Search
  • Follow NativePlanet
Share
» »கேட்டதை நிறைவேற்றும் நந்தி! செழிப்புடன் வாழ ஒருமுறை இங்கு போங்க!

கேட்டதை நிறைவேற்றும் நந்தி! செழிப்புடன் வாழ ஒருமுறை இங்கு போங்க!

முன்னோர்களின் தவறால் தற்போது வரை பல இடையூறுகளை குடும்பத்தினர் அனுபவித்து வருவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற தோஷம் உள்ளவர்கள் உடனே இந்த கோவிலுக்கு போய் வழபடுங்க.

முன்னோர்களின் தவறால் தற்போது வரை பல இடையூறுகளை குடும்பத்தினர் அனுபவித்து வருவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடங்கள், குடும்பப் பிரச்சனை, குழந்தைப் பாக்கியமின்மை, கடுமையான உடல் உபாதைகள், குடும்பத்தில் தொடர் மரணம் என பல இடையூறுகள் ஏற்பட்டு வரும். இதனால், மனமுடைந்து இருப்பவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் மனமுடைந்து உள்ளீர்களா?. முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்த நிலையில் நாம் அவர்களை கவணிக்கத் தவறியிருந்தால் கூட இதுபோன்ற தோஷங்கள் அடுத்த தலைமுறையினரை தொடரும். இதுபோன்ற ஒட்டுமொத்த குடும்பத்தையும் முடக்கும் வகையிலான குடும்ப தோஷங்களை ஒரு சில பரிகாரங்கள், வழிபாட்டின் மூலம் நீக்க முடியும்.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?


சென்னையில் இருந்து கடற்கரை மார்க்கமாக 254 கிலோ மீட்டர் தூரத்திலும், விழுப்புரம் வழியாக 267 கிலோ மீட்டர் தூரத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெங்காடு பகுதியில் அமைந்துள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11-வது சிவத்தலமாக இது திகழ்கிறது.

Rsmn

சிறப்பு

சிறப்பு


தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக தலங்களில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் நான்காவது தலமாகும். இங்கு சிவன், சுவேதாரண்யேஸ்வரர் என்ற திருப்பெயருடன், மூலவராகவும், பார்வதி தேவி, பிரம்மவித்யாநாயகி என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். மேலும், இங்கு நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

Mohan Krishnan

கேட்டதை நிறைவேற்றும் நந்தி

கேட்டதை நிறைவேற்றும் நந்தி


கோவிலின் நுழைவு வாயிலில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் உடல் பாகத்தில் ஒன்பது தழும்புகளுடன் தாயார் சந்நிதியின் நுழைவுவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. நந்தி சிலையின் முகம் சிவனை நோக்கியும், அதன் காதுகள் தாயார் சந்நிதியை நோக்கியும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, சிவபெருமான்- பார்வதி தேவி தம்பதியரின் ஆணைகளை, நந்தி ஏற்று நிறைவேற்றும் என்பதாக உள்ளது.

Adbh266

சிதம்பரத்திற்கு ஈடான கோவில்

சிதம்பரத்திற்கு ஈடான கோவில்


சிவன் 1008 விதமான தாண்டவங்கள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம் இதுவாகும்.

Arunankapilan

பாவம் தீர்க்கும் பரிகாரக் கோவில்

பாவம் தீர்க்கும் பரிகாரக் கோவில்


சிவனுக்குரிய கோவிலாக இது இருந்தாலும், மக்கள் தங்களின் ஜாதகம் மற்றும் குடும்பத்தில் உள்ள பாவங்களை தீர்க்கவும், வாழ்க்கையில் நற்பயன்களை அடையவும், சிறந்த கல்வியினை அடையவும் இக்கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்தபடி உள்ளனர். குடும்ப தோஷங்கள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள தீர்த்தக்குளத்தில் நீராடி, திதி கொடுப்பதும் மூலம் குடும்ப தோஷங்கள் நீங்கும் என்பது தொண்நம்பிக்கை.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து திருவெண்காடு செல்ல கடற்கரை சாலைப் பயணத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இந்தப் பயணம் ஆன்மீக பயணமாக மட்டுமின்றி ஒரு பொழுதுபோக்கு பயணமாகவும் அமையும். இதன் இடைப்பட்ட தூரத்தில் உள்ள கோவலம், மாமல்லபுரம், பாண்டிச்சேரி வழியான நீண்டதூர கடற்கரைச் சாலை பயணம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

அருகில் உள்ள கோவில்கள்


திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலைத் தவிர்த்து அதன் சுற்றுவட்டாரத்திலும் பல பிரசிதிபெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. அதில், கேது கோவில், சுயம்பு நாதா கோவில், அமிர்தநாராயண பெருமாள், வைதீஸ்வரன் கோவில், லலிதாம்பிகை உள்ளிட்ட கோவில்களுக்கச் சென்று வழிபடுவது மேலும் சிறப்படையடைச் செய்யும்.

Mohan Krishnan

கேது கோவில்

கேது கோவில்


சுவேதாரண்யேசுவரர் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கீழபெரும்பள்ளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது கேது கோவில். இங்கு கேது பகவானை வந்து வழிபட்டால் கேது தொடர்பான தோஷங்கள் விலகி நன்மைகள் நடக்கும் என தொண்நம்பின்கை உள்ளது.

Rsmn

கோவிலின் அமைப்பு

கோவிலின் அமைப்பு


நவகிரகங்களில் கேதுவுக்குரிய இக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் கேது பிரதான கடவுளாக தனி சன்னதியில் பாம்பு தலையுடன் மனித உடலோடு காட்சியளிக்கிறார். கேதுவின் சன்னதியில் சூரிய பகவானின் சிலைகள் இரண்டு இருக்கின்றன. அத்துடன் சனீஸ்வரர் சிலையும் உள்ளது.

Rsmn

வைதீஸ்வரன் கோவில்

வைதீஸ்வரன் கோவில்


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது வைத்தீஸ்வரன் கோவில். வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை குறிக்கிறது. இக்கடவுளை வழிபடுவோருக்கு நோய்நொடிகள் நீங்கும். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று இன்றளவும் அப்பகுதியினர் மத்தியில் நம்பிக்கை உள்ளது.

Sidsizzle

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X