Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர்லந்து ஒரு மணி நேரத்துல இப்படி ஒரு அதிசய கிராமம்

பெங்களூர்லந்து ஒரு மணி நேரத்துல இப்படி ஒரு அதிசய கிராமம்

பெங்களூர்லந்து ஒரு மணி நேரத்துல இப்படி ஒரு அதிசய கிராமம்

By Udhaya

இந்தியாவில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு கிராமமும், டைனோசரும் ஒன்று. எப்படின்னு கேக்குறீங்களா?!...அப்பறம் என்னங்க டைனோசர நாம டிவிலயும், தியேட்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம். அதேபோல அவங்களும் கிராமத்த டிவில மட்டும்தான பாத்திருக்காங்க?! எத்தனை பேரு இந்த காலத்துல கிராமத்துக்கு போயிட்டு இருக்காங்க? லீவு உட்டா அந்த சினிமாவ புக் பண்ணு, இந்த பப்புக்கு போவோம், அந்த ஹோட்டலுக்கு போயி அத இத சாப்பிடுவோம்...இப்படித்தானே நம்ம லீவு நாளெல்லாம் கடந்து போகுது?! யோசிச்சு பாருங்க வாரத்துல அஞ்சாறு நாள் மாங்கு மாங்குன்னு மெஷின கட்டிக்கிட்டு அழுவுறோம். அப்பறம் கிடைக்கற ஒரு நாள் ரெண்டு நாள் லீவுலயும் பப், சினிமான்னு அதே இயந்திரகதியான வாழ்க்கை. ஒரு மாற்றத்துக்கு அவர் நேட்டிவ் வில்லேஜ் ரிசார்ட்டுக்கு வந்துபாருங்க. பெங்களூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ரிசார்ட்டுல நீங்க கிராமத்து வாழ்க்கையை சிட்டி லிமிட்லயே அனுபவிக்கலாம். இப்படி ஒரு புதுவிதமான அனுபத்தை நீங்க இதுக்கு முன்னாடி அனுபவிச்சிருக்க முடியாது...வந்து பாருங்க அப்பறம் திரும்பி போக மனசு வராது!!!

 பெங்களூருக்கு அருகே ஒரு அதிசய கிராமம்

பெங்களூருக்கு அருகே ஒரு அதிசய கிராமம்


ஏறக்குறைய நட்டு கழண்ட மாதிரிதான் பாதி பேரு ஆஃபிஸ்ல வொர்க் பண்றாங்க. இங்க வந்தா உங்கள அப்படியே ரீசார்ஜ் பண்ணிவிட்ட மாதிரி அவ்ளோ புத்துணர்ச்சியா இருக்கும். சுத்தியும் விளைநிலங்கள், புல்வெளிகள், பறவைகளின் சத்தம் இதுக்கு நடுவுல நம்ம குடும்பத்தோடயோ இல்லை நண்பர்கள் கூடவோ உக்காந்து பேசிக்கிட்டே சாப்பிடற சுகம் இருக்கே...அத அததான் நாம நகர வாழ்க்கையில மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாம கில்லி தாண்டு (கிட்டிப் புள்), பம்பரம் விட்றது, பட்டம் விட்றது அப்படின்னு கிராமத்து விளையாட்டுகளையும் விளையாடி ஜாலியா என்ஜாய் பண்ணலாம்!

 அதிசய கிராமத்துக்கு செல்வோம் வாங்க

அதிசய கிராமத்துக்கு செல்வோம் வாங்க

சென்னைலயோ, பெங்களூர்லயோ டிராபிக்ல சிக்காம எங்காவது பொயிட முடியுமா?! இந்த எளவு டிராபிக்கு பயந்துகிட்டே பல லட்சம் போட்டு கார் வாங்கிட்டு பாதிபேரு கார வெளிய எடுக்காமையே இருக்காங்க. ஆனா இங்க உங்களுக்கு அந்த மாதிரி எந்த தொந்தரவும் கிடையாது. ஒரு பக்கம் தவளை கத்தறதையும், மறுபக்கம் மைனா சத்தத்தையும் தவிர வேற எந்த இரைச்சலையும் நீங்க இங்க கேக்க முடியாது. அதவிட இங்க மாட்டுவண்டில பயணம் செய்யற மாதிரி சுகத்தை ரோல்ஸ் ராய் கார்லகூட உங்களால அனுபவிக்க முடியாது. எல்லாத்தைவிட முக்கியமான விஷயம் உலகத்துலேயே மாட்டுவண்டி ஓட்டுறதுக்கு பயிற்சியும், அதுக்கு லைசன்சும் இங்க மட்டும்தான் கொடுக்குறாங்க

நேட்டிவ் வில்லேஜ் ரிசார்ட்

நேட்டிவ் வில்லேஜ் ரிசார்ட்

நீங்க புதுசா கல்யாணம் கட்டிகிட்ட ஜோடியா? அப்படின்னா அவர் நேட்டிவ் வில்லேஜ் ரிசார்ட் உங்களுக்கே உங்களுக்கா காத்துகிட்டு இருக்கு. 'என் இனிய கிராமத்து மக்களே' என்று பாரதிராஜா ஸ்டைல்ல 'ஆத்தங்கர மரமே, அரசமர அணிலே' அப்படின்னு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாட இதுதான் ஏத்த இடம். இந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை உங்களால பப்புல குதிச்சு குதிச்சு ஆடுறபோது கண்டிப்பா அனுபவிக்க முடியாது

 அழுத்தமெல்லாம் ஓடிப் போயிடும்

அழுத்தமெல்லாம் ஓடிப் போயிடும்

எத்தனைக்கு மணிக்கு தூங்கறோம், எத்தனை மணிக்கு எந்திரிக்கிறோம் அப்படின்னு கேட்டா பாதிபேருக்கு சொல்லத் தெரியாது. 25 வயசுல தலைவலி, 35 வயசுல மூட்டுவலி, 45 வயசுல நெஞ்சு வலின்னு 50 வயசுக்குள்ள டோட்டலா ஆளே காலி. அதுக்குத்தான் உடலையும், மனதையும் ரிலாக்சா வச்சிக்கணும். உங்களுக்கு எவ்ளோ வேலைப்பளு இருந்தாலும் சரி வாரம் ஒரு தடவை இல்ல மாசம் ஒரு தடவையாவது இங்க வந்து ஆயுர்வேத ஸ்பா தெரப்பி செஞ்சு பாருங்க மன அழுத்தமெல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிடும்!

Read more about: travel bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X