Search
  • Follow NativePlanet
Share
» »சக்தி வாய்ந்த சங்கரநாராயணர்! பக்தியுடன் வழிபட்டால் கோடீஸ்வரனாக்கும் தெய்வம்

சக்தி வாய்ந்த சங்கரநாராயணர்! பக்தியுடன் வழிபட்டால் கோடீஸ்வரனாக்கும் தெய்வம்

இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் செல்வதில்லை - பக்தர்களை கோடீஸ்வரனாக்கும் கோயில்

உங்கள் வாழ்வில் துன்பங்களே காலை மாலை இரவு என மாறி மாறி வருகிறதா? நல்லது நினைத்தால் நன்மையே நடக்கும் என்கிறார்கள் ஆனால் அப்படி எதுவும் நம் வாழ்வில் நடப்பதில்லையே என வருந்துகிறீர்களா? மனச்சோர்வு நிறைந்து, வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டீர்களா என்ன? கவலையை விடுங்கள் மனச்சோர்வு நீக்க பயணமும், மகிழ்வு பிறக்க ஆன்மீகமும் துணை செய்யும் இந்த கோவிலுக்கு நீங்களும் எங்களுடன் வாருங்கள்.

இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே சகல வசதிகளையும் அருளும் தெய்வம் உங்களுக்கு அள்ளித் தருகிறாராம். தெருக்கோடியில் வசிப்பவர்களையும் கூட கோடீஸ்வரர்களாக ஆக்கி விட்டுள்ளார் இவர். இந்த கோவில் எங்குள்ளது, எப்படி செல்வது, செய்யவேண்டியவை, நடைதிறப்பு மற்றும் கோவிலின் சிறப்புகளைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

ஆயிரம் ஆண்டு வயது

ஆயிரம் ஆண்டு வயது

சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. உக்கிரபாண்டிய மன்னர் 943 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. விரைவில் இந்த ஆலயம் 1000-வது ஆண்டை எட்டப்போகிறது. நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

PC: Tamil Oneindia

ஐம்பூதத்தலங்கள்

ஐம்பூதத்தலங்கள்

சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் முதல் தலம் ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில். மண்ணின் தலமாதலில் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பலர் இங்கு வந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்.

PC: Tamil Oneindia

கோபுரம் மகிமை

கோபுரம் மகிமை

சங்கரன் கோவில் சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
PC: Tamil Oneindia

சன்னதிகள்

சன்னதிகள்


சங்கரநாரயணர் சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் என மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர். சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.
PC: Tamil Oneindia

குழந்தை தரும்

குழந்தை தரும்


கோமதியம்மன் கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.PC: Tamil Oneindia

மகிமை உணர்வது அவ்வளவு எளிதல்ல

மகிமை உணர்வது அவ்வளவு எளிதல்ல

கோமதியின் மகிமை பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும். கோமதி அம்மனின் மகிமையை முழுமையாக உணர்ந்தவர்கள் இது வரை யாருமே இல்லை.
PC: Tamil Oneindia

 சக்தி பீடங்கள்

சக்தி பீடங்கள்

பேசும் தெய்வம் கோமதி சக்தி பீடங்கள் 108-ல் சங்கரன் கோவில் கோமதி அம்மனின் தலம் 8-வது பீடமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோமதி அம்மனை "பேசும் தெய்வம்'' என்று சொல்கிறார்கள். சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை "கூழை நாயகி''என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் "வால் அறுந்த நாகம்'' என்று பொருள்.
PC: Tamil Oneindia

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா


ஒற்றைக்கால் தவம் கோமதி அம்மன் முன்பு பதிக்கப்பட்டுள்ள சக்கரத்துக்கு "ஆக்ஞ சக்கரம்'' என்று பெயர். ஆடித்தபசு விழா அம்பாளுக்கு மட்டுமே உரிய விழா என்பதால், அன்று அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருவாள். ஆடி தபசின் கடைசி நாளில் அம்பிகை, தபசு மண்டபத்தில் கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.
PC: Tamil Oneindia

விளைச்சல் அதிகரிக்கும்

விளைச்சல் அதிகரிக்கும்

விளைச்சல் அதிகரிக்கும் ஆடி தபசு திருவிழாவின் போது தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள். விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
PC: Tamil Oneindia

 துளசி தீர்த்தம்

துளசி தீர்த்தம்

துளசியும் வில்வமும் சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது.
PC: Tamil Oneindia

நாகதோஷம்

நாகதோஷம்

ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
PC: Tamil Oneindia

 புற்றுமண் புற்றுநோய் தீர்க்கும்

புற்றுமண் புற்றுநோய் தீர்க்கும்

மனநலம் சரியாகும் அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை. சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர்
PC: Tamil Oneindia

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

5 தீர்த்தங்கள் இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும்.
PC: Tamil Oneindia

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர்

நாகசுனை நாகசுனைக்கு மேலும் பல அற்புதங்கள் உண்டு. இந்த சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம். கோவிலுக்கு பின் பக்கம் பாம்பாட்டி சித்தர் தவசாலை உள்ளது. அவர் இங்கு தான் அடங்கினார் என்றும் சொல்கிறார்கள்.
PC: Tamil Oneindia

எப்படி செல்வது

எப்படி செல்வது

இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X