Search
  • Follow NativePlanet
Share
» »வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

By Udhay

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த புகழ்பெற்ற இடமான விதிஷா பிஹில்சா என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைய குப்த அரசின் புகழை எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காணப்படும் பெசாநகர் மற்றும் உதயகிரி குகைகள் விளங்குகின்றன. மத்திய பிரதேசத்தில் இருக்கும் இவ்விடம் அவ்விடத்தின் தலைநகரமான போப்பாலுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருக்கும் வர்த்தக சந்தை 2600 வருடங்களுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

பேரரசர் அசோகரை பற்றிய பலவித பிரமாண்டமான குறிப்புகளை வரலாற்று களஞ்சியமாக இங்கு காணலாம். இங்கு நின்று ஷாருக்கான் நடித்த 'அசோகா' திரைப்படத்தை நினைத்து பார்த்தால் வெள்ளை குதிரையில் மன்னன் வருவதை இயல்பாக உணர்வீர்கள். விதிஷாவை சுற்றி இருக்கும் சுற்றுலாத் தலங்கள் விதிஷா சுற்றுலா வருபவருக்கு பல அதிசயங்கள் காத்திருக்கின்றன. இங்கு வருவோர் பலவித மதம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலங்களையும், புகழ்மிக்க சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் காண முடியும்.

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

இங்குள்ள பாழடைந்த, வரலாற்று தொல்பொருள் நிறைந்த இடங்கள் வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கின்றன. கிரிதாரி கோவில், உதயேஷ்வரா கோவில், தஷவ்தர் கோவில், மாலாதேவி கோவில், பஜ்ரமத் கோவில், கதர்மல் கோவில், மற்றும் சோலா கம்பி கோவில் இங்கு புகழ்மிக்க கோவில்களாகும். 1682-ஆம் ஆண்டு அவுரங்கசிப் மன்னரால் அழிக்கப்பட்ட பிஜாமண்டல் இங்கு காணப்படும் புகழ்பெற்ற இடம். விதிஷாவில் ஜெயின் இனத்தவருக்காக கட்டப்பட்ட இடம்தான் சிரோன்ஜ். கம்பா பாபா என்று அழைக்கப்படும் விதிஷாவின் ஹிலியோடோரஸ் என்ற இடம் இங்கு பிரபலம்.

விதிஷாவின் சுற்றுலா இடங்களில் உதயகிரி குகைகள், அரிய சிற்பங்கள் கொண்ட கியாராஸ்பூர், லோஹாங்கி, ஹிண்டோலா மற்றும் டோரானா மிகவும் பிரபலம். அதோடு 155 காலத்திற்கு முன் தரம்பூரில் படைக்கப்பெற்ற ஜெயின் உருவங்களும் பிரசித்திபெற்றவை. விதிஷா செல்ல சிறந்த வழி விதிஷாவிற்கு ரயில், விமானம், சாலை வழி போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் உண்டு.

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா

இங்கு அருகிலிருக்கும் விமான நிலையம் ராஜா போஜ் விமான நிலையமாகும். இதற்கென தனி ரயில் நிலையமும் உண்டு. விதிஷா செல்ல சிறந்த காலம் மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இங்கு செல்லலாம். இக்காலக் கட்டத்தில் இங்கு பருவம் அழகாகவும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும். அக்டோடபர் முதல் மார்ச்சு மாதத்தில் குளிக்காலத்தில் இங்கு சென்றாள் விதிஷாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

wiki

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X