Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு மலையேற்ற தளம் இருக்கு தெரியுமா?

சென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு மலையேற்ற தளம் இருக்கு தெரியுமா?

வணக்கம் நண்பர்களே! நாம் அனைவரும் இந்திய மண்ணின் மைந்தர்கள். இந்தியா பல்வேறு கலாச்சார அம்சங்கள் நிறைந்த நாடு. பல்லுயிர்த்தன்மையில் சிறந்து விளங்கும் இந்தியாவை துணைக்கண்டம் என்றே அழைக்கிறோம். நம் நாட்டி

By Udhaya

வணக்கம் நண்பர்களே! நாம் அனைவரும் இந்திய மண்ணின் மைந்தர்கள். இந்தியா பல்வேறு கலாச்சார அம்சங்கள் நிறைந்த நாடு. பல்லுயிர்த்தன்மையில் சிறந்து விளங்கும் இந்தியாவை துணைக்கண்டம் என்றே அழைக்கிறோம். நம் நாட்டில் மலைகளும், சமவெளிகளும் நிறைந்தே காணப்படுகின்றன. மூன்று பக்கமும் கடலும், ஒரு பக்கம் மலையும் சூழ்ந்து இருக்கிறது நம் நாடு. வடக்கு எல்லையில் மட்டுமில்லாமல், தென்னகத்தின் பெரும்பான்மை இடங்களிலும் மலைகள் காணப்படுகின்றன. கர்நாடகத்தின் தென்மேற்கு, தமிழகத்தின் மேற்கு மற்றும் கேரளத்தின் கிழக்கு பகுதிகள் மலைகளாகத்தான் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் கோடை வாழிடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் சிறந்த சுற்றுலாத் தளங்களாக விளங்குகின்றன என்பது நமக்கு தெரிந்த விசயம்தான். ஆனால் வேலூரில் ஒரு குன்று, இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத விசயமாக உள்ளது.

வேலூர் அருகே இருக்கும் இந்த குன்றைப் பற்றியும், இங்கு எப்படி செல்வது, என்னென்ன செய்வது, எப்போது செல்வது, அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் என்ன என்பன பற்றி இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து பெற மேலுள்ள பெல் ஐகானை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மேலும் எங்களை முகநூலிலும் பின் தொடருங்கள்.

 பாலமதி மலை

பாலமதி மலை

வேலூர் நகரத்திலிருந்து மிக அருகில் ஒரு மலைக்குன்று சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட காடுகள் பட்டியலில் இருக்கும் காட்டுயிர் பகுதியாகும். பல்லுயிர் தன்மை நிறைந்த காடுகளில் பெரும்பாலும் சுற்றுலாவுக்கென சிறப்பான விசயங்கள் இருக்கும். அதன்படி, பாலமதியில் என்னென் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

எங்குள்ளது

எங்குள்ளது

தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வழி வேலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது பாலமதி பாதுகாப்பு காடுகள். இங்கு அமைந்துள்ள சில குன்றுகள் மலையேற்றத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளன. எனினும் அதில் மிகச் சிறப்பான ஒரு மலை தான் பாலமதி மலை.

சரியாக சொல்லவேண்டுமானால், வேலூரிலிருந்து ஆரணி செல்லும் வழியில் இருக்கும் கண்ணமங்கலம், அங்கிருந்து ஆற்காடு, ஆற்காட்டிலிருந்து மீண்டும் வேலூர் என பயணித்தால் கிட்டத்தட்ட இந்த மலையை முழுமையாக சுற்றிய கணக்காகிவிடும்.

Dsudhakar555

எப்படி செல்வது

எப்படி செல்வது

சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு வழியாக ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் செல்லும் வழியில் புங்கனூர் எனுமிடத்திலிருந்து மலையேற்றம் செய்யலாம்.

வேலூரிலிருந்து 14 கிமீ தொலைவில் இந்த மலை அமைந்துள்ளது. வேலூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 38ல் பயணித்து விருபட்சிபுரம் தாண்டி ஓட்டேரி சாலையில் புகுந்து சிறிது நேரம் பயணித்தால் இந்த மலையை அடையலாம்.

பயண வழிகாட்டி

பயண வழிகாட்டி

இந்த பயண வழிகாட்டியை மூன்றாக பிரித்துக் கொள்வோம்.

1. சென்னையிலிருந்து வேலூர்

சென்னையிலிருந்து வேலூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுய வாகனத்தில் பயணிக்க திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் வழியாக வேலூரை அடையலாம். 3 மணி நேரம் எடுக்கும் இந்த பயணமானது கிட்டத்தட்ட 140 கிமீ தூரம் பயணத்தை கழிக்கிறது.

அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அது அம்பத்தூர் ஆவடி, வேப்பம்பட்டு, மணவூர், மோசூர், அரக்கோணம், காட்பாடி வழி வேலூரை அடைகிறது. இது சென்னையிலிருந்து வேலூர் வரும் ரயில் வழித்தடமாகும்.

