Search
  • Follow NativePlanet
Share
» »ஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலையில் ?

ஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலையில் ?

நெரிசல் நிறைந்த சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து அதே சமயம், ஜாலியான மலைப் பிரதேசத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் எங்கு தான் செல்வது ?.

சுற்றுலா என்றாலே ஊட்டி, கொடைக்கானல், மூணார்-ன்னு பட்டியல் நீளும். பெரும்பாலும் இப்பகுதிகள் வரும் முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படும். சீசன் காலங்களில் விவரிக்க முடியாத அளவிற்கு பயணிகளை இங்கே காணலாம். இப்படிப்பட்ட, நெரிசல் நிறைந்த சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து அதே சமயம், ஜாலியான மலைப் பிரதேசத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் எங்கு தான் செல்வது ?.

சாகச மலைத் தொடர்

சாகச மலைத் தொடர்


கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் பூண்டிக்கு அருகே உள்ளது வெள்ளியங்கிரி மலை. யானைகளும், செந்நாயிகளும் சற்று அதிகளவில் காணப்படும் இக்கோவில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மலையேற்றம் தொடங்கி திரும்பி இரங்கும் வரை ஒவ்வொரு காட்சியும் தலைசுற்றச் செய்திடும்.

Silvershocky

துணைக்கு வரும் மூங்கில்

துணைக்கு வரும் மூங்கில்


வெள்ளியங்கிரி மலையின் முதல் மலை சற்று செங்குத்தாக இருக்கும். இங்கு சில மீட்டர் தூரத்திற்கு மட்டும் படிக்கட்டுகள் இருந்தாலும் அவற்றில் ஏறுவதும் சிரமமான ஒன்றே. மூங்கில் குச்சியின் துணையின்றி எளிதில் ஏறிச் செல்லவும் முடியாது. இறங்கவும் முடியாது. அடிவாரத்திலேயே மூங்கில் குச்சி விநியோகம் செய்யப்படுகிறது.

Kksens85

வெள்ளை பிள்ளையார் கோவில்

வெள்ளை பிள்ளையார் கோவில்


முதல் மலை ஏறியதுமே நமக்கு அறுதல் தருவது வெள்ளை பிள்ளையார் கோவில் தான். இங்கே ஓர் சிறிய குழாயில் தண்ணீர் ஊற்றுகிறது. தேவைப்படுவோர் எல்லாம் இல்லை, கட்டாயம் எல்லாரும் தண்ணி புடிச்சுக்கோங்க. ஏன்னா, அதுக்குமே ஒரு சில மலைகளைக் கடந்தால் மட்டுமே சுனை நீர் கிடைக்கும். இடையில் எங்கேயும் தண்ணீர் கிடைக்காது.

Sar1zxy

சவாலிடும் மலைப்பாதை

சவாலிடும் மலைப்பாதை


முதல் மலையைக் கடந்து இரண்டாவது மலை சற்று சிறியதாக இருப்பதால் எளிதில் கடந்துவிடலாம். அடுத்து வரும் மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் வழுக்கி விழவைத்திடும் இப்பாறைகள் தான் இந்த மலைக்கு பெயர்க் காரணமாக உள்ளது.

PURSHOTHAMMA

நான்காம் மலை

நான்காம் மலை


பாறைகள் கடந்து மணற்பாதையும், புல்வெளிகளும் தென்பட்டால் அதுதான் நான்காம் மலை. பக்தர்களால் திருநீர் மலை என இந்த மலை அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரைப் போன்று காட்சியளிப்பதால் தான். மேலும், இப்பாதையில் உள்ள சிறுசிறு கற்கள் நம் கால்களுக்கு அக்குப்பஞ்சர் செய்வது போல் இரத்த ஓட்டத்திற்கு கொஞ்சம் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

regstuff

ஐந்தாவது மலை

ஐந்தாவது மலை


பீமன் களியுருண்டை மலை என அழைக்கப்படும் மலைதான் ஐந்தாவது மலை. ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இம்மலையில் குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் இருப்பதை சீசன் காலத்தில் பயணித்தால் காண முடியும். கோடை காலத்திலும் கடுங்குளிரில் அதிக வேகத்துடன் காற்று வீசுவதை இங்கே உணர முடியும்.

D momaya

சந்தன மலை

சந்தன மலை


ஆறாவது மலைதான் சந்தன மலை என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு மொத்தமுமே சந்தனம் போன்ற நிறத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாதையின் ஓரங்களில் கூட சிறு சிறு குழிகள் தோண்டப்பட்டு இந்த மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர் மலையேறுபவர்கள். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை என்னும் தீர்த்த குளமும் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சிறுவானி நீரைப் போன்ற சுமைமிக்கது இந்த தீர்த்த நீர்.

Jaseem Hamza

ஏழாவது மலை

ஏழாவது மலை


ஏழாவது மலையை சுவாமிமுடி மலை என்பர். மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதைகளைக் கொண்டுள்ள இம்மலையில் சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் தான் செல்ல முடியும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவது ரம்மியமே.

பாறைக் கோபுரம்

பாறைக் கோபுரம்


ஏழாவது மலையின் உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. பிரம்மாண்டமான பாறை ஒன்று இரு சிறிய பாறைகள் மீது அமர்ந்து கொஞ்சம் பயமுருத்தவே செய்யும். பிறகோவில்களைப் போலவே முதலில் நம்மை வரவேற்பது விநாயகர் தான். அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி, அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் நாம் தேடிவந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் வீற்றுள்ளார்.

பிரம்மாண்ட பாறைக் கோவில்

பிரம்மாண்ட பாறைக் கோவில்


இத்தனை தூரம் மலையேறி வந்த ஒட்டுமொத்த களைப்பையும் பறந்து போகச் செய்திடும் இந்த பாறைக் கோவில். மாபெரும் பாறை, அடியில் நின்று பார்ப்போர் யாவரையும் ஒரு நிமிடம் திடுக்கிடச் செய்திடும். அமாவாசை உள்ளிட்ட விழாக் காலங்களில் பூஜைகள் செய்யப்படும். அதிகாலையில் இத்தலத்தை அடைந்து விட்டீர்கள் என்றால் சூரிய உதயத்தை, சுற்றுவட்டார மலைக் காடுகளின் ரம்மியமான தோற்றத்துடனும், விசுவிசுவென வீசும் காற்றுடனும் கண்டு ரசிப்பதே தனிச் சிறப்புதான்.

Silvershocky

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X