Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவை சிறப்புகள் என்னென்ன ?

தென்னிந்தியாவை சிறப்புகள் என்னென்ன ?

By Naveen

என்னதான் இந்தியா ஒரே தேசம் என்று சொல்லப்பட்டாலும் அதன் பறந்து விரிந்த பன்முகத்தன்மை மிகப்பெரியது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் உள்ள வேறுபாடுகள் ஏராளம்.

தென்னிந்தியா ஒரு கலாசார சிறப்பு வாய்ந்த இடமாகும். நமக்கு தெரிந்த வரலாற்றுப்படி இதுவரை எந்தவொரு அந்நியப்படை எடுப்புக்கும் ஆளாகாத பகுதியாக திகழும் தென்னிந்தியாவில் அந்த மண்ணின் கலாச்சாரம் எவ்வித மாற்றமும் இன்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்வதை காணலாம்.

அப்படிப்பட்ட தென்னிந்தியாவின் ஐந்து சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கோயில்கள்:

கோயில்கள்:

தென்னிந்தியாவின் ஆகப்பெரும் பெருமைகளில் முதன்மையானது இங்கிருக்கும் கோயில்கள் தான். வட இந்தியாவில் பல்லாயிரம் கோயில்கள் படையெடுப்புகளின் காரணமாக அழிந்துபோயிருக்கிறது.

கோயில்கள்:

கோயில்கள்:

ஆனால் தென்னிந்திய கோயில்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொன்மை மாறாமல் தொடர்ந்து இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

தென்னிந்தியாவில் இருக்கும் சில பிரசித்திபெற்ற கோயில்கள் பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

படம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

கோயில்கள்:

கோயில்கள்:

சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெரிய கோயில் நவீன உலகின் அதிசயங்களுள் ஒன்றாக ஆயிரம் ஆண்டுகளை கடந்து வானுயர்ந்து நிற்கிறது. இங்கே சிவபெருமான் பிரகதீஸ்வரராக காட்சி தருகிறார்.

மேலும் இக்கோயிலில் தான் இந்தியாவின் மிகப்பெரிய நந்தி சிலை இருக்கிறது.

கோயில்கள்:

கோயில்கள்:

சோழர்களின் அடையாளமாக பெரிய கோயில் இருப்பதை போல மதுரையை ஆண்ட பாண்டியர்களின் பெருமையை காலங்கடந்தும் தாங்கி நிற்கிறது மீனாட்சியம்மன் கோயில்.

உலகின் மிகநீளமான கற்கூரையை கொண்ட கோயில் என்ற பெருமையுடைய இக்கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது.

கோயில்கள்:

கோயில்கள்:

இவை தவிர ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில், ஆந்திராவில் இருக்கும் லேபாக்ஷி கோயில், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், மங்களூர் மூகாம்பிகை திருக்கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற எண்ணற்ற கோயில்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானவை தமிழகத்தில் தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் விழாவும், ஆகஸ்ட் மாதம் கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையுமே ஆகும்.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

சாதி மத பேதமின்றி அந்நிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவான பண்டிகையாக பொங்கலும் ஓணமும் கொண்டாடப்படுகின்றன. இப்பண்டிகைகளின் போது அம்மண்ணுக்கே உரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டும்,பாம்பு படகு போட்டியும் நடக்கின்றன.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

இம்மண்ணின் மரபை அறிந்துகொள்ள இந்த பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக இருப்பதினால் பொங்கல் மற்றும் ஓணம் சமயத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் வருகை தருகின்றனர்.

படம்: பாம்பு படகு போட்டி

உணவுகள்:

உணவுகள்:

தென்னிந்திய உணவுகளை பார்த்தவுடைனேயே பசியை தூண்டவல்லவை. தென்னிந்திய உணவுகளிலேயே மிகப்பிரபலமானவை என சொல்லப்படுவது செட்டிநாடு சமையல் உணவுகள் தான்.

உணவுகள்:

உணவுகள்:

பிரத்யேகமாக அரைக்கப்பட்ட மசாலா பொருட்களை கொண்டு சமைக்கப்படும் செட்டிநாடு உணவுகளில் செட்டிநாடு சிக்கன் குழம்பு, செட்டிநாடு மட்டன் வறுவல், மீன் குழம்பு போன்றவை அதிசுவையானவை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X