2. வேலூரிலிருந்து ஓட்டேரி எக்ஸ் ரோடு

வேலூரிலிருந்து சிஎம்சி வழியாக சங்கரன்பாளையம் சந்திப்பு சாலையை கடந்து ஓட்டேரி எக்ஸ் சாலையை அடையவேண்டும்.

3. பாலமதி மலை செல்லும் சாலை

ஓட்டேரி சாலையிலிருந்து தொடர்ந்து செல்ல பாலமதி சாலை இணையும். ஓரிரு கிமீ தூரம் பயணித்த பிறகு, சில கொண்டை ஊசி வளைவுகள் வரும். இதில் பயணித்தால் மிகவும் அற்புதமான பயணத்த நம் கண்முன் கொண்டு வரும்.

மொத்தத்தில் இந்த பயணம் அரை மணி நேரத்திலிருந்து 45 நிமிடங்கள் வரைத் தான் எடுக்கும்.


PC: Youtube

 பாலமதி பற்றிய பத்து தகவல்கள்

பாலமதி பற்றிய பத்து தகவல்கள்

அ. பாலமதி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் அமைந்து உள்ளது.

ஆ. இந்த மலைக் கிராமத்துக்கு செல்ல மொத்தம் 8 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும்.

இ. இந்த மலையில் பரப்பளவு கிட்டத்தட்ட 11 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

ஈ. இதன் வடக்கு புறத்தில் காரமலை எனும் மலைப்பகுதியும், தென் பகுதியில் பெருங்காமலை என்ற மலையும் அமைந்துள்ளது. இதுவும் காண்பதற்கு சிறந்த மலை ஆகும்.

உ. பாலமதி மலையிலிருந்து காணும்போது வேலூர் நகரத்தின் இன்னொரு கோணத்தை பார்க்கமுடியும், காண்பதற்கு சிறப்பாகவும் இருக்கும்.

ஊ. பாலமதி மலையின் மேல் வேலாயுத பாணி கோவில் உள்ளது. இந்த கோவிலிருந்து இந்த மலைப் பகுதிகளின் அழகை ரசிக்க முடியும்.

எ. இந்த கோயிலின் வடக்கு பக்கத்தில் ஒரு ஆலமரம் அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும்.

ஏ. வள்ளி, தெய்வானை சுனைகள் எனும் பெயரிலான இரு சுனைகளை கோயிலின் தென் பக்கத்தில் காண முடியும். இதில் 10 அடி ஆழத்தில் நீர் தேங்கி நிற்கிறது.

ஐ. காரமலையில் அதிக மழை பெய்யும் போது மழை நீர் அருவி போல குதித்து வருவதை ஆனைக் குதிப்பு என்று சொல்லும் வழக்கம் இந்த பகுதியில் இருக்கிறது.

ஒ. பாலமதியை அடுத்துள்ள செட்டேரி எனும் குளத்தில் படகு பயணம் செய்யலாம்.

ஓ. செங்காநத்தம் எனும் பகுதியில் தேக்கு மரக் காடுகள் இருக்கின்றன. இவை மிகவும் அழகானவை.


PC: Youtube

 பொதுத் தகவல்கள்

பொதுத் தகவல்கள்

எப்போது செல்லலாம் - காலை மற்றும் மாலை

வசதிகள் - உணவு விடுதிகள், நீர் கிடைக்கின்றன. ஒருவேளை உங்களுக்கு தேவை என்றால் முன்கூட்டியே நீரைப் பெற்று செல்லவேண்டும்.

பரிந்துரைக்கப்படும் நேரம் - குறைந்த பட்சம் 2 மணி நேரங்கள் இங்கு தாராளமாக பொழுதை கழிக்கலாம்.

டிப்ஸ் - நண்பர்களுடன் செல்ல சிறந்த இடம்.

புகைப்படத்துக்கு அனுமதி - உண்டு

PC: Youtube

 சென்று வந்தவர்களின் கருத்துகள்

சென்று வந்தவர்களின் கருத்துகள்

சென்னையிலிருந்து பைக் ரைட் செல்ல சிறந்த இடமாக இது அமையும்.

வேலூரில் இருக்கும் பாலமதி கோயில் நான் சென்று வந்த கோயில்களில் சிறந்த கோயில்களில் ஒன்றாகும்.

வேலூரில் இருந்து அரை நாளில் செல்ல தகுந்த சிறப்பானதொரு சுற்றுலாத் தளம்

PC: Youtube

போக்குவரத்து தொடர்பான தகவல்கள்

போக்குவரத்து தொடர்பான தகவல்கள்

ரயில் மூலமாக

காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம்

வேலூர் கண்டான்மென்ட் ரயில் நிலையம்

ஜோலார் பேட்டை ரயில் நிலையம்

அரக்கோணம் ரயில் நிலையம் ஆகியவை அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும்.


சாலை மூலமாக

கோயம்பேடு மாநகரப் பேருந்து நிலையம்,

வேலூர் பேருந்து நிலையம்

அரக்கோணம் பேருந்து நிலையம்

பெங்களூரு மற்றும் காஞ்சிபுரத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமானம்

சென்னை, திருப்பதி, பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் அருகில் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X