Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் இதுவரை கேள்விப்படாத அருவிகள் நம்ம ஊரிலேயே இருக்கு தெரியுமா?

நீங்கள் இதுவரை கேள்விப்படாத அருவிகள் நம்ம ஊரிலேயே இருக்கு தெரியுமா?

சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.தமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயம

By Udhaya

சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.தமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயமுறுத்தினாலும், பயணிகளை குளிரூட்டவும், களிப்பூட்டவும் சில அருவிகள் தவறுவதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குளித்து கும்மாளமிடவும், அல்லது சிறப்பாக எழிலை கண்டு ரசித்துவிட்டு வரவும் மிக அழகான நதிகள் தமிழகத்தில் இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் என்னென்ன அருவிகள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

 மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

 திருமூர்த்தி அருவி.

திருமூர்த்தி அருவி.

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஓலக்குருவி நீர்வீழ்ச்சி

ஓலக்குருவி நீர்வீழ்ச்சி


மிக முக்கியமான சுற்றுலாத் தளமான ஓலக்குருவி நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஓலக்கருவி நீர்வீழ்ச்சி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல்வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்நீர்வீழ்ச்சி, அதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது. நாகர்கோயில் நகரத்தில் இருந்தே நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இருக்கிறது. இருப்பினும் நீர்வீழ்ச்சிக்கு சற்று தொலைவிலேயே இந்த சாலை முடிவுறுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய சிறிது தொலைவு நடக்கவேண்டும். இந்த நடைபாதை சிறிது தொலைவே என்றாலும் நடைபாதையைச் சுற்றி இருக்கும் இயற்கை சூழல் காண்போரை மயங்கச் செய்யும் அழகுடன் விளங்குகிறது.

en.wikipedia.org

மாசிலா நீர்வீழ்ச்சி

மாசிலா நீர்வீழ்ச்சி


ஆகாய கங்கை போல மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இல்லையென்றாலும் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா நீர்வீழ்ச்சி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. இதன் இயற்கைச் சூழலுக்காகவே பல சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கே நேரம் செலவிடுகின்றனர். நீர்வீழ்ச்சியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாசிலா அருவியில் குளிப்பதை சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். நீர்வீழ்ச்சியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோவிலில் இருந்து பார்க்கும் போது தெரியும் பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் வேறு உலகத்திற்கு சென்றதை போன்ற இன்பத்தை தருவதாக இருக்கிறது. வியாபாரமயம் ஆகாத கொல்லிமலையின் பல அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்துள்ள அருவிதான் கும்பக்கரை நீர்வீழ்ச்சியாகும். தேனியிலிருந்து 20 கிமீ தொலைவும், பெரிய குளத்திலிருந்து 9 கிமீ தொலைவும் உள்ள கும்பக்கரை என்ற இடத்தில் தான் இந்த அருவி உள்ளது. இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் கீச்சிடும் குரல்கள் சுற்றூலாப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பளிக்கும் அம்சமாகும். இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், மிருகங்களின் பெயரால் அழைக்கப்பட்டு வரும் அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுந்து சேகரிக்கப்பட்டு விழுந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தின் எந்த நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு, கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

wikipedia.org

கட்டாரி அருவி

கட்டாரி அருவி

கட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது மற்றும் லா நீர்வீழ்ச்சி ஆகியன நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளன. மழைக்காலத்தில் மலை உச்சியில் இருந்து அதிவேகமாக விழும் நீர் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த இடத்தின் உயரமும் இதன் சுற்றுப் புறமும் முடிவே இல்லாத உயரத்தில், வானத்தில் இருந்து பூமிக்கு நீர் வீழ்வது போன்ற தோற்றத்தை கட்டாரி நீர்வீழ்ச்சிக்கு அளிக்கிறது.

wikimedia.org

Read more about: travel waterfalls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X