» »தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க

தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க

Written By: Udhaya

தமிழ் தொன்மை வாய்ந்த மொழி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு தொன்மை என்பது பலர் பலவிதமாக கூறுகின்றனர். உண்மையில் எவ்வளவு பழமை வாய்ந்தது நம் மொழி என்பது தெரியுமா? இதை கிளிக் செய்யுங்கள்

அதை தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்த கல்வெட்டுக்கள் இருக்கும் இடத்துக்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.

2020ல் என்னவாகும் உலகம் அதிர்ச்சியூட்டிய சித்தர் பெருமகன்

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

உலக கட்டிடக்கலைகே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

இந்த கல்வெட்டுக்கள் எங்குள்ளது?


தமிழின் உண்மையான வயதை கண்டறிய உதவும் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

Pc: Thamizhpparithi Maari

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில், 20 கிமீ தொலைவில் இந்த சமணப்படுக்கைகளும் கல்வெட்டுக்களும் அமைந்து உள்ளன.

Pc: Thamizhpparithi Maari

சிறப்பு என்ன?

சிறப்பு என்ன?

சித்தன்னவாசல் பற்றி ஊரே அறியும். அங்குள்ள கல்வெட்டுக்களில் தான் தமிழின் தொன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

அன்னவாசல் சமணர் படுக்கை

அன்னவாசல் சமணர் படுக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் என்னும் சிற்றூருக்கு அருகில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணர் படுக்கைகள், கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.

ஏழடிப்பட்டம் என்பது என்ன?

ஏழடிப்பட்டம் என்பது என்ன?

குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். இங்குதான் சமண முனிவர்கள் தங்கி இருந்தார்கள். இக்குகைக்குச் செல்ல மேற்குப்பகுதியில் இருந்து குன்றின் மீதேறி குகை வாயிலின் ஏழு படிக்கட்டுகளைக்கடந்து குகையின் உள்ளே செல்வதால் இவ்விடம் ‘ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்பெறுகின்றது. இந்த இயற்கைக்குகையில் பளிங்கினை ஒத்த வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் ஆன 17 எண்ணிக்கையிலான கற்படுக்கைகள் இங்கு காணப்பெறுகின்றன.

தமிழ் பிராமி எழுத்து

தமிழ் பிராமி எழுத்து

இங்குள்ள படுக்கைகளில் பழமையானதும் மிகப்பெரியதுமான படுக்கையில், கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்துக்களால் உருவாக்கப்பெற்றுள்ளது. கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கல்வெட்டு "யோமிநாட்டுக் குமட்டூர்" பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம் என்று உரைக்கிறது. கிபி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க்கல்வெட்டு ஒன்றில் கடுந்தவம் புரிந்த சமணத்துறவிகளைப்பற்றி அறியலாம்.

தமிழின் வயது என்ன?

இந்த கல்வெட்டுக்களில் தமிழின் தொன்மை பற்றி அறிய முடிந்தாலும், தமிழ் அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய மொழி எனவும், உலகின் முதன்மை மொழியான தமிழின் உண்மையான வயது யாராலும் கணிக்கமுடியாத அளவு இருக்கும் என்று ராபர்ட் கால்ட்வெல் போன்ற அறிஞர்கள் முன்பே கூறியுள்ளனர்.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...