Search
  • Follow NativePlanet
Share
» »1700ம் ஆண்டிலேயே அறுபது அடி ஆழத்தில் தரைத் தளத்தில் கட்டப்பட்ட கோட்டை! எங்கே தெரியுமா?

1700ம் ஆண்டிலேயே அறுபது அடி ஆழத்தில் தரைத் தளத்தில் கட்டப்பட்ட கோட்டை! எங்கே தெரியுமா?

1700ம் ஆண்டிலேயே அறுபது அடி ஆழத்தில் தரைத் தளத்தில் கட்டப்பட்ட கோட்டை! எங்கே தெரியுமா?

இந்தியாவில் மெருகு குலையாது காட்சியளிக்கும் கோட்டைகளில் இந்த உத்கீர் கோட்டையும் ஒன்று. இது மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டது. அப்படி இருந்தும் இன்றுவரை நல்ல முறையில் இருப்பதற்கு இதன் கட்டிடக் கலை நுணுக்கங்கள் காரணமாகும். அதைப் பற்றியும், இந்த கோட்டையின் மற்ற அற்புதங்கள் பற்றியும் நாம் இந்த பதிவில் காண்போம்.

All photos taken from

commons.wikimedia.org

 எங்குள்ளது

எங்குள்ளது

மகராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோட்டை. முன் பஹ்மனி காலத்துக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த கோட்டை மிகவும் அழகானது. அனைவராலும் ரசிக்கப்படக்கூடியது. இந்திய வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு உடன் படிக்கை இங்கு கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

புகைப்பட ஆர்வலர்களே!

புகைப்பட ஆர்வலர்களே!

இந்த கோட்டை மிகவும் அழகானது என்பதுடன், புகைப்படம் எடுக்கவும் சிறப்பானதாக இருக்கும். புகைப்பட ஆர்வலர்கள் ஒரு நாள் முழுவதையும் இங்கு கழித்து புகைப்படங்கள் எடுக்கலாம். விதவித மான பின்னணிகளில் செல்பி எடுக்கவும் நல்ல ஒத்துழைக்கும் இந்த இடம்.

மராத்தா நிஜாம் ஒப்பந்தம்

மராத்தா நிஜாம் ஒப்பந்தம்

1700ம் ஆண்டுகளில் மராத்தாக்களும் நிஜாம் ராஜ வம்சத்தினரும் இந்த கோட்டையில்தான் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர்.

அகழி

அகழி


நன்கு பராமரிக்கப்பட்டு காட்சியளிக்கும் இந்த கோட்டையை சுற்றி ஆழமான அகழி அமைந்திருக்கிறது. எளிதில் எதிரிகள் இந்த கோட்டைக்குள் நுழையாதவாறு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளனர்.

 உலகிலேயே எங்குமில்லாத

உலகிலேயே எங்குமில்லாத

அறுபது அடி ஆழத்தில் தரை மட்டத்திற்கு கீழே கட்டப்பட்டிருக்கும் அரியணை அறை இதன் சிறப்பம்சமாகும். ஏனென்றால் 1700ம் ஆண்டுகளிலேயே இப்படி ஒரு அம்சம் கொண்ட அறை எங்கேயும் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

 கல்வெட்டுத் தகவல்கள்

கல்வெட்டுத் தகவல்கள்

சில அரிய பெர்ஷிய மற்றும் அரபிக் கல்வெட்டுக்குறிப்புகளையும் இங்கு பார்க்கலாம். இதில் ராஜ வம்சத்தினரின் குணநலன்கள், வலிமை பற்றி பல தகவல்கள் உள்ளன. போர் ஒப்பந்தம் உட்பட பல அரிய வரலாற்று தகவல்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

நந்தேட் நகரத்திலிருந்து லாதூர் செல்லும் வழியில் இந்த சாக்கூர் அமைந்திருக்கிறது. இது இங்குள்ள சிவன் கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு பல அரிய மூலிகைகள் மற்றும் மருந்து தாவரங்கள் கிடைக்கின்றன. லாதூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்துக்கு சாலை மார்க்கமாக 30 நிமிடங்களில் வந்து விடலாம். குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இங்குள்ள ஒரு உல்லாசப்பொழுது பூங்காவுக்கும் விஜயம் செய்யலாம்.

Read more about: travel fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X