Search
  • Follow NativePlanet
Share
» »அஸ்வினி, ஆயிலியம், அனுஷம்..! டாப்புக்கு கொண்டுசெல்லும் அந்த மூன்று கோவில்கள்..!

அஸ்வினி, ஆயிலியம், அனுஷம்..! டாப்புக்கு கொண்டுசெல்லும் அந்த மூன்று கோவில்கள்..!

அஸ்வினி, ஆயிலியம், அனுஷம் உள்ளிட்ட மூன்று நட்சத்திரம் உடையோர் எந்தக் கோவிலுக்கு சென்றால் தோஷங்கள் நீங்கி, செல்வங்கள் பெருகம் என தெரியுமா ?

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும், அவரவர் கர்ம வினையே ஜென்ம நட்சத்திரமாகவும், லக்கினமாகவும் பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்களில் குடியேறி பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், வாழுப்போகும் வாழ்க்கையையும், அவர் வாழ்வில் நடக்கும் நிகர்வுகளையும், செல்வச் செழிப்பையும், பசிப் பட்டினியையும் என ஒட்டுமொத்த வாழ்நாட்களை தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது வாழ்நாளில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகிறது. இதில், சரியான நேரத்தில் சரியான கோவிலுக்கு சென்று வர இதுவரை நினைத்துக்கூட பார்க்காத வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாற்றியமைக்கும். இதுநாள் வரை இருந்துவந்த தடை நீங்கி, காணாத அதிர்ஸ்ட்ட வாழ்க்கை வந்தடையும். அப்படி, அஸ்வினி, ஆயிலியம், அனுஷம் உள்ளிட்ட மூன்று நட்சத்திரம் உடையோர் எந்தக் கோவிலுக்கு சென்றுவர செல்வம் மிகும் என பார்க்கலாம்.

பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில், அஸ்வினி

பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில், அஸ்வினி


இருபத்தியேழு நட்சத்திரங்களின் வரிசையில் முதலிடத்தை பெறுவது அஸ்வினி நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். சரியாக, 2018 ஏப்ரல் 30ம் தேதி துவங்கி அக்டோபர் 27ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால் சொத்துப் பிரச்சனைகள், இல்லற வாழ்வில் மனக் கசப்பு உள்ளிட்டவை வந்து விலகும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று தொய்வு ஏற்படும். இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தொழில் விருத்தியடையவும் திருவாரூரில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்தது.

கோவில் சிறப்பு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு அம்சமாக இருப்பது சிவபெருமாளின் கஜசம்ஷார முத்திரையாகும். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் விலகு முன்னேற்றம் காணலாம். அதிலும் குறிப்பாக, அஸ்வினி நட்சத்திக் உடையோர் அமாவாசை, சனிக்கிழமைகளில் இத்தலத்திற்குச் சென்று இங்குள்ள மரகத லிங்கத்தை வழிபட்டு வருவதன் மூலம் இந்த வருடமே எல்லா வித முன்னத்தையும் கண்கூடாக காணலாம். அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச் சக்திகள் அதிகள் உள்ளது. இந்த நட்சத்திரத் தேவதைகள் தினமும் வழிபாடு செய்யக்கூடிய தலமாக பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு பிறவியிலேயே நோய் எதிர்ப்புத் தன்மை கூடுதலாக இருந்தாலும் தாங்கள் பிறந்த நாளன்று இக்கோவிலுக்குச் சென்று சனீஸ்வர யாகம் செய்து, செவ்வாய் பகவானை வழிபட்டு வந்தால் வாழ்நாட்கள் மேலும் செழிப்படையும் என்பது தொன்நம்பிக்கை.

திருவிழா

சிவபெருமானுக்கு உகந்த மாதமான சித்திரையில் இக்கோவிலில் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, மகா சிவராத்திரி, திருவாதிரை உள்ளிட்ட சிறப்பு விழாக் காலத்திலும் மூலவருக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுகிறது.

எப்போது, எப்படிச் செல்லலாம் ?

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். திருவாரூரில் இருந்து புலிவலம், திருக்கரவாசல், கட்சனம் சாலையில் சுமார் 31 கிலோ மீட்டர் பயணித்தால் திருத்துறைப்பூண்டியை அடைந்து விடலாம்.

Raavanan

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர், ஆயிலியம்

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர், ஆயிலியம்


ஆயிலியம் நட்சத்திரத்தில் இந்த மாதம் இறுதி முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் நீடிப்பதால் தொடர் சங்கடங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிகழலாம். மேலும், வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், எதிலும் சில பிரச்சனைகள் நீடித்துக் கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட திருந்துதேவன்குடியில் அமைந்துள்ள கற்கடேஸ்வரரை வழிபட்டு வருவது சுக பாக்கியத்தை உண்டாக்கும். இத்தலத்தின் மூலம் மூதாதையர் வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த தடை விலகும். வாங்கிய கடன்களை தீர்த்து, மேலும் வளமான வரவு உங்களுக்கு கிடைக்கும்.

