பட, ஒவ்வொரு கால நிலையின் போதும் தனித்தன்மை மிக்க ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் இவ்விடம் நமக்கு அளிக்கிறது. உயரமும், நிலப்பரப்புகளையும் கொண்ட இந்த இடத்தை கோடைக்காலத்தில் நாம் பார்ப்பதன் மூலம் மனதில் இனிமையை விதைக்கிறது.

குளிர்காலத்தின் பனிப்பொழிவானது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. மேலும், மேகங்கள் மற்றும் பனிகளால் மூடிய காட்சியும், பருவ மழைக்காலத்தில் தந்திரமான தோற்றத்தை தந்து நம்மை அழைக்கிறது. எது எப்படியாக இருப்பினும், இந்த அழகிய மலை பிரதேசத்திற்கு மக்கள் கூட்டமானது எந்நேரமும் முண்டியடித்துகொண்டு ஆவலுடன் பார்த்து செல்கிறது.

பத்னி உச்சத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும், செய்ய வேண்டிய செயல்களும் நிறைய இருக்க, அவை என்ன என்பதையும் நாம் பார்க்கலாமே.

 நாதா உச்சம்:

நாதா உச்சம்:


7000 அடி உயரத்தில் காணப்படும் இந்த நாதா உச்சம், பத்னி உச்சத்தில் காணப்படும் உயரிய புள்ளியாகும். இந்த உயரத்திலிருந்து நாம் பார்க்க, சிவலிக் மலையின் பனி மூடிய காட்சிகளும், கிஷ்ட்வார் தொடர்ச்சிகளும் நம்மை மதி மயக்கும் அழகினால் உறைய வைக்கிறது. மேலும், பள்ளத்தாக்குகளும் சூழ, பைன் மரங்கள் நிறைந்த காடுகளெனவும் அழகால் நம்மை வெகுவாக கவர்கிறது. குளிர்காலத்தின்போது, நாதா உச்சத்தின் உச்சியிலிருந்து நாம் காணும் காட்சிகளான பரந்த பள்ளத்தாக்குகளும், மலை மிளிர்வுமென பனி போர்வையால் போர்த்தப்பட்டு அழகுடன் காணப்படுகிறது.

Hiteshpaarth

 பாராகிளைடிங்:

பாராகிளைடிங்:


பள்ளத்தாக்குகள் திறந்து காணப்பட, பரந்த நிலப்பரப்புகளும், பரந்த மனப்பான்மையும் கொண்டதோர் இடமாக பத்னி உச்சம் காணப்படுவதோடு, இங்கே சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளும் நம்மை வரவேற்கிறது. இந்த நாதா உச்சத்தின் உச்ச புள்ளியில் பாராகிளைடிங் பயணம் நம் மனதில் பரவசமூட்ட, பசுமையான, வெள்ளை நிறப் பனிகளில் (குளிர்காலத்தில்) நாம் சறுக்கி, மலையின் குளிர்ச்சி மிகுந்த காற்றினாலும் புத்துணர்ச்சி கொண்டு, புல்வெளிகளின் வருடலால் மனம் நெகிழ்கிறோம்.

Journojp

 மலை ஏறுதல்:

மலை ஏறுதல்:


இமயமலை தொடர்ச்சி மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் எண்ணற்ற சாகசங்கள் நிறைந்திருக்க, பயணம் மற்றும் மலை ஏறும் ஆர்வலர்களின் ஆர்வத்திற்கானதொரு தீணியாக, த்ரில்லிங்க் அனுபவங்களுடன் இமயமலையின் உயரிய நிலங்களானது நம்மை வரவேற்கிறது. சுத் மஹாதேவ் மற்றும் சிவா கார்ஹ் ஆகிய பிரசித்திபெற்ற இடங்களில் நம் பயணமானது அமைய, அதன் கவர்ச்சியால் மனதினை மகிழ்வித்து, புத்துணர்ச்சி மிக்கதோர் அனுபவத்தையும் நமக்கு அது தருகிறது.

