Search
  • Follow NativePlanet
Share
» »முழுக்க முழுக்க தங்கம்... நம்ம ஊருல இப்படியும் ஒரு கோவில்...!

முழுக்க முழுக்க தங்கம்... நம்ம ஊருல இப்படியும் ஒரு கோவில்...!

இந்தியா மட்டுமில்லை, ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான பொற்கோவில் நம் ஊரில் அமைந்திருப்பது பெரும்பாலான மக்கள் அறிந்திராத ஒன்று. அதிகப்படியான தங்கத்தை வைத்து கட்டமைக்கப்பட்ட கோவில் நம்ம தமிழ்நாட்டில் மட்

இந்தியாவில் பொற்கோவில் என்றாலே நம் நினைவில் முதலில் தோன்றுவது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். ஆனால், நாம் பெரிதும் அறிந்திராத இந்தியாவிலேயே அதிகப்படியான தங்கத்தை வைத்து கட்டமைக்கப்பட்ட கோவில் நம்ம தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என நீங்கள் அறிவீர்களா. அட, ஆமாங்க... திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவில் கோபுரத்த விட அதிகப்படியான தங்கத்தை வச்சு ஒரு பெரிய கோட்டைய போல கோவில் சென்னைக்கு பக்கத்துலதான் இருக்கு.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


சென்னையில் இருந்து சுமார் 152 கிலோ மீட்டர் தொலைவில் ஆம்பூருக்கும், ஆரணிக்கும் நடுவுள, வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீபுரம் பொற்கோவில். திருப்பதியில் இருந்து 126 கிலோ மீட்டர் சந்திரகிரி, பகலா, காட்பாடி வழியாக பயணித்தாலும் இந்த பொற்கோவிலை அடையலாம்.

வேலூர்

வேலூர்


இந்தியாவில் வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைபெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது. பொம்மி நாயக்கர், ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் வேலூரை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களின் ஆட்சியைப் பறைசாற்றி வேலூர் மாநகரில் நிமிர்ந்து நிற்கிறது வேலூர் கோட்டை. அதோடு ஆசியாவிலேயே புகழ் பெற்ற பொற்கோவிலும் இப்பகுதியில் அமைந்துள்ளது தமிழக ஆன்மீகத் தலங்களுக்கு மேலும் சிறப்பூட்டுகிறது.

Dsudhakar555

ஸ்ரீபுரம் பொற்கோவில்

ஸ்ரீபுரம் பொற்கோவில்


ஸ்ரீபுரம் பொற்கோவில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் உள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோவில் முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15 தங்க அடுக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வேத சாரங்களை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.

Dsudhakar555

தல அமைப்பு

தல அமைப்பு


1500 கிலோ தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும்.

Dsudhakar555

ஸ்ரீ அன்னை நாராயணி

ஸ்ரீ அன்னை நாராயணி


வேலூரில் உள்ள இந்த தங்கக் கோவிலை நிர்வகித்து வருவது ஞானகுரு சக்தி அம்மா குழுமம். நாட்டை ஆட்சிசெய்த மன்னர்கள் மக்களுக்கு இறைவழிபாட்டை உணர்த்தவும், தர்ம நெறிகளை கடைபிடிக்கவும் இமயம் முதல் குமரி வரை கோவில்களைக் கட்டி வழிபட உணர்த்தினர். அதன்படி, ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய கோவில்களில் கலைநயமிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கற்கோவில்கள் கோவில் அறக்கட்டளை துறையால் கட்டப்பட்ட இக்குழுமத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Dsudhakar555

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து வேலூருக்கு தன்பாத்- ஆழப்புலா எக்ஸ்பிரஸ், டேராடூன்- மதுரை எக்ஸ்பிரஸ், கவுகாத்தி- திருவணந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சாய்நகர் எக்ஸ்பிரஸ் என சுமார் 60-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் உள்ளன. வேலூர் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு தொடர் பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Sayowais

அருகில் உள்ள விமான நிலையம்

அருகில் உள்ள விமான நிலையம்


வேலூர் நகரிலுள்ள அப்துல்லாபுரம் என்னும் பகுதியில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

Athlur

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்


ஸ்ரீபுரம் கோவிலுக்கு பயணம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். மேலும், கைபேசி, கேமராக்கள் மற்றும் இதர மின்சாதனங்களை எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வருடம் முழுவதும் இக்கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும். காலை 4 மணி முதல் 8 மணி வரை அபிஷேகமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆரத்தி சேவையும் நடத்தப்படுகிறது.

Dsudhakar555

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

வேலூருக்கு பயணம் செய்கிறீர்கள் என்றால் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தவறவிடாதீர்கள். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. வேலூருக்கு அருகில் இரத்தினகிரி பாலமுருகன் கோவில், சலகண்டேச்சுரர் கோவில், வாலாசா தன்வந்திரி கோவில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இந்நகரைச் சுற்றிலும் காணப்படுகின்றது.

Fahad Faisal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X