Search
  • Follow NativePlanet
Share
» »ஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை

ஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை

ஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை

ஆன்மீகம் என்றாலும் சுற்றுலா என்றாலும் இந்தியாவுக்கு அதிலும் தமிழ்நாட்டுக்கு என்று உலக அரங்கில் தனிபெருமை உள்ளது. சோழனின் கட்டிடங்கள், இந்திய கடற்கரைகள், முகலாய கட்டிடக்கலை என பல அருமைபெருமைகள் நம் பலருக்கு தெரிந்ததுதான். ஆனால் நமக்கு தெரியாமல் பல பொக்கிஷங்கள் நம் தமிழ்நாட்டில் ஒளிந்துள்ளன.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், இன, மொழி அரசியல் காரணமாகவும் தமிழர்களின் பெருமை வெளியே தெரியவிடாமல் சிலர் செய்த சதி இப்படி ஒரு அருமையான சுற்றுலாத்தளம் பற்றி வெளியில் தெரியாமலேயே உள்ளது. வாருங்கள் அதைப் பற்றி இப்போது காண்போம்.

எங்குள்ளது

எங்குள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை எனும் அதி அற்புத சுற்றுலாத் தளம்.

wiki

மாணிக்க வாசகர்

மாணிக்க வாசகர்

இங்குதான் பெரும்புலமை வாய்ந்தவரான மாணிக்கவாசகர் தங்கி இருந்து பல பாடல்கள் பாடியுள்ளார். அவர் இந்த தலம் பற்றி உலகறியச் செய்ய பலமுயற்சிகள் எடுத்துள்ளார்.

நாட்டியம்

நாட்டியம்

பொதுவாக சிவபெருமான் எல்லா திருத்தலங்களிலும் நடனமாடிய நிலையில் இருக்கமாட்டார். இந்த திருத்தலத்தில் இறைவன் உமையவள் மட்டும் காணும்படி நடனமாடியிருக்கிறார். இது உலகிலேயே சிறப்பான தலமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மரகத கல சிலை

மரகத கல சிலை

உலகத்தின் மிகப்பழமையான 3000 வருடங்களுக்கு முந்தைய மரகதக் கல்லால் ஆன ஒரு சிலையுடன் கூடிய கோயில் இதுமட்டும்தான்.

 சிரித்த முகத்துடன் சிலை

சிரித்த முகத்துடன் சிலை

எப்போது பார்த்தாலும் இந்த மரகதகல்லால் செய்யப்பட்ட சிலை சிரித்தமுகத்துடன் இருக்கிறது. பொதுவாக சிலைகள் சாதாரணமாகத்தான் இருக்கும். காண்பவர் மனநிலையைப் பொறுத்து சிலைகளின் முக உணர்ச்சிகள் மாறுபடும். ஆனால் இந்த சிலை எப்போதும் சிரித்தமுகத்துடன் வடிவமைத்திருப்பது யார் எந்த குறையுடன் கோயிலுக்கு வந்தாலும் சிரித்துக்கொண்டிருக்கும் இறைவனைக் கண்டு மனம் இறங்கி துன்பம் மறந்துவிடுவதாக கூறப்படுகிறது.

ரத்தின சபை

ரத்தின சபை

இந்த கோயில் நடராஜர் ரத்தினசபை என்று அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இப்பகுதியை உலகுக்கு உணர்த்தும் வகையில் 9 பாடல்கள் பாடியுள்ளார்.

Ssriram mt

ராவணனுடன் சிவனுக்கு இருந்த தொடர்பு

ராவணனுடன் சிவனுக்கு இருந்த தொடர்பு

ராவணனது மனைவி மண்டோதரி இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவது சிவபூசை செய்வதும் தொடர்ந்து வரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சிவன் தமிழர் தெய்வம் என்றும் ராவணன் தமிழ் மன்னன் என்றும் கூறப்படுவது இவர்களுக்குள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

Ssriram mt -

பூமியின் மகா பொக்கிஷம்

பூமியின் மகா பொக்கிஷம்

இத்தலத்தில் ஒரு இலந்தை மரம் உள்ளது இது பூமியின் மகாபொக்கிஷம் என்று போற்றப்படுகிறது. இதன் அடியில் மணிவாசக வள்ளல் அமர்ந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது.

ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்த சிலை

ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்த சிலை

உலகிலேயே மிக உயர்ந்த மதிப்புள்ள மரகத சிலை இங்கு இருப்பது ஆங்கிலேயருக்கு தெரிந்திருக்கவில்லை. இதை அவர்கள் சாதரண கற்சிலை என்று கருதியதால் கண்டுகொள்ளவில்லை. இதுபோல் முகலாயர்கள் படையெடுப்பின்போதும் இது களவாடப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அன்று சந்தனக் காப்பு களையப்படும்.

wiki

மெக்காவுக்கு சுரங்க வழி

மெக்காவுக்கு சுரங்க வழி

இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்காவுக்கு இங்கிருந்து சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் மெக்கா ஒரு இந்து கோயில் என்னும் சர்ச்சையை ஏற்படுத்திய தகவல்கள் வெளியாகின.

ஆதி சிதம்பரம்

ஆதி சிதம்பரம்

நடராஜர் சிதம்பரத்தில் ஆடுவதற்கு பல ஆண்டுகள் முன்பே இங்கு ஆடியதாகவும், அவரது ருத்ரதாண்டவத்தால் ராமேஸ்வரம் பலமுறை அழிந்து மீண்டதாகவும் கருத்து நிலவுகிறது. இதனால் இந்த தலம் ஆதிசிதம்பம்

Vinayaraj

ரகசியம்

ரகசியம்


ஓசம் என்ற சொல்லுக்கு தமிழில் ரகசியம் என்ற பொருள் உள்ளது. உத்திரகோசம் என்னும் பெயரில் ஓசம் வருவதால் இங்கு பல ரகசியங்கள் இருப்பதாக சந்தேகித்த பலர் அதை அறிய முற்பட்டனர். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாணலிங்கம்.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

பாணலிங்கம்

பாணலிங்கம்


மங்களநாதர் கருவறையில் வடசுவற்றை ஒட்டி பாணசூரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது. மிகமிக தொன்மையான மரமான இலந்தை மரம் இங்குள்ளது.

பாம்பில்லை கங்கையுமில்லை

பாம்பில்லை கங்கையுமில்லை

இந்த தலத்தின் சிவபெருமான் சிலைகளின் கழுத்தில் பாம்பு இல்லை. தலையில் கங்கையுமில்லை. அப்படியானால் இது ஆதி தமிழர்கள் வழிபட்ட சிவபெருமான்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மதுரையிலிருந்து ஏறக்குறைய 2 மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த உத்திரகோசமங்கை. ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கு முன்பாகவே இந்த கோயிலை நாம் அடையமுடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X