Search
  • Follow NativePlanet
Share
» »புது வருடத்தைக் கொண்டாட கண்டிப்பா இங்கெல்லாம் போகணும்

புது வருடத்தைக் கொண்டாட கண்டிப்பா இங்கெல்லாம் போகணும்

புது வருடத்தைக் கொண்டாட கண்டிப்பா இங்கெல்லாம் போகணும்

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் புத்தாண்டில் நாம் எந்த அனுபவத்தைப் பெறுகிறோம் என்பது மட்டும் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டே வருகிறது. இந்த வருடம் புத்தாண்டுக்கு என்ன சிறப்பு. நீங்கள் முடிவெடுங்கள். ஆண்டில் தொடக்கத்திலேயே ஒரு புதிய இடத்துக்கு புத்தம்புதிய சுற்றுலா செல்லலாம். ரெடியா?

குல்மார்க்

குல்மார்க்


புத்தாண்டைக் கொண்டாட இந்தியாவில் மிகச் சிறப்பான இடம் இதுவாகும்.

குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்களால் 1927ல் கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். அழிக்கும் தொழிலை செய்யும் இந்து கடவுளான சிவபெருமானின் மனைவியான கௌரியின் நினைவாக, குல்மார்க் முந்தைய காலத்தில்,கௌரிமார்க் என்று அழைக்கப்பட்டது. இவ்விடத்தின், அழகு, சரிவான புல்வெளிகள், அமைதியான சூழல் ஆகியவற்றில் மயங்கிய, காஷ்மீரின் கடைசி மன்னரான ராஜா யூசுஃப் ஷா சக் என்பவரால், தற்போது குல்மார்க்என்று அழைக்கப்படுகிறது.


Skywayman9 .

 குல்மார்க் நதி

குல்மார்க் நதி

அபர்வத் சிகரத்தின் பனிக்கட்டிகளில் இருந்து உருகி வழியும் நீரினால் உருவான நிங்கல் நல்லா என்னும் நீரோடையை சுற்றுலாப் பயணிகள் அவசியம் காணவேண்டும். இந்நீரோடையானது, மலைச் சிகரங்களினூடே கீழிறங்கி, சொபோர் என்னும் இடத்துக்கருகில், ஜீலம் நதியில் கலக்கிறது.

Sahid Vaidya

மெக்லியோட்கஞ்ச் புத்தாண்டு

மெக்லியோட்கஞ்ச் புத்தாண்டு

புத்தாண்டின் தொடக்கத்திலேயே இந்த இடத்துக்கு பயணம் செய்யுங்கள். அப்படி ஒரு அதீத ஆர்வம் இருப்பவர்கள் நிச்சயமாக மகிழ்ந்துவரலாம்.

இவ்விடம் காங்க்ராவிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1770 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது தலாய் லாமாவின் உறைவிடமாகவும் உள்ளது.

sanyam sharma

 மெக்லியோட்கஞ்ச்

மெக்லியோட்கஞ்ச்


இவ்விடம் போரின் போது திபெத்திய அரசின் தலைநகராக முப்பது வருடங்களாக இருந்துள்ளது. இங்கு பிரமிக்கத்தக்க அழகான மடாலயம் ஒன்று உள்ளது. அங்கு புத்தர், பத்மசாம்பவர் மற்றும் அவலோகிதேஸ்வரரின் மிக பிரம்மாண்டமான உருவங்கள் உள்ளன. நம்கியால் மடாலயம், கோம்பா திப் த்சே-சோக் லிங்க் என்ற சிறய மடாலயம் ஒன்று மற்றும் த்பெத்திய கலையியற்றும் நிலையம் போன்றவை மெக்லியோட்கஞ்சில் உள்ள புத்த மற்றும் திபெத்திய தொடர்புடைய பிற இடங்களாகும்.

Derek Blackadder

மணாலி

மணாலி

மணாலி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லாமல், புது வருடத்தின் ஆரம்ப நாட்களில் செல்லும் பயணத்துக்கு மிக சிறந்ததாகும்.

கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது ‘தேவர்கள் வசிக்கும் பூமி' எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. ஹிந்து புராணிக நம்பிக்கைகளின்படி, ஆக்கக்கடவுளான பிரம்மாவால் இந்தியாவை நிர்வகிக்குமாறு நியமிக்கப்பட்ட மனு எனும் அவதாரத்தின் பெயரால் இந்த மணாலி அழைக்கப்படுகிறது.

sahil

தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

ஒரு அடர்ந்த காட்டுக்குள் பாதுகாப்பாக புத்தாண்டை வரவேற்க ஆசைப்படுகிறீர்களா அப்படியென்றால் உடனே இங்கு கிளம்புங்கள்.

ஜவஹர்லால் நேரு கிரேட் ஹிமாலயன் பார்க் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா குல்லு பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. 50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேசியப்பூங்காவில் பலவகையான உயிரினங்களும் தாவரங்களும் இடம் பெற்றுள்ளன. 30 வகையான பாலுட்டி விலங்குகள் மற்றும் 300 வகையான பறவைகள் போன்றவை இங்கு வசிக்கின்றன. அழிந்து வரும் பறவையினமான வெஸ்ட்டர்ன் டிராகோபான் எனும் காட்டுக்கோழி இந்த பூங்காவில் காணப்படுகிறது.

Bleezebub

மான்

மான்

வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி அமைந்துள்ளது. உண்மையாகவே இந்த உலகத்தின் அமைதியை மான் பகுதியில் அனுபவிக்கலாம். ஏனெனில் மான், நகர வாழ்க்கையின் நரகச் சூழல்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு சென்றாலே ஒரு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம். இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள நாகாலாந்து மாநிலத்தில், மான் மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் வடக்கு பகுதியில் அஸ்ஸாம், தெற்கு பகுதியில் மியான்மர் மற்றும் மேற்கு பகுதியில் மோக்கோக்சுங் மற்றும் டியுவென்சங் போன்ற பகுதிகள் எல்லைகளாக அமைந்துள்ளன

Jim Ankan Deka

 கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா மலை உலகிலேயே மிக உயரமான 3-வது மலைச்சிகரம் எனும் பெருமையுடன் இமாலயத்தில் வீற்றிருக்கிறது. இது இந்திய நேபாள எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 8586 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன்ஜங்கா எனும் பெயருக்கு ‘பனிமலையின் ஐந்து புதையல்கள்' என்பது பொருளாகும். இப்பகுதியில் அமைந்துள்ள ஐந்து மலைச்சிகரங்கள் தங்கம், வெள்ளி, ரத்தினம், தானியம் மற்றும் வேதநூல் ஆகிய ஐந்து முக்கிய பொருட்களை குறிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
Nadeemmushtaque

ரவங்க்லா

ரவங்க்லா

பெல்லிங் மற்றும் காங்டாக் இடையே அமைந்துள்ள ஓர் அழகிய சுற்றுலாத் தலம்தான் ரவங்க்லா. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இவ்விடம் தென் சிக்கிம் பகுதியில் மிகவும் பிரபலம். இது கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது. இஞ்சி மற்றும் பெரிய ஏலக்காய் போன்றவற்றை கொண்டு விவசாயம் செய்யும் ஒரு சிறிய வர்த்தக சந்தையாக இருந்த இவ்விடம் சமீபத்தில் வர்த்தக மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

Devsutapabublu

 கியுசிங் கிராமம்

கியுசிங் கிராமம்

கிராமப்புற சுற்றுலாவை ஊக்குவிக்கும் இடமான இந்த கியுசிங் கிராமம் ரவங்க்லாவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிராமப்புற வாழ்க்கையையும் சிக்கிமின் உபசரிப்பையும் அனுபவிக்கலாம். சிக்கிமின் பூட்டியா மொழியில் கூறப்படும் கியுசிங் என்றால் "கோதுமை நிலம்" என்று அர்த்தம். இது கடல் மட்டத்தில் இருந்து 1700 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Read more about: travel places welcome 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X