Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு...மனம் மயக்கும் கேரளாவுக்கு என்ன தெரியுமா ??

நம்ம தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு...மனம் மயக்கும் கேரளாவுக்கு என்ன தெரியுமா ??

நம்ம நாட்டில் பண்டிகைகளும் வீர விளையாட்டுகளும் எப்போதுமே பிரிக்கமுடியாதவை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையின் போது ஊரெங்கும் ஜல்லிக்கட்டு களைகட்டும். திமிரும் காளைகளை அடக்குவது வீரத்தின் உச்சமாக சங்ககாலம் தொட்டு இன்றுவரை பார்க்கப்படுகிறது. அப்படி தமிழரின் அடையாளமாக ஜல்லிக்கட்டு இருப்பது போன்றே நமது பக்கத்து மாநிலமான கேரளத்துக்கும் வீர விளையாட்டு ஒன்று இருக்கிறது.

அவர்களின் வீர விளையாட்டானது ஜல்லிக்கட்டு போல தனி நபர் விளையாட்டாக இல்லாமல் குழுவாக பலர் பங்குபெறும் விளையாட்டாக இருக்கிறது. அதி சுவாரஸ்யமான அந்த விளையாட்டைப் பற்றியும், அதன் வரலாற்றயும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஓணம் :

ஓணம் :

தமிழகத்தில் 'தை' மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருவிழாவான பொங்கலை போல மலையாளிகளின் அறுவடை திருவிழா தான் இந்த 'ஓணம்' பண்டிகையாகும். இது வருடாவருடம் மலையாள மாதங்களில் முதல் மதமான 'சிங்கம்' மாதத்தின் போது கொண்டாடப்படுகிறது.

புகைப்படம் :Abhilash C

ஓணம் :

ஓணம் :

மலையாளிகளின் நம்பிக்கைப்படி இந்த ஓணம் திருநாளின் போது வாமன அவதாரத்தினால் பாதாள உலகுக்கு அனுப்பப்பட்ட கேரளத்தின் அரசனான மகாபலி தன் நாட்டுக்கு திரும்ப வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக வாசலில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

புகைப்படம் :Asif Musthafa

ஓணம் :

ஓணம் :

கேரளாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையான இந்த ஓணத்தின் போது கேரள தேசமெங்கும் வல்லம் களி, புலிகளி, தும்பி துள்ளல் என கேரள மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

புகைப்படம் :Marvelous Kerala

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

இந்த கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் உச்சமாக இருப்பது 'வல்லம் களி' எனப்படும் பாம்பு படகு போட்டி ஆகும். நம்ம ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை போன்று கேரளத்தில் இந்த படகு போட்டி வீர விளையாட்டாக கருதப்படுகிறது.

புகைப்படம் :Mark Shann

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

அதிலும் ஆலப்புழாவில் இருக்கும் புன்னமடா ஏரியில் நடைபெறும் 'நேரு கோப்பை' படகு பந்தைய போட்டி உலக பிரசித்தம் ஆகும். கிட்டத்தட்ட 100 - 120 நீளமுடைய படகுகளில் நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் ஒரே நேரத்தில் துடுப்பு போட்டபடி சீறிப்பாய்ந்து செல்வது அதி சுவாரஸ்யமானதாக இருக்கும்.

புகைப்படம்:Mark Shann

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

1952ஆம் ஆண்டு இந்த போட்டியை காண வந்த அப்போதைய பாரத பிரதமரான நேரு அவர்கள் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளியினால் செய்யப்பட்ட சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார். அதிலிருந்து பிரதமர் நேருவை கவுரவிக்கும் பொருட்டு அவரின் பெயரிலேயே இந்த கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.

புகைப்படம்:Ronald Tagra

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

கால்பந்து, கிரிக்கெட் கிளப்புகள் இருப்பது போல கேரளாவெங்கும் படகு கிளப்புகள் இருக்கின்றன. இந்த கிளப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கென பிரத்யேகமான பெயருடைய படகுகளை கொண்டு போட்டிகளில் பங்குகொள்கின்றன.

புகைப்படம்: Ronald Tagra

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் 'கைனக்கரி யுனைட்டடு போட் கிளப்' என்ற அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 'நேரு' சுழற்கோப்பையும், ஐயிம்பதாயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த பாம்பு படகு போட்டியில் வெற்றிபெறுவதென்பது கேரளத்தில் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புகைப்படம் :Mark Shann

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

மேலும் பாம்பு படகு போட்டி தவிர இதர படகு போட்டிகளும் நடைபெறுகின்றன. கல்லாட படகு பந்தையம், சம்பக்குளம் மூலம் படகு பந்தையம், கருவாட்ட படகு பந்தையம், உத்தர மலபார் படகு பந்தையம் என ஏராளமான சிறிய மற்றும் பெரிய அளவிலான படகுகள் பங்குபெறும் பந்தையங்கள் கேரளா முழுக்க நடைபெறுகின்றன.

புகைப்படம்:Arun Katiyar

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

இங்குமட்டுமில்லாமல் கனடா நாட்டிலும் இந்த பாம்பு படகு போட்டி நடைபெறுகிறது. கனடா நாட்டிலுள்ள ப்ராம்டன் நகரில் அங்குள்ள மலையாளி சமாஜத்தினால் இந்த போட்டி நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் :Renju George

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

இந்த 2015ஆம் வருடத்திற்கான நேரு கோப்பை படகு போட்டி வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி ஆலப்புழாவில் நடைபெறவிருக்கிறது. முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள். நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக அது அமையும்.

புகைப்படம்:Renju George

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

இந்த போட்டி நடைபெறவிருக்கும் ஆலப்புழா நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழின் அற்புதமான பயண கட்டுரைகளை வழங்கும் இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள் .

Photo:rahul rekapalli

Read more about: kerala alleppy adventure festivals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X