Search
  • Follow NativePlanet
Share
» »சனி பகவானின் பிறந்த நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு என்ன கிடைக்கப் போகுது..!!

சனி பகவானின் பிறந்த நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு என்ன கிடைக்கப் போகுது..!!

கரிய நிறம் கொண்ட கடவுள், காசிப கோத்திரத்தில் பிறந்தவர், ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுளின் அதிபதி என்ற அதிமுக்கிய பொருப்பில் இருப்பவர், சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் இத்தனை மகத்துவத்தைக் கொண்டுள்ள சனி பகவானின் கிரகங்களில் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது அடுத்து வரும் வாழ்நாளில் சீரிய முன்னேற்றம் காணுவோம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார். இந்திய ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு பயணிப்பதை சனிப் பெயர்ச்சி என்கிறோம். இது, ஏழரைச் சனி, மங்கு சனி, தங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என அதன் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ மகிமையுடைய சனி பகவானின் பிறந்த நாளான இன்று எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும், சனி அவதரித்த இந்நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு செல்லாம் ஜெயந்தி உண்டாகும் என பார்க்கலாம் வாங்க.

சனிபகவான் திருத்தலங்கள்

சனிபகவான் திருத்தலங்கள்


நவக்கிரகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளவர் சனிபகவான். இவருக்கான வழிபாட்டுத் தலங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்தாலும், வழிபாடுகள் ஏராளமானதாகும். விஸ்வரூப தரிசனம் கொண்ட திருவுருவம் கொண்டு தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்,
குச்சனூர் சனீஸ்வரன் கோவில், லோக நாயக சனீசுவரன் கோவில், விழுப்புரம் அருள்மிகு சனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசிதிபெற்ற சில சனீஸ்வர பகவான் கோவில்களுக்கு பயணம் செய்வோம்.

Rsmn

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்


காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் கோவில். இத்திருக்கோவில் சிவபெருமாளுக்கு உகந்ததாக இருந்தாலும், இங்கு தனியே சன்னதியில் அருள்பாலிக்கும் சனிபகவான் மிகவும் பிரசிதிபெற்றதாக உள்ளது. இத்தலத்தில் சனியை தோற்றுவித்த விநாயகர் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் காட்சியளிக்கிறார். சனித் தொல்லை நீங்க, முன்ஜென்ம சாபம் ஒழிய இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்திலும், சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்வது சிறப்பாகும்.

VasuVR

சனீஸ்வர வழிபாடு

சனீஸ்வர வழிபாடு


இத்தலத்தில் உள்ள சனீஷ்வரரை வழிவடும் முன் நல தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நளவிநாயகரை முதலில் வழிபட வேண்டும். பின், கோவில் கோபுர வாசல் வணங்கி, சுவாமி கன்னதிக்குள் உள்ள மூலவர் தர்ப்பாரண்யேசுவரரை வேண்டிவிட்டு, அருகில் உள்ள மரகதலிங்கத்தை வணங்க வேண்டும். தொடர்ந்து, தலத்தில் உள்ள பிற கடவுள்களை வழிபட்ட பின்பே இறுதியாக சனீஸ்வரரை வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சனியின் விமோசனம் கிடைக்கும என்பது இத்தலத்தில் நிலவும் தொன்நம்பிக்கை.

Yesmkr

தலவரலாறு

தலவரலாறு


இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் மூலவருக்கு நேர் எதிரே இன்றி கொஞ்சம் விலகி இருப்பதைக் காண முடியும். இதற்குக் காரணம், இடையன் ஒருவன் அரசர் ஆணைப்படி கோவிலுக்கு பால் கொண்டுவந்தான். ஆனால், கோவில் பணியாளர் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரசரிடம் பொய்க் கணக்கு காட்டினான். இதனால் கோபம் கொண்டார் அரசர். அச்சமயம், இறைவன், இடையனைக் காக்கவும், பணியாளரைத் தண்டிக்கவும் முடிவுசெய்து தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோவிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கோவில் பணியாளனின் தலையை துண்டித்தது. இடையன் காப்பாற்றப்பட்டு இறைவன் காட்சியருளினார்.

