Search
  • Follow NativePlanet
Share
» »வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...!

வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...!

ஒவ்வொரு நட்சத்திரமும், சூரிய சக்கரத்தில் சுழலும் போது பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கின்றன. இந்த மாற்றத்தால் செல்வமிக்வராக மாற வைகாசி மாதம் இந்த 4 நட்சத்திரம் கொண்டோர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கையின் முறைகளை மாற்றி அமைத்து வாழ்ந்துள்ளனர். கால நிலைக்கு ஏற்றது போல் வழிபாட்டுத் தெய்வங்கள், விழாக்கள் என பல நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு, காலத்திற்கு ஏற்றது போல் அவர்கள் பிரிவு பிரிவாக உண்டாக்கியதே வாரங்களும், மாதங்களும். தமிழர் காலக் கணிப்பு முறையின்படி சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு மாதங்களை அவர்கள் வகுத்தனர். இதில் ஆண்டின் முதல் மாதமான சித்திரைக்கு அடுத்து இரண்டாவதாக வருவது வைகாசி மாதம். இந்த மாதத்திற்கு உண்டான பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேட ராசியை விட்டு, இடப இராசிக்குள் புகும் நேரமே வைகாசி மாதத்தின் பிறப்பு. இடப இராசிக்குள் சூரியன் பயணிக்கும் இந்த காலம் முழுக்க வைகாசி மாதத்தில் அடங்கும். வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும் அழைப்பர். பிற மாதங்களைக் காட்டிலும், வைகாசி மாதத்திற்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. திருஞான சம்பந்தர், திருநீலநக்கர், முருகநாயனார் உள்ளிட்டு, பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள், வைணவப் பெரியாரான நம்மாழ்வார் என பலரும் அவதரித்த இந்த மாதத்தில் நடப்பு வருடத்தில் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் நட்சத்திரத்திற்கு ஏற்ற கோவில்களுக்குச் செல்வதால் செல்வத்திலும், புகழிலும், மகிழ்ச்சியிலும் புரளப் போறாங்க. சரி, அது எந்த ராசி, அவர்கள் எந்தக் கோவிலுக்கு போக வேண்டும் என பார்க்கலாம் வாங்க.

ஆதிநாராயணப் பெருமாள் கோவில், மிருக சீரிடி

ஆதிநாராயணப் பெருமாள் கோவில், மிருக சீரிடி


ஆதிநாராயணப் பெருமாள் புத்திக் கூர்மையும், செல்வத்தை நோக்கி பயணிக்கும் மிருக சீரிடி நட்சத்திரக் காரர்களுக்கு ஏற்ற மூல கடவுளாக திகழ்கிறார். மிருக சீரிடம் நட்சத்திரம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களில் இருந்து விடுபடவும், இந்த மாத இறுதியிலேயே செய்த வேலைக்கேற்ற பலன்களை அடைந்து பணச் செழிப்பு மிக்கவராக உருவெடுக்கவும் எண்கண் அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் தலம் சிறப்பு பெற்றதாக உள்ளது.

Adam Jones

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பிற பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற நிலையில், அமர்ந்த நிலையில் அல்லது ஓய்வெடுக்கும் நிலையில் காட்சியளிப்பார். ஆனால், எண்கண்-யில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலில் அருள்பாலிக்கும் ஆதிநாராயணப் பெருமாள் கருடால்வார் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். பெருமாள் அரசனுக்கு அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால் சன்னதியிலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். இத்தலத்தின் பெருமாளுக்கு நித்யகருட சேவை சாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காட்சியை வேறெந்தக் கோவிலிலும் காண முடியாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

Ssriram mt

திருவிழா

திருவிழா

பெருமாளுக்கு உகந்த ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி அன்று இத்தலத்தில் பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துகின்றனர். கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, ராம நவமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மையாருக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடத்தப்படுகிறது.

Ssriram mt

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


பொதுவாக கோவில்களில் நடை அதி காலை பொழுது, அந்த சாயும் பொழுது என இரு வேளைகளில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் கோவில் நடை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலுன் இத்தலத்திற்கு செல்ல வேண்டும்.

Simply CVR

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருவாரூர் மாவட்டம், எண்கண் பகுதியில் அமைந்துள்ளது ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவாரூரில் இருந்து திருக்கண்ணமங்கை, வடகண்டம், மங்கல் அய்யம்பேட்டை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். மேலும், கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருச்சேறை, குடவாசல் வழியாக மஞ்சகுடி, சிமிழி சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் பயணித்தாலும் எண்கண் பெருமாள் தலத்தை அடைய முடியும். மாநகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்து செல்லும் வகையில் பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார்கள் வசதியும் உள்ளது.

மாங்கல்யேஷ்வரர் திருக்கோவில், உத்திரம்

மாங்கல்யேஷ்வரர் திருக்கோவில், உத்திரம்


திருமண வாழ்க்கை முதல் இல்லற வாழ்க்கை வரை மகிழ்ச்யும் சரியான திட்டமிடலும் கொண்டு வாழ்ந்து வரும் உத்திர நட்சத்திரம் கொண்டோர் இந்த வைகாசி மாதத்தில் மாங்கல்யேஷ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவதன் மூலம் பொருளாதார ரீதியாகவும், உத்தியோகத் தலத்திலும் மேலோங்கிச் செல்வர். உத்திர நட்சத்திரத்தின் குருவாக திகழும் இடையாற்று மங்கலத்தில் மங்களாம்பிகையுடன் அருள்பாலிக்கும் மாங்கல்யேஷ்வரரை வழிபட்டால் குடம்பத்தில் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வியும், ஆரோக்கியமும் மேன்மையடையும் என்பது நம்பிக்கை.

