Search
  • Follow NativePlanet
Share
» »தெரியுமா இவையனைத்தும் உலகச் சிறப்பு வாய்ந்த இடங்கள்?

தெரியுமா இவையனைத்தும் உலகச் சிறப்பு வாய்ந்த இடங்கள்?

இந்த தென்னிந்திய இடங்களுக்கெல்லாம் உள்ள சிறப்பு என்ன தெரியுமா?

By Udhaya

உலகின் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையலில் யுனெஸ்கோ அமைப்பு சிறப்பு வாய்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து பட்டியலிடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள இடங்களைப் பற்றி காண்போம்.

சோழர்களின் கோவில்கள்

சோழர்களின் கோவில்கள்

தமிழர்களின் பெருமைமிக்க சோழ வம்சத்தின் ஆட்சியில் கட்டப்பட்ட சோழ கோவில்கள் இன்றும் பழமை மாறாமல் அதே கம்பீரத்துடன் உள்ளன.

சோழர்கள் வரைகலை மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றவர்கள். 11 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்

முதலியன் இவர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.

PC: Girish Gopi

கோவா கான்வென்ட் மற்றும் சர்ச்

கோவா கான்வென்ட் மற்றும் சர்ச்

கோவா தலைநகரிலிருந்து 10 கிமீ கிழக்கில் அமைந்துள்ளது பழைய கோவா. பல வருடங்களுக்கு முன்பு போர்த்துகீசிய தலைநகராக இருந்தது இந்த இடம்.

பாம் இயேசுவின் புனிதத்தலமாக கருதப்படும் இந்த பசிலிக்கா இந்தியாவின் சிறந்த கிறித்துவ ஆலயம் எனப் பெயர் பெற்றது. யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


PC: Ramesh Lalwani

ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்கள்

ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்கள்

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்கள் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். துங்கபத்திரை நதியின் கிளையாற்றில் அமைந்துள்ள ஹம்பி, விஜயநகர பேரரசின் ஆட்சிக்கு

கீழ் இருந்தது. அவர்களின் தலைநகரமாகவும் விளங்கியது.

PC: Adam Jones

ஹம்பி

ஹம்பி

மிகப்பிரபலமான வீரபக்ச கோவில் ஹம்பியில் அமைந்துள்ளது.


PC: Jean-Pierre Dalbéra

மகாபலிபுர நினைவுச் சின்னங்கள்

மகாபலிபுர நினைவுச் சின்னங்கள்

மகாபலிபுர நினைவுச் சின்னங்கள் பல்லவர்கள் காலத்தில் 7 மற்றும் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மாமல்லபுரம் (அ) மகாபலிபுரத்தை அவர்கள் தங்களின் தலைநகராகக் கொண்டு ஆட்சி

புரிந்துள்ளனர்.

வளங்கள் நிறைந்த கடற்கரை ஓரங்களில் கிட்டத்தட்ட 40 நினைவு சின்னங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

PC: J'ram DJ

 நீலகிரி மலை ரயில்வே

நீலகிரி மலை ரயில்வே

நீராவி இயந்திரத்தில் இயக்கப்படும் பழமை மாறாத ரயில் இன்ஜின்களை கொண்ட ரயில்வே நீலகிரி ரயில்வே. ஊட்டி மலை ரயில் பயணம் என்பது எல்லோரது கனவாக இருக்கும்.

ஏனென்றால் மலையின் மீது மெதுவாக பயணிக்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது ஊட்டி மலை ரயில் பயணம்.

PC: Sinna P J

பட்டடக்கல்

பட்டடக்கல்

சாளுக்கிய வம்சத்தினர் ஆண்டபோது கட்டப்பட்ட இவ்விடம் பழங்கால நினைவுச் சின்னங்களின் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள இது ஒன்பது இந்து கோவில்களையும், ஒரு சமணக் கோவிலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

PC: Ankur P

மேற்கு தொடர்ச்சிமலை

மேற்கு தொடர்ச்சிமலை

உலகின் சிறந்த மலைத் தொடர்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு

இவற்றில் பரந்து விரிந்த மலையில் மூலிகைகள், பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள் உள்ளன.

PC: Navaneeth KN

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X