Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியாவின் சிறந்த இரண்டு சுற்றுலாத்தலங்கள் எவை தெரியுமா?

வட இந்தியாவின் சிறந்த இரண்டு சுற்றுலாத்தலங்கள் எவை தெரியுமா?

ஆச்சர்யங்களுக்கும், அற்புதங்களுக்கும் இந்தியாவில் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு 40 கி.மீ தொலைவுக்கும் பேசும் மொழி, பண்பாடு, திருமணம் செய்யும் முறை, சாப்பிடப்படும் உணவுகள், புவியியல் அமைப்புகள் என அனைத்தும் வேறுபடுவதால் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கணத்திலாவது தன் சொந்த நாட்டினுள்ளேயே வெளிநாட்டவர்கள் போல உணர்த்திடும் பாக்கியம் பெற்றிருப்பர். அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு செல்லும் போது அங்கு வாழும் மக்களின் பண்பாடு, பேரழகு வாய்ந்த புவியமைப்பு போன்றவற்றை பார்த்து திகைப்படையாதவர்களே இருக்க முடியாது.

இதுவரை வட இந்தியாவினுள் பயணித்தது இல்லை என்றால் வாருங்கள் அங்கு நாம் நிச்சயம் தவற விடக்கூடாத அற்புதமான இடங்களுக்கு ஒரு பயணம் போகலாம்.

கோடை கால சிறப்பு சலுகை: மேக் மை ட்ரிப் தளத்தில் ஹோட்டல் பாக்கிங் கட்டணங்களில் 35% தள்ளுபடி பெறுதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்.

லடாக் :

லடாக் :

இந்தியர்களை விட வெளிநாட்டவர்கள் அதிகம் சுற்றுலா வரும் இந்திய சுற்றுலாத்தலம் இந்த லடாக் ஆகும். இத்தனை அழகான இடத்தை வாழ்கையில் பார்த்ததே இல்லை என்று இங்கு வரும் ஒவ்வொருவரையும் சொல்ல வைக்கும் இந்த லடாக் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இமய மலைத்தொடரின் மேல் அமைந்திருக்கிறது.

Photo: FLickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நம் மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் ஏராளமாக உள்ளன. லெஹ், சன்ச்கர், டிராஸ் பள்ளத்தாக்கு, நுப்ரா பள்ளத்தாக்கு, சாதர் - பனிமலை ஏற்றம், மனாலி - லெஹ் வரையிலான அதி அற்புதமான சாலைப்பயணம், சால்ட் லேக் போன்ற இடங்கள் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை ஆகும்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

வண்டியிலோ அல்லது காரிலோ உங்களுக்கு பயணம் செய்திட பிடிக்கும் எனில் உங்கள் 'மோட்டார் சைக்கிள்' டைரியில் கட்டாயம் இடம் பெற வேண்டிய விஷயம் மணலி - லெஹ் சாலைப் பயணமாகும். 479கி.மீ தொலைவுள்ள இந்த சாலைப்பயணம் இந்தியாவின் மிகச்சிறந்த பயண அனுபவத்தை தரும் விஷயமாக புகழப்படுகிறது.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

அது மட்டும் இல்லாமல் அற்புதமான இயற்கை காட்சிகள் நிரம்பிய நுப்ரா பள்ளத்தாக்கு, ஏகாந்தமான அமைதி நிலவும் ரங்க்டும், வானமே பூமிக்கு வந்துவிட்டது போன்ற பிரதிபலிப்பை கொண்டுள்ள பாங்காங் ஏரி, உறைந்த நதியில் ட்ரெக்கிங் பயணம் செல்லக்கூடிய சாதர் நதி போன்ற இடங்களுக்கும் நாம் கட்டாயம் சென்று வர வேண்டும்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

நுப்ரா பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் சிறு ஓடை.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக்கின் அற்புதமான பாங்காங் ஏரியை நோக்கி செல்லும் பாதை.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

விவரிக்க முடியாத அழகுடன் திகழும் பாங்காங் ஏரி.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

ஆமீர் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான 3 இடியட்ஸ் திரைப்படமும், அதன் தமிழாக்கமான 'நண்பன்' படத்தில் வரும் சில காட்சிகள்இங்கே படமாக்கப்பட்டுள்ளன.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இங்கு சுற்றுலா வர தகுந்த காலகட்டமாகும்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் இந்திய திபெத்திய எல்லையை ஒட்டியிருப்பதால் கலாச்சார ரீதியாக மற்ற பகுதிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது. இங்கே ஏராளமான புத்த மடாலயங்கள் உள்ளன. புதுமையான கலாச்சாரம் மற்றும் அற்புதமான இடங்களை காண விரும்புகிறவர்களின் கனவு தேசம் இந்த லடாக் ஆகும்.

