Search
  • Follow NativePlanet
Share
» »ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு ?

ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு ?

லிங்கமாக அவதரிக்கும் முன் ஈசன் தான் அணிந்திருந்த காலணியை எங்கே கழற்றி வைத்தார், அதனை வழிபடுவதன் மூலம் என்னவெல்லாம் சிறப்பு என தெரியுமா ?

தென்னாருடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று திருவாசகம் இறைவனைப் போற்றுகிறது. பூவுலக தேவர்களுக்கம், மற்ற பிறவிகளுக்கம் இடையே ஏதாவது பிரச்சனைகள் உண்டுபன்னும் சிவன் இறுதியில் இது எனது திருவிளையாடலே என் நகைப்பாக முடிப்பார். ஆக்குவது முதல் அழிப்பதை வரை இக்கிரகணத்தை ஆட்டிப்படைக்கும் சிவ பெருமான் பூலோக மனிதர்களுக்குக் காட்சியளிப்பதற்காக லிங்கமாக அவதரிக்கும் முன் தான் அணிந்திருந்த காலணியை எங்கே கழற்றி வைத்தார், அதனை வழிபடுவதன் மூலம் என்னவெல்லாம் சிறப்பு என தொடர்ந்து இக்கட்டுரையில் காண்போமா...

தென்னாடுடைய சிவன்

தென்னாடுடைய சிவன்


"தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசகத்தின் மூலம் சிவ பெருமான் சிவலோகத்தில் இருந்து தென்னாட்டிற்கு வந்ததை அறியமுடிகிறது. இந்நூலை இயற்றிய மாணிக்கவாசகர் சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் இறைவா எனக் கூறினாலும்,
தென்னாடுடைய சிவன் என்று குறிப்பிடுவது இதற்குச் சான்றாகும்.

RameshM

தென்னவனின் நாடா?

தென்னவனின் நாடா?


தென்னவன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் பழைய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் என்பதாகும். பாண்டி என்றால் பழைய என அர்த்தம். எனவே தென்னாடு என்றால் பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும். சிவன் அந்த நாட்டினில் தோன்றினார் என்றே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

ஈசனும் சிவனும்...

ஈசனும் சிவனும்...


அவ்வாறு தென்னகத்திற்கு வந்த சிவனுக்கு ஈசன் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இச்சொல்லுக்கு அரசன், ஆள்பவன், இறைவன், தலைவன் என பல பொருள்கள் உண்டு. உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார். அவருடைய இடது புறத்தில் இருக்கும் தேவிக்கு ஈசுவரி, ஈசானி என்றெல்லாம் பெயர்கள் இருப்பது நாம் அறிந்ததே. தன்னை நாடிவந்தவருக்கு அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகைக் குணமும் உடைய இவரையே ஈசன் என நாம் வழிபடுகிறோம்.

BishkekRocks

லிங்கமாக மாறிய ஈசன்

லிங்கமாக மாறிய ஈசன்


இவ்வாறு இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்டுள்ள ஈசன் சுந்தரரோடு விவாதம் செய்துவிட்டு லிங்கமாக அவதரிக்கும் முன் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி வைத்த இடம் தென்னகத்தில் ஒன்றான தமிகத்தில் தான் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா ?. ஆமாங்க, ஈசனின் காலணி நம்ம தமிழ்நாட்டுள ஒரு திருத்தலத்தில் தான் வழிபாட்டுக்காகப் பலநூறு வருடமாக வச்சுருக்காக. வாங்க, அத்தலத்தின் மகிமையும், எப்படிச் செல்வது என்றும் பார்க்கலாம்.

Manisamg

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் 225-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 14வது தலமாகவும் உள்ளது கிருபாபுரீசுவரர் திருக்கோவில். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். ஈசன் கிழவர் தோற்றத்தில் வந்து சுந்தரரோடு விவாதம் செய்துவிட்டு பின் லிங்கமாக அவதரிக்கும் கருவறைக்கு முன்பாக காலணியை கழற்றி வைத்தார். இன்றும் இத்தலத்தில் ஈசனின் காலணி பாதுகைகள் உள்ளது.