Bikashrd

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் நடை காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும திறக்கப்பட்டிருக்கும். காரைக்காலில் இருந்து கும்பகோணம் - காரைக்கால் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5.7 கிலோ மீட்டர் பயணித்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.

குச்சனூர் சனீஸ்வரன் கோவில்

குச்சனூர் சனீஸ்வரன் கோவில்


மாநிலத்தின் பிற கோவில்களில் சனிபகவான் நவக்கிரகமாக காட்சியளித்தாலும், திருநள்ளாறுக்கு அடுத்து தனி திருவுருவமாக அருள்பாலிப்பது குச்னூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் தான். இத்தலத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது அரூபி வடிவ லிங்கம் பூமியில் இருந்து வளர்ந்துகொண்டே இருப்பது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே அன்றாட வழிபாட்டுக்குப் பிறகு லிங்கத்திற்கு மஞ்சள் காப்பு பூசப்படுகிறது.

Amitraina

வழிபாடு

வழிபாடு


சனி தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் பகவானை வேண்டிச் சென்றால் சோதனைகள் நீங்கி நல்ல காரியம் அரங்கேறும். மேலும், தொழில் முனைவோர், வியாபார விருத்தி, இல்லற சுபம் உள்ளிட்டவற்றிற்காகவும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் சனி பகவானுக்கு எள் விளக்கு வைத்தும், காக்கைக்கு உணவிட்டும் வழிபட்டுச் செல்வர்.

Suraj Belbase

தலசிறப்பு

தலசிறப்பு


இத்தலத்தின் வரலாறு சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து விலகியதில் இருந்து துவங்குகிறது. நாட்டில் சனிபகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஒரே தலம் இதுவாகும். சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதன் மூலம் மோட்சம் பெறுகின்றனர்.

saneeswaratemple

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தேனியில் இருந்து கொல்லம் - தேனி தேசிய நெடுஞ்சாலை வழியாக கோட்டூர் நோக்கி செல்ல வேண்டும். கோட்டூரில் இருந்து காளியம்மன் கோவில் தெரு வழியாக குச்சனூர் சாலையை அடையலாம். இவ்வாறு தேனியில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை எளிதில் அடையலாம். நகரத்தில் இருந்து இக்கோவிலை அடைய தனியார் வாகன வசதிகள் உள்ளது.

லோக நாயக சனீசுவரன் கோவில்

லோக நாயக சனீசுவரன் கோவில்


லோக நாயக சனீசுவரன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோவிலாகும். இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன. இத்திருவுருவ சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டதாலேயே இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்ற பெயர் வரக் காரணமாகும். ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது.

ThangamuthuRaja

வழிபாடு

வழிபாடு


வாரம் முழுக்க அலங்காரங்களுடன் மூலவருக்கு வழிபாடு நடத்தப்பட்டாலும், சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று உச்சிப் பொழுதில் சிறப்பு அபிசேகம், ஆராத்தி, அர்சனை நடத்தப்படுகிறது. மேலும், பக்தர்கள் தாங்களாகவே அபிசேகமும், ஆராத்தியும் செய்யும் வகையில் திறந்த வெளியிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Arunankapilan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் இருந்து புலியகுளம் செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. புலியகுளம் மாரியம்மன் கோவில் அருகிலேயே இந்த சனிபகவான் கோவிலும் உள்ளதால் எளிதில் இத்தலத்தை அடையலாம்.

