Search
  • Follow NativePlanet
Share
» »திருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா ? ஆச்சரியங்களை அள்ளித்தரும் பிரதேசம்!

திருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா ? ஆச்சரியங்களை அள்ளித்தரும் பிரதேசம்!

திருச்சியில் பிரசிதிபெற்ற சுற்றுலா அம்சங்கள் ஏராளமாக இருந்தாலும் ஒரு இயற்கை பொக்கிஷம் கொட்டிக் கிடக்கும் மலைப் பிரதேசம் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?

திருச்சி சுற்றுலாத் தலங்கள் என்றாலே ஸ்ரீரங்கம் கோவில், விராலிமலை முருகன் கோவில், கரிகாலனின் கல்லணை, முக்கொம்பு, திருச்சிக்கு அருகே உள்ள கும்பகோணம், தஞ்சாவூர் என பிரபலமான சுற்றுலாத் தலங்களும், அவற்றுள் அதிகமாக ஆன்மிகத் தலங்களுமே நினைவுக்கு வரும். இயற்கைச் சுற்றுலா என்றால் பெரம்பலூர் அருகில் உள்ள கொல்லிமலையைச் சொல்லுவோம். ஆனால், இவற்றை எல்லாம் கடந்து திருச்சியில் மேலும் ஒரு இயற்கை பொக்கிசம் கொட்டிக் கிடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?. உண்மையில் இந்நகரத்தில் அமைந்துள்ள இந்த மலை திருச்சிக்கு பெருமையே.

அருவிகளின் மலை

அருவிகளின் மலை

என்னது திருச்சியில் அருவியா ? அப்ப கொல்லிமலையாகத்தான் இருக்கும் என்று சொல்வோருக்கு அதிர்ச்சி என்னவென்றால் கொல்லிமலையைத் தவிர்த்து மற்றுமொரு திருச்சி மலையிலும் அருவிகள் நிறைந்துள்ளன. அட ஆமாங்க, மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூற்று அருவி என ஒரு மலையில் பல அருவிகள் இங்கே உள்ளது.

Subramonip

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வழியாக துரையூர்- திருச்சி முக்கியச் சாலையில் சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவில் கொப்பம்பட்டி அடுத்து அமைந்துள்ளது பச்சை மலை பிரதேசம். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாமல் உள்ள இந்த பச்சை மலையைச் சுற்றிலும் டாப் செங்காட்டுப்பட்டி, பேலுர் பாதுகாக்கப்பட்ட காடுகள், கேக்கரை என இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்குதுங்க.

பச்சை மலை

பச்சை மலை

எங்கையோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இருக்குதே என்று யோசிக்கிறீங்களா ?. ஆமாங்க, பச்ச மலப் பூவு, நீ உச்சி மலத் தேனு-ன்னு இளையராஜா பாடியிருப்பரே அந்த மலைதான் இது. பெயருக்கு ஏற்றமாதிரியே பசுமை நிறைந்த வனக்காடுகளைக் கொண்டுள்ளது இந்த மலை. திருச்சி, பெரம்பலூர், சேலம் என்று மூன்று பக்கத்திலும் 3 மாவட்டங்களை இணைத்து, நடுவில் ஒரே ஒரு வாகனம் செல்லும் அகலத்தில் சாலை. அதி காலை அல்லது அந்தி சாயும் நேரம் இங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டால் அmழகான மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதை கண்டு ரசிக்கலாம்.

Jaseem Hamza

பசுமைச் சாலை

பசுமைச் சாலை

பசுமைச் சாலை என்றவுடனேயே பொங்கிடாதீங்க. இது இருபுறமும் மரங்களால் சூழ்ந்த இயற்கையான பசுமைச் சாலை ஆகும். உப்பிலியாபுரம் முக்கியச் சாலையில் இருந்து சோபனாபுரத்தைக் கடந்தால் ஒரு சில மீட்டரில் மலையேற்றம் துவங்கிவிடும். பின் இருபுறங்களிலும் குளுகுளுவென்று காற்றை வாரியிரைக்கும் பச்சைக் காடுகள் தான். அடுத்தடுத்து வரும் 14 கொண்டை ஊசி முணைச் சாலைகள், பச்சைமலை மேதகம் காட்சி முணை என சாலையின் சிறப்புகளையே அடுக்கிக் கொண்டு போகலாம்.

Sivavkm

டாப் செங்காட்டுப்பட்டி

டாப் செங்காட்டுப்பட்டி

பச்சைமலைக்கு முன்னதாக நம் கண்ணில் தென்படுவது டாப் செங்காட்டுப்பட்டி என்னும் மலைக் கிராமம். இதற்கு ஒரு சில கிலோ மீட்டருக்கு முன் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றும் உள்ளது. அங்கிருந்து பார்த்தால் மலையில் சிதறிக்கிடக்கும் பாறைகளும், பசுமைப் புல்வெளிகளும் அவ்வளவு ரம்மியமாக காட்சியளிக்கும்.

Jaseem Hamza

எருமைப்பள்ளி அருவி

எருமைப்பள்ளி அருவி

செங்காட்டுப்பட்டியில் இருந்து பச்சைமலை நோக்கி பயணிக்கும் இடைப்பட்ட தொலைவில் உள்ளது எருமைப்பள்ளி அருவி. பெரியமங்கலம், சின்னமங்கலம் மலைக் கிமங்களைக் கடந்து சுமார் 150 அடி மலைச் சரிவில் இறங்கினால் தான் இதனை பார்க்க முடியும். பிற அருவிகளைப் போல் எவ்வித சத்தமுமின்றி பாயும் இந்த அருவி மலைக் காலத்தில் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

Jaseem Hamza

கோரையாறு அருவி

கோரையாறு அருவி

சுமார் 25- அடி உயரத்திலிருந்து ஆக்ரோசமாகக் கொட்டும் கோரையாறு அருவிக்கு செல்லும் பாதைகள் சற்று கடினமானது. வனத்துறையினரின் அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது. அவர்கள் அனுமதிப்பதும் அரிதே. பெரம்பலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறையை அடைந்து அங்கிருந்து அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். அங்குதான் இந்த அருவி அமைந்துள்ளது.

Karthick_1

எப்படிச் செல்வது?

எப்படிச் செல்வது?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர், சோமனபுரம் பேருந்துகள் மூலம் செல்லாம். சோமனபுரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவு மூலப் பகுதியில் செல்ல பிரத்யேக வாகனம் வேண்டும். துறையூரிலிருந்து மூலக்காடு வழியாகவும் பச்சைமலைக்கு செல்லலாம்.

Ilasun

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X