Search
  • Follow NativePlanet
Share
» »25 வயசுக்குள்ள இதெல்லாம் பண்ணிடுங்க பாஸ்..!!

25 வயசுக்குள்ள இதெல்லாம் பண்ணிடுங்க பாஸ்..!!

By Naveen

வாழ்க்கை ஒரு வட்டம்னு எல்லாரும் சொல்வாங்க ஆனால் உண்மையில் வாழ்க்கை ஒரு திரும்பிவரவே முடியாத ஒருவழிப்பாதை மாதிரி. கடந்த போகும் ஒவ்வொரு நொடியும் இனி எப்போதும் நமக்கு திரும்பக்கிடைக்கப்போவதில்லை. கிடைத்த இந்த அற்புதமான வாழ்கையில் பணம், புகழ், அங்கீகாரம்னு ஏதோவொன்றின் பின்னால் ஓடிக்களைத்த பின் நமக்கென மீதமிருக்கும் நேரம் தீர்ந்துபோயிருக்கும்.

அதனால் உடம்பில் தெம்பிருக்கும் போதே அற்புதமான இந்த வாழ்க்கையை ஆசைதீர கொண்டாட வேண்டும். வாருங்கள், 25 வயதுக்குள் நாம் நிச்சயம் செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ரோஹ்டங் கணவாய் பயணம்:

ரோஹ்டங் கணவாய் பயணம்:

இந்தியாவில் பயணவிரும்பிகள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய கனவுப்பயணம் என்று சொல்லப்படுவது 'மணாலி - லெஹ்' பயணம் தான். இந்த பயணத்தின்போது நாம் நிச்சயம் இந்த ரோஹ்டங் கணவாயின் வழியாகத்தான் பயணித்தாக வேண்டும்.

இந்த ரோஹ்டங் கணவாயின் வழியாக பயணிக்கும் எவரும் அதன் பேரழகில் நிச்சயம் சொக்கிப் போய்விடுவார்கள் என்பது நிச்சயம்.

ரோஹ்டங் கணவாய் பயணம்:

ரோஹ்டங் கணவாய் பயணம்:

குல்லு மற்றும் லாகுல்-ஸ்பிதி பள்ளத்தாக்குகளை பிரிக்கும் இந்தரோஹ்டங் கணவாய் கடல்மட்டத்தில் இருந்து 13,050 அடி உயரத்தில் அமைந்திருப்பதினால் கடுமையான பனிப்பொழிவினால் வருடத்தின் பெரும்பான்மையான நாட்கள் பனியால் மூடப்பட்டிருக்கிறது.

எனினும் கோடை காலம் இந்த கணவாயின் ஊடாக பயணம் செய்ய சிறந்த நேரமாகும்.

ரோஹ்டங் கணவாய் பயணம்:

ரோஹ்டங் கணவாய் பயணம்:

நீண்டதூர பைக் பயணம் உங்களுக்கு பிடிக்குமெனில் ரோஹ்டங் கணவாய்க்கு நண்பர்களுடன் கட்டாயம் ஒருமுறை வாருங்கள்.

ஆழ்கடல் நீச்சல்

ஆழ்கடல் நீச்சல்

ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் சாகசம் விரும்பும் எல்லோரும் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். இந்தியாவில் குறிப்பாக அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதிகள் ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

ஆழ்கடல் நீச்சல்

ஆழ்கடல் நீச்சல்

அந்தமானில் போர்ட்பிளேர், ஹேவ்லாக் தீவு, நீல் தீவு போன்ற இடங்களில் இந்த ஸ்கூபா டைவிங் நடக்கிறது.

ஸ்கூபா டைவிங் செய்ய தேவையான உபகரணங்களை அந்ததந்த தனியார் ஏஜன்சிகளே வழங்குகின்றன. ஆழ்கடலின் பேரழகை நேரில் காண இதுவே ஒரே வழியாகும்.

சன்ஸ்கர் பனியாற்றில் ட்ரெக்கிங்:

சன்ஸ்கர் பனியாற்றில் ட்ரெக்கிங்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லெஹ் பகுதியில் உள்ள சன்ஸ்கர் ஆறு பனி காலத்தில் முற்றிலுமாக உறைந்த பிறகு அதன்மேல் கிட்டத்தட்ட 75கி.மீ ட்ரெக்கிங் செல்லலாம்.

இந்த ட்ரெக்கிங் பயணத்தை முடிக்க 9 நாட்கள் ஆகும். இது தான் இந்தியாவில் இருக்கும் மிக ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த சாகச பயணமாக சொல்லப்படுகிறது. சவால்களை சந்திக்கும் தைரியம் இருந்தால் பிப்ரவரி மாதத்தில் லெஹ் வர மறந்துவிடாதீர்கள்.

