» »உலகத்தில் காணப்படும் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டைக்கு ஒரு பயணம் – தமிழ் நாட்டிலுள்ள டேன்ஸ்போர்க்

உலகத்தில் காணப்படும் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டைக்கு ஒரு பயணம் – தமிழ் நாட்டிலுள்ள டேன்ஸ்போர்க்

By: Bala Karthik


பாரம்பரியத்தின் பெருமையை பெருமளவில் கொண்டிருக்கும் ஒரு இடம் தான் இந்தியா. இந்த தேசத்தில் நிறைய சக்தி வாய்ந்த வம்சத்தின் ஆட்சிகள் காணப்பட, அவை அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தை உணர்த்துகிறது. அத்தகைய பேரரசர்களின் ஆட்சியானது இன்றும் காணப்பட, அவை அனைத்தும் பீட வடிவத்தில் அமைந்து நம் பின்னே பதுங்கி நம்மை வரலாற்றை நோக்கி அழைத்து செல்கிறது.


இந்தியாவின் ஒரு அங்கமாக, பிரசித்திபெற்ற பேரரசர்களான முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், மராட்டியர்கள் என பலர் ஆண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தமிழ் நாட்டின் டேனிஷ் அதிகாரம் பற்றி தாங்கள் அறிந்ததுண்டா?

தரங்கம்பாடியை முன்பு 'ட்ரங்க்யூபார்' என்று நாம் அழைக்க, தமிழ் நாட்டில் உள்ள ஒரு இடம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதினேழாம் நூற்றாண்டில் டேனிஷ் குடியேற்றத்தின் அடித்தளமாக இந்த பகுதி இருந்து வந்திட, அந்த சமயத்தில் டேனிஷ் மக்களால் டேன்ஷ்போர்க் என்ற கோட்டையும் கட்டப்பட்டதோடு, இதனை உள்ளூர் மக்கள் 'டேனிஷ் கோட்டை' என்றும் அழைக்கின்றனர்.

டேனிஷால் கட்டப்பட்ட இரண்டாவது பெரிய கோட்டை இதுவாக, டென்மார்க்கின் க்ரோன்போர்க்கிற்கு அப்புறம் இது பெரிய கோட்டையாக காணப்படுவதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். க்ரோன்போர்க் என்பது சிறிய குக்கிராமங்கள் கொண்ட அரண்மனையாகும். இவ்விடம் மிகவும் பிரசித்திபெற்ற கலைஞர்களுள் ஒன்றான ஷேக்ஷ்பியருக்கு முக்கிய இடமாக விளங்க, இந்த டேன்ஷ்போர்க் கோட்டையில் நாம் பார்க்க, வங்காள விரிகுடாக்களின் நீல நிற நீர்களும், சோர்ந்து கிடக்கும் கடற்கரைகளுமென தரங்கம்பாடி அன்று காணப்பட்டு வந்ததாம்

உலகிலேயே இரண்டாவது பெரிய கோட்டையான டேனிஷ் கோட்டை நம்ம தமிழ் நாட்டுல எங்கிருக்கு தெரியுமா?

Esben Agersnap

டேன்ஷ்போர்க் கோட்டையின் வரலாறு:


டேனிஷ் ஆர்வலரான ஓவி க்ஜெட்டேவால் டேன்ஷ்போர்க் கோட்டை கட்டப்பட, தஞ்சாவூர் அரசரான ரகுநாத் நாயக் என்பவராலும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1620ஆம் ஆண்டில், அரசரால் தரப்பட்ட நிலத்தில் இவ்விடம் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆங்கிலேயர்களால் அதன் பின் இக்கோட்டையானது கட்டுப்படுத்தப்பட, 1845ஆம் ஆண்டு தரங்கம்பாடியுடன் இவ்விடம் இணைக்கப்பட்டது.

அன்று முதலே தரங்கம்பாடியை ஆங்கிலேயர்களால் எந்த தலை நகரமாகவும் கொள்ள மறுக்க, சுதந்திரத்தை நாம் அடையும் வரை அது மறுக்கப்பட்டும் வந்தது. இந்த கோட்டையின் முக்கிய நுழைவாயிலானது ஐரோப்பிய மற்றும் கோரமண்டல பகுதிகளுக்கு இடையே வியாபார செயல்களை கொண்டிருந்த போதிலும், இந்த இடத்திற்கான முக்கியத்துவமானது தர மறுக்கப்பட்டது.