கோவில் சிறப்பு

சிவபெருமானைப் போற்றும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 42-வது தேவாரத் தலமாகும். மற்ற கோவில்களில் ஒரு அம்பாள் மட்டுமே தரிசனம் தருவாள். ஆனால், சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் இச்சிவதலத்தில் அம்பாளுக்கு அடுத்தடுத்து சின்னதிகள் உள்ளன. மூலவரின் திருவுருவத்தில் நண்டு ஐக்கியமானதற்கான துளையும், இந்திரன் வெட்டியதால் ஏற்பட்ட தடையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புனர்பூசம், ஆயிலியம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக கற்கடேஸ்வரர் திருத்தலம் உள்ளது.

திருவிழா

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் சிவராத்திரி, திருக்கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜையும், வருடத்தின் ஒரு முறை இருவார காலத்திற்கு மாபெரும் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இக்காலத்தில் சுற்றுவட்டார ஊர் மக்கள் திறண்டு பல்வேறு வழிபாட்டில் டுபடுவது வழக்கம்.

எப்போது, எப்படிச் செல்வது ?

அருள்மிகு கற்கடேஸ்வரர் கோவில் நடை காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தஞ்சாவூரில் இருந்து சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடைமருதூருக்கு முன்னதாக அமைந்துள்ளது கற்கடேஸ்வரர் கோவில். தேசிய நெடுஞ்சாலை 36-யில் அய்யம்பேட்டை, பாபநாசம், பெருமண்டியைக் கடந்தால் திருவிசநல்லூர் அருகேயுள்ள இக்கோவிலை அடைந்து விடலாம். கும்பகோனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகளும், தனியார் வாடக்க் கார் வசதிகளும் எளிய முறையில் உள்ளன.

SriniG

திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர், அனுஷம்

திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர், அனுஷம்


அனுஷம் நட்சத்திரம் கொண்ட விருச்சகம் ராசியினருக்கு இந்த ஆண்டு இல்லற வாழ்வில் நல்ல மாற்றங்கள் இல்லாவிட்டாலும், தொழில், பங்குச் சந்தை, உடல் ஆரோக்கியம், மற்றும் உறவிணர்கள் வழியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். 12-ஆம் இடத்தில் குருபகவானும், 9யில் ராகுவும் உள்ளதால் எதிரிகளின் சகுனப் பார்வை தடங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அனுஷம் நட்சத்திரம் உடையோர் தீங்கில் இருந்து விடுபடவும் தோஷங்கள் நீங்கி, இந்த வருட பலனை முழுமையாக பெற்று, இல்லறம் மற்றும் செல்வத்தில் செழித்து இருக்க திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரரை வழிபடுவது சிறந்தது.

கோவில் சிறப்பு

திரிநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோவிலின் ராஜ கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. இத்தலத்தில் காட்சியருளும் தட்சிணாமூர்த்தியின் பாத அடியில் இருக்கும் முயலகன் இடது புறம் நோக்கியவாரு கைல் நாகத்துடன் இருக்கிறான். பிரகாரத்தில் உள்ள செல்வ விநாயகருக்கு அனுஷம் நட்சத்திரத்தன்று விஷேசப் பூஜைகள் செய்யப்படுகின்றன. கடன் தொல்லை, நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் செல்வ கணபதியிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பரிகார பூஜைகளும் இத்தலத்தில் செய்யப்படுகிறது.

திருவிழா

இக்கோவிலில் ஆனிமா ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, கார்த்திகை உள்ளிட் தினங்களில் விழா நடைபெறுகிறது. மகா விசராத்திரியன்று இத்தலத்தில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம் நடத்தப்படுகிறது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதை வாக்கமாகக் கொண்டுள்ளனர்.

எப்படிச் செல்வது ?

நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் வழியாக சுமார் 55.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மலாலட்சுமீஸ்வரர் கோவில். ருமலைராயன்பட்டிணம், காரைக்கால், நல்லடை, செம்பனார்க்கோவில் வழியாக இக்கோவிலை அடையலாம். அல்லது, நாகப்பட்டினம், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகவும் சுமார் 66 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம். காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இத்தலத்தின் நடை திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு சென்றால் மூலவர் பூஜையைக் காணலாம்.

பா.ஜம்புலிங்கம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X