Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுலாவில் கின்னஸ் சாதனை படைத்த துபாய் வாழ் இந்தியர்- என்ன செய்தார் தெரியுமா ?

சுற்றுலாவில் கின்னஸ் சாதனை படைத்த துபாய் வாழ் இந்தியர்- என்ன செய்தார் தெரியுமா ?

யுனெஸ்கோ அமைப்பால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடங்களை வெறும் 12 மணி நேரத்தில் சுற்றிப் பார்ப்பது சாத்தியமா ?. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே மாபெரும் சவாலான போக்குவரத்து சூழலைக் கொண்டுள்ள இந்நிலையில் இது எப்படி சாத்தியம் ?. இதுதானே உங்களது மனதில் தோன்றுகிறது. ஆனால், முடியும். ஆமாங்க, துபாய் வாழ் இந்தியார்களான ஒரு தந்தை, மகன் இதனை சாத்தியமாக்கியுள்ளனர். அவர்களது திட்டப்படி நாமும் ஒரு நாளின் சரி பாதியில் இந்த ஒட்டுமொத்த இடங்களையும் சுற்றி சாதனை படைக்கலாம் வாங்க.

சரியான திட்டமிடல்

சரியான திட்டமிடல்


பொதுவாக ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்றிற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றி ரசித்துவிட வேண்டும் என்றால் முதலில் நமக்குத் தேவை சரியான திட்டமிடலாகும். எவ்வித திட்டமும் இன்றி இதனை சாத்தியப்படுத்த முடியாது. சரி, இப்போது யுனஸ்கோவால் அங்கீகாரம் செய்யப்பட்ட தலங்கள் எது ?. அவற்றில் இந்த குறிப்பிட்ட 12 மணி நேரத்தில் எப்படி சுற்றிப் பார்க்க வேண்டும் ?. போக்குவரத்து என அனைத்தையும் முன்கூட்டியே சரியாக திட்டமிட்டு பயணத்தை தொடங்குவது சிறந்தது.

பயணத்தை தொடங்கலாமா ?

பயணத்தை தொடங்கலாமா ?


காலை 6 மணி முதல் இப்பயணத்தை தொடங்குவது சரியாக இருக்கும். ஏனென்றால், இன்று நாம் சுற்றிப் பார்க்க திட்டமிடும் பகுதிகள் அனைத்தும் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த நகரங்களில் அதிகாலைப் பொழுதிலேயே பயணத்தை துவங்குவது நல்லது.

எங்கே செல்கிறோம் ?

எங்கே செல்கிறோம் ?


யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள் அதுவும் டில்லியைச் சுற்றி என்றால் ஆக்ரா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நினைவுச் சின்னங்களும், சுற்றலாத் தலங்களும் உள்ளன. அவற்றில் நம் பயணத்தை எங்கே முதலில் இருந்த தொடங்குகிறோம் என்பதையும் கவணத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தாஜ்மகால்

தாஜ்மகால்

ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தான் தாஜ்மகால். முழுவதும் பளிங்குக் கற்கலால் ஆன அழகிய கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை ஓரு ஆண்டிற்கு சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். உலகின் பாரம்பரியமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மகாலும் ஒன்றாக உள்ளது. முதலில் இதனை சுற்றிப் பார்க்க மற்றுமொரு காரணம் அதிகாலைப் பொழுதில் சூரிய ஒளியுடன் கூடிய தாஜ்மகால் தோற்றம் மேலும் ரம்மியமாக இருக்கும்.

wikipedia

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை


தாஜ்மகாலில் இருந்து வெறும் 3.5 கிலோ மீட்டர் தொலைவித் தான் ஆக்ரா கோட்டை அமைந்துள்ளது. தாஜ் மகாலை அடுத்து ஆக்ராவில் யுனெஷ்கோ சின்னமாக இந்த கோட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிறை நிலா வடிவில் யமுனை நதிக்கு எதிரே அமைந்துள்ள இந்த கோட்டையை அரை மணி நேரத்தில் சுற்றி ரசித்து விட்டு பயணத்தை தொடங்கினோம் என்றால் அடுத்த நாம் செல்ல வேண்டிய இடம் உத்திரப் பிரதேசம்.

Sdolai

பதேப்பூர் சிக்ரி

பதேப்பூர் சிக்ரி


யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி அக்பரால் 1570ம் ஆண்டில் கட்டப்பட்ட ஓர் அழகு மிகுந்த கோட்டையாகும். ஆக்ரா கோட்டையில் இருந்த உள்ளூர் போக்குவரத்தின் மூலமாகவே இதனை எளிதில் அடைந்து விடலாம். தொல்பொருள் ஆராச்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் உலகளாவிய வரலாற்று ஆய்வாலர்களுக்கு சொர்க்கபுரியாக அமைந்துள்ளது.

Marcin Białek

கியோலடியோ தேசிய பூங்கா

கியோலடியோ தேசிய பூங்கா


பதேப்பூர் சிக்கிரியில் ஒரு சில நிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த பயணத்தை தொடந்தீர்கள் என்றால் 23 கிலோ மீட்டர் பயணத்தில் பரத்பூருக்கு முன்னதாக உள்ள கியோலடியோ தேசிய பூங்காவை அடைந்து விடலாம். உள்ளூர் பேருந்த அல்லது தனியார் வாடகைக் கார்கள் ஏராளமாக இங்கே செல்ல உள்ளது. யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற இப்பூங்கா உண்மையில் ஓர் பறவைகள் சரணாலயம் ஆகும். சுற்றி ரசிக்கவும், பயணத்தால் ஏற்பட்ட சோர்வை தனிக்கவும் இது ஏற்றதாகவும் இருக்கும்.

Dr. Raju Kasambe

ஹுமாயூன் கல்லறை

ஹுமாயூன் கல்லறை


நாம் துவங்கிய இப்பயணத்திலேயே சற்று அதிக நேரம் எடுக்கும் போக்குவரத்து டில்லியில் ஹுமாயூன் கல்லறை செல்லும் வழி தான். கியோலடியோ தேசிய பூங்காவில் இருந்து சுமார் 198 கிலோ மீட்டர் தொலைவில் புதுடில்லியில் இது அமைந்துள்ளது. டில்லியில் முக்கியச் சுற்றுலாத் தலமான இது லோதி சாலைக்கும், மதுரா சாலைக்கும் நடுவே கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.

Dennis Jarvis

செங்கோட்டை

செங்கோட்டை


ஹுமாயூன் கல்லறையினை அடையும் போதே மதியப் பொழுதை கடந்திருக்கும். சிறிது ஓய்வுக்கும், உணவு இடைவேளைக்கும் பிறகு பயணத்தை தொடர்ந்தால் அடுத்த 12 கிலோ மீட்டர் தொலைவில் லால் குய்லா என்னும் செங்கோட்டையினை அடைந்து விடலாம். யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் முக்கியத் தலமாக உள்ள இதனை முழுவதுமாக சுற்றி ரசிக்க கூடுதலாகவே நேரம் பிடிக்கும்.

A.Savin

குதுப்மினார்

குதுப்மினார்

நம் பயணத்தில் கடைசியாக நாம் காண வேண்டியத் தலம் குதுப் மினார் ஆகும். செங்கோட்டையில் இருந்து வாடகைக் கார் மூலம் எளிதில் அடையச் கூடிய தலம் இது. 74 மீட்டர் உயரம் கொண்ட குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான ஸ்தூபி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. குதுப்மினார் மற்றும் இதனை சுற்றியிருக்கும் மற்ற வரலாற்று சிதலங்கள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

I, Ondřej Žváček

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X