Shahbazaslam1

 மாதா உச்சம்:

மாதா உச்சம்:


பத்னி உச்சத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்பட, பனிச்சறுக்கு நிலங்களுக்கு பிரசித்தி பெற்று இவ்விடம் விளங்குகிறது. இந்த பயணமானது எளிதாக நமக்கிருக்க, இதன் உயரமானது சுமார் 2000 மீட்டர் காணப்படுகிறது. சரிவர மலைப்பகுதியின் சாய்வும், பனியால் அடர்த்தி மிகுதியும் குளிர்காலத்தில் காணப்பட, இதனை தழுவி பனிச்சறுக்குகளும் உள்ளது. இந்த பகுதியில் மூன்று வகையான தூய நீருற்றுகள் காணப்பட, அவற்றால் மருத்துவ பயன்களும் நமக்கு உண்டு என்கிறது இந்த மாதா உச்சம்.

Michael Petersen

 சனசர் ஏரி:

சனசர் ஏரி:


பத்னி உச்சத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சனசர் ஏரியானது காணப்பட, யாரும் கண்டிராத ஒரு இடமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் தொலைதூரத்தில் இவ்விடம் காணப்பட, சுமார் 2050மீட்டர் உயரத்தில் இவ்விடம் அமைந்திருக்கிறது. சனா மற்றும் சர் எனப்படும் இரண்டு அழகிய கிராமங்களை இப்பெயர் குறிக்க, மலைகளும், சூழ்ந்திருக்கும் நிலப்பகுதியும் நெகிழ்ச்சியான அழகிய பதிவை மனதில் தேக்குகிறது. பாறை ஏறுதல், பாராசைலிங், பாராகிளைடிங், வெப்ப காற்று பலூன் சவாரிகள் என பல சாகச விளையாட்டுகள் நிறைந்த ஓர் இடமாகவும் இந்த சனசர் ஏரி விளங்குகிறது.

Hiteshpaarth

 நாக் ஆலயம்:

நாக் ஆலயம்:

பத்னி உச்சத்தின் பழம்பெரும் ஆலயமாக இதனை கருதப்பட, 600 வருடங்களுக்கு முன்னால் தோன்றியதாகவும் இந்த ‘நாக்' அல்லது ‘நாக' ஆலயம் சொல்லப்படுகிறது. புராணத்தின்படி, சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் இங்கே நிகழ்ந்ததாக சொல்லப்பட, இந்த மலையின் உச்சத்தில் நாம் ஏறுவதற்கு மிகவும் இனிமையாக இருக்க...இதன் உச்சத்தில், முடிவில் அழகிய காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Ayush901

 பத்னி உச்சத்தை நாம் அடைவது எப்படி:

பத்னி உச்சத்தை நாம் அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக:

உதம்பூர் வழியாக பத்னி உச்சத்தை நாம் அடைய அருகில் காணப்படுமோர் விமான நிலையமாக ஜம்மு விமான நிலையம் காணப்படுகிறது. தோராயமாக 110 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஜம்மு விமான நிலையம் காணப்பட, இங்கிருந்து பத்னி உச்சத்தை நாம் அடைய சுமார் 3 லிருந்து 4 மணி நேரம் வரை நமக்கு ஆகிறது. மற்றுமோர் மாற்று வழியாக ஸ்ரீ நகர் சர்வதேச விமான நிலையம் காணப்பட, 188 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையமானது காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக:

சாலையை தேர்ந்தெடுத்து நீங்கள் செல்வீர்களென்றால், பேருந்து வசதியானது இயக்கப்படுகிறது. தில்லி, சண்டிகர், என பல இடங்களிலிருந்து வாடகை காரின் மூலமாகவோ...அல்லது சொந்த கார் மூலமாகவோ நாம் செல்லலாம். இந்த பயணத்தில் நாம் கார் ஓட்டி செல்வது மிகவும் இனிமையாகவும், நாட்டின் பல அழகிய இடங்களையும் கடந்து செல்வதால், பயணத்தின் நேரமும் பொன்னானதாக அமைகிறது.

தண்டவாள மார்க்கமாக:

47 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் உதம்பூர் இரயில் நிலையம் தான் பத்னி உச்சத்தின் அருகில் அமைந்திருக்கும் ஒரு இரயில் நிலையமாகும். இங்கிருந்து கார்கள் மூலமாகவும் மிகவும் சவுகரியமாக பத்னி உச்சத்தை நாம் அடையலாம்.

Saroj Kumar

Read more about: travel kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X