» »கூரையே இல்லாமல் வெட்டவெளியில் அதிசய அம்மன் கோயில்... எங்கே இருக்குனு தெரியுமா?

கூரையே இல்லாமல் வெட்டவெளியில் அதிசய அம்மன் கோயில்... எங்கே இருக்குனு தெரியுமா?

Written By: Udhaya

அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் திருச்சியா அடுத்த உறையூரில் அமைந்துள்ளது. வேண்டிய வரம் தரும் சக்திவாய்ந்த அம்மன் இந்த வெக்காளியம்மன்.

பக்தர்கள் வீடிழந்ததால், தானும் வீட்டைவிட்டு வந்து வெட்டவெளியில் குடிகொண்ட சக்தி வாய்ந்த அம்மன்.

வெக்காளியம்மனின் சக்திகளை காண்போம் வாருங்கள்.

வெக்காளியம்மன் கோயில், உறையூர்

வெக்காளியம்மன் கோயில், உறையூர்

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது.

PC: TRYPPN

கண்ணகி கோயில்

கண்ணகி கோயில்

இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

PC: TRYPPN

பழம்பெருமை

பழம்பெருமை

காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர், சங்க இலக்கியத்திலும் சரித்திரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கிய நகரமாகும்.

இது தற்போது உள்ள திருச்சிராப்பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ளது.

இங்கு பல தொன்மையான சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன.

PC: TRYPPN

வரலாறு

வரலாறு

வெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது

PC: TRYPPN

வெட்டவெளி காரணம்

வெட்டவெளி காரணம்

இந்த கோயில் வெட்ட வெளியில் அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது மரபு என்பதால் வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி அமைத்துள்ளார்கள். ஆனால் வெக்காளியம்மன் கூரையின்றி இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது.

PC: TRYPPN

வெக்காளியின் சபதம்

வெக்காளியின் சபதம்

உறையூரில் ஒருநாள் மண்மழை பெய்ததாம். இதனால் வீடிழந்த மக்களுக்கு வீடு கிடைக்கும் வரை காவல் தெய்வமான வெக்காளி வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

PC: TRYPPN

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

திருச்சி, தஞ்சாவூரிலிருந்து எளிதாக செல்லலாம்.

கும்பகோணம், திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.

தொடர்ந்து இணைந்திருங்கள். நேட்டிவ் பிளாணட் தமிழ்

Read more about: travel, temple
Please Wait while comments are loading...