Sivaraj D

தலஅமைப்பு

தலஅமைப்பு


சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்குத் திருவருட்டுறை என்ற பெயரும் உள்ளது. கருவறையில் அம்பிகை நான்கு கரங்களுடன் நின்ற கோணத்தில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கும், ஈசனுக்கும் விவாதம் நடந்த மண்டபம் இங்கே உள்ளது. இத்திருத்தலத்தில் பொல்லாப்பிள்ளையார் என்னும் விநாயகர் திருநாமம் உள்ளது.

Nandhinikandhasamy

திருவிழா

திருவிழா


ஆடி மாதத்தில் இத்தலத்தின் மூலவரான கிருபாபுரீசுவரருக்கு திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனி உத்திர தேரோட்டம் இங்கே பிரசிதிபெற்றது. இதனைத் தவிர்த்து ஆவணி மாதத்தில் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

Thiyagu Ganesh

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

PJeganathan

வழிபாடு

வழிபாடு


ஈசன் சன்னதியில் தங்களது குறைகளைக் கூறி வழிபடுவதால் விரைவில் நிவர்த்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசன் காலணி பாதுகைகளைத் தொட்டு வணங்கினால், தோஷங்கள் விலகி அனுகூலமான காரியங்கள் நிகழும். பொதுவாக பிற கோவில்களில் இருக்கும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் சுயம்புவாக உருவானதாகும். பேச்சுக் குறைபாடு இருப்பவர்கள், அறுகம்புல் மாலை சாற்றி வேண்டினால் தெளிவான பேச்சு வரும். சன்னதியில் உள்ள அம்பிகைக்கு நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணைய் கலந்து விளக்கு ஏற்றினால் திருமண பாக்கியம் கிடைக்கும்.

Mahinthan So

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


நீண்ட வருடமாகியும், திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், இக்கோவிலில் உள்ள தர்மதேவதை நந்திக்கு மாலை அணிவித்து, தாங்களும் மாலை அணிந்து சுற்றி வந்தால் விரைவில் சுப காரியம் அரங்கேறும் ன்பது தொன்நம்பிக்கை. மேலும், பூர்வ ஜென்ம பாவம் நீங்க, சிறப்பு யாகம் இங்கே நடத்தப்படும். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை வேண்டுவதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. அவ்வாறு வேண்டியவை நிறைவேறியதும் மூலவருக்குப் புத்தாடைகள் வழங்கியும், அன்னதானமிட்டும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

Thamizhpparithi Maari

தலவரலாறு

தலவரலாறு


சுந்தரரின் திருமண நாளன்று வயதான வேடத்தில் சென்ற ஈசன், நீ எனக்கு அடிமை என்று கூறி ஆதாரங்களைக் காட்டினார். அங்க இருந்தவர்களும், இது உன்மைதான் எனக் கூற கோபமடைந்த சுந்தரர் அந்த வயதான வேடத்தில் இருந்தோரை கடுமையான வார்த்தைகளாலும், பித்தன் என்றும் திட்டினார். இதைப் பொருட்படுத்தாத கிழவர், சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் சென்று மறைந்தார். பின்பே வயதான ரூபத்தில் வந்தது ஈசன் என உணர்ந்த சுந்தரர் மன்னிப்புகோரி பாடல்படித்தார். மேலும், ஈசன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் எல்லாம் சென்று திருப்புகழைப் பாடி அற்புதங்கள் நிகழ்த்தினார்.

Krishna Chaitanya Chandolu

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து கொண்டாங்கி சாலை வழியாக ஏனாதிமங்கலத்தைக் கடந்து சுமார் 19 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திருக்கோவிலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை என அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் இணையும் இடத்தில் இத்தலம் உள்ளதால் மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பேருந்துகள் மூலமாக எளிதில் அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X