• Follow NativePlanet
Share
» »மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்!

மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்!

Written By:

உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் போற்றப்படுபவன் சிவபெருமான். இயற்கையை அகமாகக் கொண்ட சிவன் அண்டத்தினை ஆளும் கடவுளாக கருதப்படுகிறார். இப்பூவுலகின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனது கட்டளைக்கு இனங்கே நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட வாழ்நாள் என ஒவ்வொரு அங்கத்தையும் அவன் வழிநடத்துவதாகவே பூஜிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிவனின் ஆலயங்கள் இன்றளவும் பல்வேறு மர்மங்களை நிகழ்த்தி வருவது வியக்கத்தகுந்த ஒன்று. அதில் உஒன்று தான் முக்கோன வடிவில் மூனறு இடங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள சிவன் கோவில்கள். மர்மம் நிறைந்த இக்கோவில் நோக்கி பயணிக்கலாம் வாங்க.

மர்ம முடிச்சுக்கல்

மர்ம முடிச்சுக்கல்


இந்தியாவில் பெருன்பான்மையாக காணப்படும் சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒட்டுமொத்த பூலோகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அதேப் போன்றே தமிழகத்தில் கிழக்கே அமையப்பெற்றுள்ள சிவன் கோவில்கள் மனித குளத்தின் மொத்த சரித்திரத்தையும் அடக்கிய மர்மம் நிறைந்த கோவிலாக காணப்படுகின்றனது.

Autharite

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்து நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது பூலோகநாதர் கோவில். இது கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டிய இராஜேந்திர சோழரால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதில் வியக்கத்தகுந்த விசயம் என்னவென்றால் இதன் அருகே ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன.

பூலோக நாதர் கோவில்

பூலோக நாதர் கோவில்


நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பூலோக நாதர் கோவிலுக்கு அருகில் சிவலோகம் மற்றும் கைலாயம் என முக்கோண வடிவிலான பிறப்பு முதல் வாழ்ந்து முக்தியை அடைவது வரை மூன்று நிலைகளை குறிக்கக்கூடிய ஆலயங்கள் உள்ளது. இவை, உலகில் வேறெங்கும் காண முடியாத அற்புதத் தலமாக விளங்குகிறது.

Ssriram mt

நிலப்பிரச்சனை தீர்க்கும் பூலோகர்

நிலப்பிரச்சனை தீர்க்கும் பூலோகர்


வீடு, நிலம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள், மண்ணுக்கு அதிபதியான பூலோகநாதரை வழிபடுவதன் மூலம் விரைவில் பிரச்சனைகள் தீரும் என்பது தொன்நம்பிக்கை. மண் தொடர்பான எந்தவிதமான பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்கும வல்லமைகொண்டவர் பூலோகநாதர்.

Ssriram mt

வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு

வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு


பல்வேறு சிறப்புகளையும், அதிச வடிவிலும் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருவதன் மூலம் உலகில் வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது, ஒரே சமையத்தில் அண்டத்தில் ஆன்டவரான ஈஸ்வரனையும், பெருமாளையும் தரிசிக்கக் கூடிய உன்னத திருத்தலம் இது. மேலும், இத்திருத்தலத்தில் உள்ள புவானம்பிகை பெண்களுக்கு திருமனத் தடைகளை நீக்கி, சுமங்கலி வாழ்வழிக்கும் கடவுளாவார்.

Rashkesh

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


கடலூரில் உள்ள இந்த முக்கோண வடிவ மூன்று கோவிலுக்கும் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் கூடவே அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வாருங்கள். ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சற்று மனநிறைவுடன் ஊர் சுற்ற யாருதான் விரும்ப மாட்டார்கள்.

rajaraman sundaram

பாடலீஸ்வரர் கோவில்

பாடலீஸ்வரர் கோவில்


பாடலீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்தக் கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் அப்பர் என்ற சைவத்துறவியின் சைவம் தொடர்பான கருத்துகளைக் காணலாம். அப்பரை கல்லைக்கட்டி கடலில் போட்ட போதும் அவர் சிவபெருமானின் திருநாமத்தை உச்சரித்தவண்ணமாக கடலில் நீந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

Nsmohan

மாங்கிரோவ் காடு

மாங்கிரோவ் காடு


பிச்சாவரம் மாங்கிரோவ் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்களைக் கொண்டதே மாங்கிரோவ் காடு. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

Shankaran Murugan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து கடலூரை அடைய கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி வழியாக பயணித்தால் சுமார் 176 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலூரை அடையலாம். அல்லது, மேல்மருவத்தூர் வழியாக 185 கிலோ மீட்டர், காஞ்சிபுரம் வழியாக 219 கிலோ முட்டர் பயணித்தும் கடலூரை அடையலாம். ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரல் சேவைகளும் சென்னையில் இருந்து கடலூருக்கு உள்ளது.

Moshikiran

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more