Search
  • Follow NativePlanet
Share
» »ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்... உங்களுக்குத் தெரியாத மர்மங்கள்..!!

ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்... உங்களுக்குத் தெரியாத மர்மங்கள்..!!

இந்தியாவில் எண்ணற்ற கோட்டைகளும், அரண்மனைகளும் இன்றளவும் நம் பண்டைய கால பாரம்பரியத்தை சுமந்து நிற்கின்றன. இந்த வானுயர்ந்த கலைநயமிக்க கட்டிடங்கள் பல போர், அதிகாரம், செழிப்பு உள்ளிட்ட வரலாற்றை நமக்கு நின

By SABARISH

PC : Yashwanthreddy.g

இந்தியாவில் எண்ணற்ற கோட்டைகளும், அரண்மனைகளும் இன்றளவும் நம் பண்டைய கால பாரம்பரியத்தை சுமந்து நிற்கின்றன. இந்த வானுயர்ந்த கலைநயமிக்க கட்டிடங்கள் பல போர், அதிகாரம், செழிப்பு உள்ளிட்ட வரலாற்றை நமக்கு நினைவுகூருகின்றது. அத்தகைய ஒரு கோட்டையைக் குறித்துத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இந்தியாவும் இஸ்லாமியமும்

இந்தியாவும் இஸ்லாமியமும்

PC : Nikhil K

சேர, சோழ, பாண்டிய ஆட்சிகளுக்குப் பின் நமது நாட்டில் உள்ள பெரும்பாலான கோட்டைகள் இஸ்லாமியர்களால் கட்டமைக்கப்பட்டவையாகத்தான் உள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இன்றளவும் ஆய்வுகளையும், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் குதூப்மினார், பரத்பூர் கோட்டை
துவங்கி திப்பு காலத்திய கட்டிடங்கள், அரண்மனைகளை நாம் காண முடிகின்றது. இவற்றில் பரவலாக உள்ளது இஸ்லாமிய மன்னர்களால் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட கோட்டைகளே.

சார்மினார்

சார்மினார்

PC : Gopikrishna Narla

இந்தியாவில் இஸ்லாமிய பாரம்பரியத்தின் மீதமுள்ள சின்னங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சார்மினார் கோட்டை. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கோட்டை 1591 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பண்டைய அடையாளங்களின் கேந்திரமாக விளங்கும் இந்தக் கோட்டை பழமையின் பொலிவை சிறிதும் இழக்காமல் இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

PC : Nikhilb239

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சார்மினார் கோட்டை. ஹைதராபாத்தில் மிகச் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டையின் வயதும், இரகசியமும்

கோட்டையின் வயதும், இரகசியமும்

PC : Sanyam Bahga

1591 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சார்மினார் கோட்டைக்கு தற்போது வயது 4 நூற்ண்டுகளைக் கடந்து கம்பீரத் தோற்றம் அளிக்கிறது. பழங்கால கதைகளின் படி, கோல்கொண்டா கோட்டைக்கும் சார்மினருக்கும் இடையே இரகசிய சுரங்கப்பாதை உள்ளது. அங்கே பல புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் உள்ளது. தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத அந்த சுரங்கப்பாதை ஒரு மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

மையக் கோட்டை

மையக் கோட்டை

PC : Map

ஹைதராபாத்தின் மையப்பகுதியில் இந்த சார்மினார் கோட்டை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையைச் சுற்றிலும் வணிக வளாகங்களாக தற்போது உள்ளது. இதில், கவனிக்கத்தக்க விசயம், வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் உள்ள சாலையின் நடுவில் இக்கோட்டை உள்ளது.

பிளேக் நோயின் அடையாளம்

பிளேக் நோயின் அடையாளம்

PC : Anurag Akella

தெலுங்கானாவில் நிலவிய பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதற்கான அடையாளமாக இந்த கோட்டை கட்டமைக்கப்பட்டதாகச் சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. முகம்மது குலி குப் ஷா என்பவரால் பெர்சியாவிலிருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

PC : Chiranjeevi Ranga

ஹைதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பல அடுக்கு மாடி கட்டிடம் சார்மினார் என்பது பெருமைக்குரிய விசயமாகும். இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் கோட்டையின் உச்சியில் பூனை தலை உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்களுடன் 4 நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் தற்போதுகூட சிறிதும் சிதிலமடையாமல் உள்ளது.

சமத்துவம் காக்கும் சார்மினார்

சமத்துவம் காக்கும் சார்மினார்

PC : Rameshng

சார்மினார் இஸ்லாமிய மத மன்னரால் கட்டமைக்கப்பட்டது என்ற சான்றுகள் இருப்பினும், அப்பகுதியில் ஒரு இந்து கோவில் இருந்ததாகவும், அக்கோவிலின் மேலேதான் கோட்டை கட்டப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் எழுந்தன. ரப்பினும், அப்பகுதி மக்கள் அக்கருத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இஸ்லாமிய மக்களுடன் ஒன்றிணைந்தே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருவது இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதை மேலும் மேலும் உறுதிசெய்கிறது.

தாஜ்மகாலுக்கு இணையான காதல் கோட்டை

தாஜ்மகாலுக்கு இணையான காதல் கோட்டை

PC : Sajjusajuu

முகம்மது குலி குப் ஷா, அவருடைய மனைவி பாகமதியினை நினைவுகூரும் விதமாக ஹைதராபாத் நகரத்துடன் சேர்ந்து, சார்மினாரையும் கட்டியிருக்கிறார். இதனால்தான் என்னவோ அப்பகுதியில் காதலர்களிக் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

என்ன சிறப்பு தெரியுமா ?

என்ன சிறப்பு தெரியுமா ?

PC : Abhinaba Basu

அக்காலத்திலிருந்தே இலக்கியம், இசை போன்ற கலைபூர்வமான அம்சங்களின் பீடமாக ஹைதராபாத் நகரம் விளங்கி வருகிறது. கலையம்சங்களை பேணிவளர்ப்பதில் குறிப்பாக நிஜாம் மன்னர்களுக்கு இருந்த ஆர்வமும் இதற்கு ஒரு காரணமாகும். இதுவே இந்தியாவில் முத்துக்கு பிரசிதிபெற்ற நகரமாக ஹைதராபாத் பெயர்பெற்றுள்ளது. சார்மினார் கோட்டையில் அமைந்துள்ள கடைகளிலும், சுற்றியுள்ள நூற்றுக் கணக்கான கடைகளிலும் பல்வேறு வகையான முத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Naveenji

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல கச்சிக்குடா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. கச்சிக்குடா ரயில் நிலையத்தில் இருந்து சார்மினார் செல்ல பேருந்துவசதிகள் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X