கோவா சுற்றுலா:

கோவா சுற்றுலா:

இந்தியாவில் பிறந்த எவரும் இளமையில் தவற விடகூடாத விஷயங்களில் ஒன்று நண்பர்களுடன் கோவா சுற்றுலா செல்வது தான். குடி, கொண்டாட்டம் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இளமையை கொண்டாட கோவாவை விட சிறந்த ஓரிடம் இருக்க முடியாது.

Daniel Incandela

கோவா சுற்றுலா:

கோவா சுற்றுலா:

கோவா சுற்றுலா செல்ல சிறந்த நேரம் டிசம்பர் மாதம் தான். டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிவிடுகின்றன.

அஞ்சுனா, பலோலம் கடற்கரைகளில் விடியவிடிய டிரான்ஸ் இசை பார்டிகள் நடைபெறுகின்றன. உலகின் முன்னணி டீஜேக்கள் பங்குபெறும் சன்பர்ன் பார்ட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பார்டி கொண்டாட்டங்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

உப்புப்பாலைவனம்:

உப்புப்பாலைவனம்:

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ரன் ஆப் கட்ச் என்ற உப்புப்பாளைவனம் உலகில் இருக்கும் தனித்துவமான புவியமைப்புகளில் ஒன்றாகும். பல சதுர கி.மீ அளவுக்கு பறந்து விரிந்திருக்கும் இந்த உப்பு பாலைவனத்தின் வழியாக ஒரு சாலை ஒன்றும் செல்கிறது.

உப்புப்பாலைவனம்:

உப்புப்பாலைவனம்:

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக நவம்பர் மாதம் முதல் ஹோலி பண்டிகை நடைபெறும் பிப்ரவரி மாதம் வரை ரன் மஹாஉத்சவ் என்ற விழா கொண்டாடப்படுகிறது.

இதில் குஜராத்திய கலாச்சர கலைநிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெறுகின்றன. இதற்கென பிரதேய்கமாக அமைக்கப்படும் டென்ட்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கிக்கொள்ளலாம்.

கஜுராஹோ கோயில்:

கஜுராஹோ கோயில்:

காமத்தை போற்றிக்கொண்டாடிய நமது இந்திய கலாசாரத்தின் அடையாளமாக திகழும் கஜுராஹோ கோயில்கள் 25 வயதுக்குள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாகும். ஜெயின் மற்றும் ஹிந்து மத கட்டிடக்கலையின் சங்கமமாக இருக்கும் இக்கோயிலின் சுவர்களின் காமம் சொட்டும் மைதுன சிற்பங்கள் குடையப்பட்டுள்ளன.

கஜுராஹோ கோயில்:

கஜுராஹோ கோயில்:

யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தில் மொத்தம் 20 கோயில்கள் எஞ்சியிருக்கின்றன. மற்ற பல கோயில்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டிருக்கின்றன.

ரூபகுண்டு ஏரி:

ரூபகுண்டு ஏரி:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளரூபகுண்டு ஏரி இந்தியாவிலிருக்கும் மிகவும் மர்மமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது. கோடை காலத்தில் நீர் உருகும் போது இந்த ஏரியின் உள்ளே இருக்கும் எலும்புக்கூடுகளை பார்க்க முடியும்.

கடல் மட்டத்தில் இருந்து16,499 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஏரியை கடுமையான ட்ரெக்கிங் பயணத்திற்கு பிறகே சென்றடைய முடியும்.

ரூபகுண்டு ஏரி:

ரூபகுண்டு ஏரி:

இந்த பகுதியில் காணப்படும் எலும்புக்கூடுகள் பற்றி ஏராளமான கதைகள் உலாவருகின்றன. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைப்படி முன்னொரு காலத்தில் இந்த பகுதியை ஆண்ட கனுஜ் என்ற ராஜா தன் மனைவி மற்றும் பணியாட்களுடன் அவர்களின் குல தெய்வமான நந்தாதேவியை வழிபட சென்றதாகவும், அப்படி செல்லும் வழியில் புயலில் மாட்டிக்கொண்டு உயிரிழந்ததாகவும் அவர்களின் எலும்புகளே இன்றும் இங்கிருப்பதாக சொல்லப்படுகிறது.

ரூபகுண்டு ஏரி:

ரூபகுண்டு ஏரி:

உடலில் பலமும் மனதில் உற்சாகமும் நிறைந்திருக்கும் இளமை பருவத்தில் மட்டுமே சாத்தியப்படும் விஷயங்களை நிச்சயம் செய்யத்தவறிவிடாதீர்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X