விழுப்புரம் அருள்மிகு சனீஸ்வரர் கோவில்

விழுப்புரம் அருள்மிகு சனீஸ்வரர் கோவில்


விழுப்புரம் மாவட்டம், கல்பட்டுவில் பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்டது இந்த சனீஸ்வரர் கோவில். சனீஸ்வரன் சன்னதி முன்பு தியான நிலையில் அமர்ந்து தியாணம் செய்து வர வேண்டிவை கிடைக்கும என்பது தொன்நம்பிக்கை. நுழைவிடத்தில் காணப்படும் கணபதி திருவுருவம் இங்குள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆட்சிசெய்து வந்த தேசிங்குராஜா வழிபட்ட கணபதியாக இச்சிலை கருதப்படுகிறது. வலம்புரி விநாயகரும் இத்திருத்தலத்தில் காணப்படுகிறார். இத்திருத்தலத்தில் உள்ள சனிபகவானின் உருவச்சிலையை வைத்தே கோவிலின் வரலாறு அறியப்படுகிறது. சனீஸ்வரருக்கு ஒரு காலில் குறியுள்ளது நாம் அறிந்ததே. இதற்குக் காரணம், ராவணன் சாகா வரம் வேண்டி பிறந்த குழந்தையை சனிபகவான் பார்த்து விடுகிறார். இதனால் கோபமடைந்த ராவணன் சனியின் சாலை உடைத்துவிட்டார். அதன்படி, சனீஸ்வரரின் ஒரு கால் அவரது வாகனமன காகத்தில் இருப்பது போல இத்தரலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Yogesa

வழிபாடு

வழிபாடு


இத்தலத்தில் உள்ள சனீஸ்வரரையும், துர்க்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சூரிய காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சனிபகவானுக்கு சமர்ப்பித்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி உள்ளிட்ட 12 விதமான சனி தோசங்கள் விட்டு விலகிச் செல்லும் என்பது தொன்நம்பிக்கை.

த*உழவன்

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதுல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். மேலும், வாரந்தோறும் சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்றைய தினம் எள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டால் அனுகூலம் கூடும். சென்னையில் இருந்து சுமார் 167 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழுப்புரம். குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் சென்னையில் இருத்து விழுப்புரத்திற்கு உள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இம்மாவட்டம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புர ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாடகைக் கார்கள் மூலம் கோவிலை அடையலாம். திண்டிவணத்தில் இருந்தும், திருவண்ணாமலையில் இருந்தும் கல்பட்டை அடைய சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால் போதும். தேசிய நெடுஞ்சாலை மூலம் எளிதில் கல்பட்டு சனீஸ்வரர் கோவிலை அடைந்துவிடலாம்.

எந்த ராசிக்காரர்களுக்கு பலன்

எந்த ராசிக்காரர்களுக்கு பலன்


சனிபகவானின் பிறந்த நாளான இன்று மகரம், கும்பம் ராசியுடையோர் பல்வேறு வகையில் பயண்களைப் பெறவுள்ளனர். இன்னும் தெளிவாகச் சொன்னால், இன்று முதல் வளர்ச்சியுலும், செல்வத்திலும், சொத்திலும், புகழிலும் என உங்கள் காட்டில் மழைதான். உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். இல்லறத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். இன்றைய தினம், சனிபகவான் கோவில்களில் சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடக்கும். பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார். இன்று மகரமும், கும்பமும் இந்த இடமாற்றத்தால் வாழ்வில் அடுத்தபடியை நோக்கி நகர்வீர்கள். சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், சனிபகவானின் தலத்திற்குச் சென்று மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

PJeganathan

இந்தியாவில் பிரசிதிபெற்ற சனிபகவான் கோவில்கள்

இந்தியாவில் பிரசிதிபெற்ற சனிபகவான் கோவில்கள்


தெலுங்கானா மாவட்டம் எர்தானூர் சனீஸ்வர கோவிலில் உள்ள 20 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவான் சிலை பிரசிதிபெற்ற சனி கோவில் ஆகும். இதனைத் தவிர்த்து பழனி முருகனைப் போலவே ஆண்டிக் கோலத்தில் சனிபகவான் காட்சியளிக்கும் மொரினா சனீஸ்வரா கோவில், தானே திட்வாலா சனீஸ்வரன் கோவில், தில்லியில் உள்ள சனி தாம் ஆலயம், ஆந்திராவில் கோதாவரியில் அமைந்துள்ள மண்டேஷ்வர சுவாமி கோவில், மும்பை
தியோனர் ஆலயம், இலங்கை திருகோணமலை சனீசுவரன் ஆலயம் உள்ளிட்டவை சிறப்புமிக்க சனிபகவான் கோவில்கள் ஆகும். இதில், இலங்கையிலேயே திருக்கோண மலையில் மட்டுமே சனிபகவானுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jee22

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X