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

லடாக் :

லடாக் :

லடாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் சில அழகான புகைப்படங்கள்.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

வாழ்கையில் ஒரு நாளாவது ராஜா மாதிரி வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு . இனியாரும் படை திரட்டி கொண்டு போய் நாடு பிடித்து ராஜாவாகி விடப்போவதில்லை. சரி, அப்படியென்றால் என்ன செய்வது?. அதற்கான விடை மிக எளிது. ராஜஸ்தானுக்கு பயணப்படுங்கள். ராஜாவை போல சில நாட்கள் வாழ்ந்திடுங்கள். அது எப்படி சாத்தியம் என்பதை அடுத்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

லேக் பேலஸ் :

ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகஉதைப்பூரில் பிசோலா ஏரியின் நடுவே ராஜ மிடுக்குடன் அமைந்திருக்கிறது லேக் பேலஸ் எனப்படும் ஜக் நிவாஸ் ஆடம்பர தங்கும் விடுதி.

Photo: Flikr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தங்கும் விடுதியானது உலகின் மிக ரோமேண்டிக்கான ஹோட்டல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசர்களின் ஆட்சி காலத்தில் அரண்மனையாக இருந்த இது சுதந்திரத்திற்கு பின்னர் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

ஏரியின் நடுவே இருப்பதால் படகு மூலம் மட்டுமே இதனை அடைய முடியும். இங்குள்ள அறைகளில் அரசர்களின் காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் இன்றும் இங்கே புதுப்பொலிவுடன் பராமரிக்கப்படுகின்றன. இங்கு ஒரு இரவு தங்க குறைந்தது 20,000 ரூபாயாவது ஆகும். இருந்தாலும் என்ன ராஜாவை போல வாழ்ந்திட வேண்டும் என்றால் கொஞ்சம் செலவு செய்வதில் தவறேதும் இல்லைதானே.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

லேக் பேலசின் உட்புற தோற்றம் அரண்மனைகளுக்கே உரிய அழகுடன் மிளிர்கிறது.

Photo; Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

இதர சுற்றுலாத்தலங்கள் :

இந்த சிட்டி பேலசை தவிரவும் ராஜஸ்தான் முழுக்கவே ஏராளமான கோட்டைகள் இருக்கின்றன. குறிப்பாக ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மஹால், ஜெய்சால்மர் நகரின் நடுவே இருக்கும் ஜெய்சால்மர் கோட்டை, ஜோத்பூர் நகரில் இருக்கும் மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை, உமைத் பாவண் அரண்மனை போன்றவற்றை வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் சென்று சுற்றிப்பார்த்திடுங்கள். பெரும்பாலான கோட்டைகளை யானையின் மீது சவாரி செய்தபடியும் சுற்றிப்பார்க்கலாம்.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

யானை மீது அமர்ந்து பலமுறை சவாரி செய்தாகிவிட்டது என்று நினைப்பவர்களுக்காகவே இருக்கிறது 'ஹாட் ஏர்' பலூன் சவாரி. இந்த பலூனில் வானில் மிதந்தபடியே ராஜஸ்தானின் அழகை ரசிக்கலாம்.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

உலகின் மிகப்பெரிய தனியார் வசிப்பிடங்களில் ஒன்றான உமைத் பவான் அரண்மனை.

Photo: Flickr

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் :

மணல் கற்களால் கட்டப்பட்ட ஜெய்சால்மர் கோட்டை இரவில் ஏதோ தங்கத்தினால் கட்டப்பட்டது போன்று ஒளிர்கிறது.

Photo: Flickr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X