Search
  • Follow NativePlanet
Share
» »துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

தமிழ்புத்தாண்டின் தொடக்கம் முதல் புதன், குரு, சனி, ராகு, கேது தங்களது நட்சத்திரங்கல் இடம்மாற உள்ள நிலையில் ராகுவின் கோரப் பார்வையில் இருந்து தப்பிக்க எந்தக்கோவிலுக்கு போகனும்னு தெரியுமா?

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. அவ்வாறாக இந்த தமிழ்புத்தாண்டில் ராசிச் சக்கரத்தில் சூரியன் நுழையும் போது முதல் ஆறு இராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என கடந்த தொகுப்புகளில் பார்த்தோம்.

மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviriமேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri

தொடர்ந்து, அடுத்தடுத்து வரும் துலாம், விருச்சிகம், தனுசு ராசியுடையோர் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் ராகுவின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும் என பார்க்கலாம் வாங்க...

துலாம் - ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவில்

துலாம் - ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவில்


துலாம் ராசியுடையோருக்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் போட்டியாளர்களிடம் வெற்றிபெருவீர்கள். இருப்பினும், ராகு, கேதுவுன் பார்வை அதிகமாக உள்ளதால் ஆளுமை திறன் குறைந்து பகை வளரும சூழல் ஏற்படும். இதில் இருந்து விடுபட கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடத்தில் உள்ள ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

Ssriram mt

கோவில் சிறப்பு ?

கோவில் சிறப்பு ?


சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் இரண்டு சொர்க்கவாயில்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அமைப்பை வேறெந்த பெருமாள் கோவில்களிலும் காண முடியாது. மேலும், உத்ராயணம், தட்சிணாயணம் என்ற இரட்டை நுழைவு வாயில்களும் அமைந்துள்ளது.

Rathishkrishnan

திருவிழா

திருவிழா


ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து தமிழ் மாதங்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. இதில், அப்பகுதி மக்கள் திரலாகக் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்சிகளுடன் விழாவை நடத்துகின்றனர்.

Duraikochi

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


கோவிலின் நடை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு சென்றால் தீபாராதனை வழிபாட்டை காணும் பாக்கியம் கிடைக்கும்.

Fahad Faisal

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஆலப்புழா எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் ரயில், திருவணந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் விரைவு ரயில், பாலக்காடு ஜங்சன் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

Prinzy555

விருச்சிகம்- மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்

விருச்சிகம்- மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்


விருச்சிகம் ராசிக்குள்ளேயே குரு வருவதால் அனாவசிய அலைச்சல் குறைந்து பங்குதாரர்கள் மூலம் வரவு பெருகும். மேலும், ராகு 9ல் உள்ளதால் குடும்ப பெரியவர்களின் உடல்நலன் குறையும். இதில் இருந்து விடுபட திருச்சியில் உள்ள அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பரிகார பூஜை செய்து வர ஆரோக்கியம் பெருகும்.

Rajesh Muralidharen

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இக்கோவிலுக்கு சான்றுகள் உள்ளன. திருச்சியில் மிகவும் பிரசிதிபெற்றதாக இந்த உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது. திருச்சி மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் இத்தலத்தில் இருந்து பார்த்துவிடலாம். மேலும், இக்கோவிலின் அடிவாரப் பகுதியில் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப் பாடலில் இடம்பெற்றுள்ள சிவன்கோவில்களுள் ஒன்றாகும்.

Prinzy555

நடை திறப்பு

நடை திறப்பு


திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலின் நடை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பிற்பகல் நேரத்தில் வெளிலில் மலையேறுவதை விட காலை அல்லது மாலை நேரத்தில் இக்கோவிலுக்குச் செல்வது சிறந்த அனுபவத்தை அளிக்கும். இரவு நேரத்தில் இந்த மலை உச்சியில் இருந்து திருச்சியின் ஒளிரும் அழகை ரம்மியமான காற்றுடன் ரசிக்கலாம்.

Santhoshj

திருவிழா

திருவிழா


சித்திரை வருடப் பிறப்பான தமிழ்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, பொங்கள் பண்டிகையின் போது அப்பகுதீ மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான விநாயகர் பக்தர்கள் இங்கே திரல்வது வழக்கம்.

Arunankapilan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில், மதுரை வார ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை அதிவிரைவு ரயில் என பல ரயில் சேவைகள் திருச்சிக்கு செல்ல உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உச்சி பிள்ளையார் கோவில் சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Josephben12345

தனுசு - தியாகராஜர் திருக்கோவில்

தனுசு - தியாகராஜர் திருக்கோவில்


மே 14 அன்று சுக்கிரன் மறைந்து ராகுவும், கேதுவும் ராசிக்குள் நுழைவதால் அனாவசியமான வாக்குவாதம், சந்தேகம், மன அமைதியின்மை உள்ளிட்டவை அதிகளவில் காணப்படும். திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வர தேடிவந்த ராகு தெறித்து ஓடும்.

Kasiarunachalam

சிறப்பு

சிறப்பு


தியாகராஜர் கோவிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். கடவுள்களின் ராஜாவாக திகலும் தியாகராஜர் கோவில்களும் பிற கோவில்களைப் போல அல்லாமல் பிரம்மிப்பூட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பகல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோவிலில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

Kasiarunachalam

திருவிழா

திருவிழா


சித்திரை விழா, தெப்பதிருவிழா, ஆடிப்பூரம் எனப்படும் 10 நாள் கொண்டாடப்படும் திருவிழா என வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கில வருடப் பிறப்பின் போது கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகளும் செய்யப்படுகிறது.

NatRaja

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தாம்பரம் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செத்தூர் எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு செல்ல உள்ளது.

இந்தியாவின் அல்டிமேட் ரயில் இதுதான் - சவால்! உங்களுக்கு இது தெரிந்திருக்காது!இந்தியாவின் அல்டிமேட் ரயில் இதுதான் - சவால்! உங்களுக்கு இது தெரிந்திருக்காது!

Ramaneswaran Baskaran

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த புத்தாண்டு வாரி வழங்கப்போகுது தெரியுமா? .. #Astrotemple3துலாம் டூ தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த புத்தாண்டு வாரி வழங்கப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X