அதன்பின்னர் 1978 ஆம் ஆண்டு வரை இதனை பங்களாவாக பயன்படுத்த, இந்த கோட்டையானது இந்தியாவின் தொல்லியல் துறை வசமானது. இன்று, இந்த கோட்டையானது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு கோட்டையின் அனைத்து கலைப்பொருட்கள் மற்றும் டேனிஷ் பேரரசரின் பாரம்பரிய பெருமையையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய கோட்டையான டேனிஷ் கோட்டை நம்ம தமிழ் நாட்டுல எங்கிருக்கு தெரியுமா?

Venkatesh L

டேன்ஷ்போர்க் கோட்டையின் கட்டிடக்கலை:

டேனிஷ் கட்டிடக்கலை பாணியில் இவ்விடம் கட்டப்பட்டிருக்க, பெரிய அரங்குகள், பெரிய மேல்மட்டங்கள், பத்திகளை கொண்ட அமைப்புகளென இந்த டேன்ஷ்போர்க் கோட்டை காணப்படுகிறது. இந்த கோட்டை, கடலை (Sea) பார்த்துக்கொண்டிருக்க, ஆளுனர் வீட்டின் சமையலறை, நெருப்பிடம், புகைப்போக்கி ஆகியவை கொண்ட அறைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த கோட்டையானது அரனாக அமைய, கரையில் சிறிய கிராமங்கள் தோற்றத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஐரோப்பிய நகரத்தின் அழகை ஒத்து இந்த நகரம் காணப்பட, இதனை 'ராஜா தெரு' என்றும் அழைக்கின்றனர். ஆங்கிலேயர்களுக்கான பங்களாக்கள் இங்கே காணப்பட, இந்த அரனானது சில சமயங்களில் உப்பின் தன்மைக்கொண்ட அலைகளால் கடல் நீரில் அரித்தும் செல்லப்படுகிறது.

இந்த கோட்டையானது டேனிஷ் ராஜ வம்சத்து குடும்பத்துடன் இணைந்து மாநில தொல்லியல் துறையால் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒருமுறையும், 2011ஆம் ஆண்டு ஒரு முறையும் இந்த கோட்டையானது புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிகரிக்க தொடங்க, தமிழ் நாட்டில் காணப்படும் முக்கியமான இடங்களுள் பிரசித்திபெற்று இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

இந்த டேன்ஷ்போர்க் கோட்டை காலை 10 மணி முதல் திறந்திருக்க, மாலை 5 மணிக்கு மூடப்படுவதோடு வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்தே காணப்படுகிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய கோட்டையான டேனிஷ் கோட்டை நம்ம தமிழ் நாட்டுல எங்கிருக்கு தெரியுமா?

Biswas.joy

தரங்கம்பாடியை நாம் அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக செல்வது:

சென்னை விமான நிலையம் தான் தரங்கம்பாடி அருகில் அமைந்திருக்குமோர் விமான நிலையமாகும். 270 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் காணப்பட, இங்கிருந்து மும்பை, பெங்களூரு, கொல்கத்தா என பல இடங்களுக்கு சேவை இயக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய கோட்டையான டேனிஷ் கோட்டை நம்ம தமிழ் நாட்டுல எங்கிருக்கு தெரியுமா?

Biswas.joy

தண்டவாள மார்க்கமாக செல்வது:

மயிலாடுதுறை இரயில் நிலையம், தரங்கபாடியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து காணப்படுகிறது. இங்கிருந்து கோயம்புத்தூர், வாரனாசி, சென்னை என பல இடங்களுக்கு சேவை இயக்கப்பட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாலை மார்க்கமாக செல்வது:

மாநில போக்குவரத்து முறையின் மூலமாக பேருந்துகள் சென்னையிலிருந்து தரங்கம்பாடிக்கு தினசரி இருந்து வருகிறது. அரசு பயணம் மூலமாகவோ அல்லது தனியார் பேருந்துகளின் மூலமாகவோ நாம் சென்னையிலிருந்து 7 முதல் 8 மணி நேரத்திற்குள் இவ்விடத்தை அடையலாம். கார்களும் இங்கே காணப்பட, இரயில் நிலையத்திலிருந்து அல்லது சென்னை விமான நிலையத்திலிருந்து நாம் காரின் மூலமாகவும் பயணத்தை தொடரலாம்.

Read more about: travel, fort, tamilnadu