Venkatx3x

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


இடையாற்று மங்கலத்தில் அருள்பாலிக்கும் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். திருமணத் தடை, நோயில் அவதிப்படுவோர் இத்தலத்தில் மூலவருக்கு அபிஷேக பூஜை செய்வதன் மூலம் தடைகள் நீங்கும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட காலம் செழிப்புடன் வாழ இத்தலத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Padmakishore

திருவிழா

திருவிழா


இத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, நவராத்திரி உள்ளிட்ட விழாக்களும் இங்கே கொண்டாடப்படுவது வழக்கம்.

Kalai

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு மாங்கல்யேஷ்வரர் திருக்கோவிலின் நடை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருச்சியில் இருந்து வடகாடு- ஆலங்குடி தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப் பாலத்தைக் கடந்து, லால்குடி தேசிய நெடுஞ்சாலை 81-யில் சுமார் 16.5 கிலோ மீட்டர் பயணம் செய்தால் லால்குடி தாலுகா, இடையாற்று மங்கலத்தில் அமைந்துள்ள இக்கோவிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து லால்குடி கடந்தும் இத்தலத்தை அடைய முடியும். திருச்சி, தஞ்சாவூர் என பிற பகுதிகளில் இருந்தும் மாங்கல்யேஷ்வரர் கோவிலை சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளது.

பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள், கேட்டை

பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள், கேட்டை


கேட்டை நட்சத்திரம், ஜோதிட ராசிச் சக்கரத்தில் கணிக்கப்படுகின்ற 27 நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18-வது பிரிவாக உள்ளது. இந்நட்சத்திரத்தில் பிறந்தோர் வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இவ்வாறு, கணிப்புடன் கூடிய திட்டமிடலும், ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் கொள்ளும் கவணமும் இந்நட்சத்திரக்காரர்கள் செழிப்புடன் வாழ வழிசெய்கிறது.இச்சிறப்புகளை மேலும், வலுப்படுத்தவும், எதிர்பாராத வகையில் நேரிடும் துக்க நிகழ்வைத் தடுத்து பொருட்செல்வம் மிக்கவராக அவதரிக்கவும் பசுபதிகோவிலில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாளை வழிபடுவது சிறந்தது.

Ssriram mt

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வழிபட வேண்டிய தலங்களில் இக்கோவில் முக்கியமானது. கேட்டை நட்சத்திரத்தில் நிலவும் தோஷங்கள் நீங்க மூலவருக்கு வெண்மை நிற ஆடையும், மல்லைகைப் பூமாலை, அதிசரம், வடையும் படைத்து நெய்வேத்யம் செய்து வேண்டுதல் செய்வது சிறந்தது. இம்மாத இறுதிக்குள் இத்தலத்தின் வரதராஜ பெருமாளை வணங்கி மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி கலந்த எண்ணையில் தீபமேற்றி வழிபட்டால் செல்வத்தின் உச்சத்தை அடையக்கூடிய வாய்ப்பு தேடி வந்து சேரும்.

H. Grobe

திருவிழா

திருவிழா


வைகாசி, மார்கழி மாதங்களில் வரும் கேட்டை நட்சத்திர தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேட்டை நட்சத்திரம் கொண்ட பக்தர்கள் அதிகளவில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவது வழக்கம். அன்றைய தினங்களில் கோவில் தலம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கும்.

Duraikochi

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தங்களது பயண நேரத்தை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் சென்றால் பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேக பூஜையையும், பிரார்த்தனைகளையும் காணமுடியும்.

Fahad Faisal

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தஞ்சாவூரில் இருந்து சுமார் 14.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வரதராஜப் பெருமாள் கோவில். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் முக்கியச் சாலையில் பயணித்து மனக்கரம்பை வழியாக செல்லும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து திருவேதிகுடி, நல்லிநேரியைக் கடந்தால் பசுபதி கோவில் பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், திருவோணம்

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், திருவோணம்


சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரமாகத் திகழும் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த கடவுள் திருமால். திருமாலைப் போலவே இந்நட்சத்திரத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் செல்வத்திலும், புகழிலும் மேலோங்கி காணப்படுவர். சீரிய வழியில் பொருள் தேடுபவராக இருந்தும், செல்வந்தராக வாய்ப்பின்றி வஞ்சிக்கப்படுவோர் வரும் வைகாசி மாதத்தில் திருப்பாற்கடலில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேசரை வழிபட்டு வருவது நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வைகாசி காலத்தில் செய்யப்படும் வழிபாட்டால் திருவோண நட்சத்திரத்திற்கு வெங்கடேசப் பெருமாள் செல்வங்களை வாரிவழங்குவார் என்பது காலம் காலமாக நிலவும் நம்பிக்கை.

Mohan Krishnan

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


இத்தலத்தில் சிவனின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது சிவ பெருமானும், விஷ்ணுவும் ஒன்று என்னும் தத்துவத்தை குறிக்கும் வகையில் உள்ளது. மேலும், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 107-வது தலமாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களை விட்டு விலகவும், செல்வங்கள் செழிக்கவும் இத்தல இறைவனை வழிபடுவது வழக்கம். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு நெய்யில் விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும்.

Ssriram mt

திருவிழா

திருவிழா


பெருமாளுக்கு உகந்த சுபநாட்களான வைகுண்ட ஏகாதசியன்றும், பிரதோஷம் அன்றும் இத்தலத்தில் திருமணம் ஆன பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

Sivakumar1248

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

எப்படிச் செல்ல வேண்டும் ?

எப்படிச் செல்ல வேண்டும் ?


வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் போஸ்ட், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில். வேலூரில் இருந்து பெருமுகை, இராணிப்பேட்டை வழியாக சுமார் 43 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இராணிப்பேட்டை, அரக்கோணம், காவிரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் வாயிலாக இக்கோவிலை அடைய முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X