Search
  • Follow NativePlanet
Share
» »கிருஷ்ண ஜெயந்தி 2022 – நேரம், தேதி, பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட வேண்டிய கோவில்கள்!

கிருஷ்ண ஜெயந்தி 2022 – நேரம், தேதி, பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட வேண்டிய கோவில்கள்!

ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என பல்வேறு பெயர் கொண்ட இந்த நாளில் தான் ஸ்ரீ பகவான் கிருஷ்ணர் வசுதேவர் மற்றும் தேவகியின் எட்டாவது மகனாக ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் பல யுகங்களுக்கு முன் அவதரித்தார்.

இந்த நன்நாளை தான் நாம் கிருஷ்ணர் பிறந்தநாளாக கோலாகலமாக கொண்டாடுகிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். குழந்தை வரம், கல்யாண வரம், படிப்பு, வேலை, ஆயுள், ஆரோக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிருஷ்ணரை வணங்கினால் நம்மை வந்து சேரும். அதுவும் அவர் பிறந்தநாளில் அவரை மகிழ்விப்பது மிகவும் அவசியம் அல்லவா!
எப்படி பூஜை செய்வது, என்ன நெய்வேத்தியங்கள் வைப்பது, எந்தெந்த கோவில்களுக்கு செல்வது போன்ற அனைத்து தகவல்களையும் இங்கே காண்போம்!

கிருஷ்ண ஜெயந்தி 2022

கிருஷ்ண ஜெயந்தி 2022

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி நாளில் நடு இரவில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தான் நாம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம் வருகிறது. அந்த வகையில்கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆவணி 3, ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று வருகிறது. ஆனால் திதி ஆகஸ்ட் 20 நள்ளிரவு 2.47 மணி வரை நீடிக்கிறது. ஆகையால் நாம் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இரு தேதிகளிலும் நாம் ககிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம்.

பூஜை செய்யும் நேரம்

பூஜை செய்யும் நேரம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் தான் அவதரித்தார். ஆகவே சூரியன் மறைவுக்கு பிறகு வழிபடுவதே மிகவும் விசேஷம். ஆனால் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், அலுவலகம் செல்லும் கணவன்மார்கள், நீங்கள் பணிபுரியும் பெண்கள்களாக இருந்தால் காலை நேரத்திலேயே பூஜையை செய்து கொள்ளலாம். மனமுருகி வேண்டுவதை தவிர்த்து வேறு எதையும் கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆகவே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரையிலும் அல்லது மாலை 6 மணி முதல் 7.30 மணி
வரை நாம் வழிபடலாம்.

வழிபபாடு செய்யும் முறை

வழிபபாடு செய்யும் முறை

வீடு வாசலை சுத்தம் செய்து, வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வைத்து கோலம் போட்டு நாம் கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். தீப, தூப ஆராதனைகள் காட்டி கிருஷ்ணர் புகழ் பாட வேண்டும். லட்டு, ஜாங்கிரி, பால் கொழுக்கட்டை, பால் பாயசம், அவல், பொறி உருண்டை முதல் அனைத்து வகையான இனிப்புகளும், முக்கியமாக பால் வைத்து பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணை, நெய், மோர், தயிர் ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பின்னர் சாம்பிராணி போட்டு, மனமுருகி "கிருஷ்ணா, நீ எங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வேண்டும், எங்களுக்கு எல்லா வல்ல வரங்களையும் தந்து ஆசீர்வதிக்க வேண்டும்" என வேண்டி, கிருஷ்ணர் பாசுரங்கள் பாடி வழிப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமிட்டு ரசிக்கலாம்.

இந்த புனித நாளில் வழிபட வேண்டிய கோவில்கள்

இந்த புனித நாளில் வழிபட வேண்டிய கோவில்கள்

பகவத் கீதை தந்த நாயகனான கிருஷ்ணர் கோவில்களுக்கு நாம் எந்த நாளில் செல்லலாம். ஆனால் கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்வது கூடுதல் விசேஷம். இந்தியாவில் பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய புண்ணிய தலங்கள் ஏராளம் உள்ளன.

1) ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, மதுரா: மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் இந்தியாவில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் மிகவும் புனிதமானது. இது ஸ்ரீ கிருஷ்ணரின் புனிதமான பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது.

2) பாங்கே பிஹாரி கோவில், பிருந்தாவன்: இறைவன் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமான இங்கு கிருஷ்ணர் ராதாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார்.

3) ஸ்ரீ ராதா பார்த்தசார்த்தி மந்திர், டெல்லி: இஸ்கான் கோயில் என்று அறியப்படும் இக்கோயில் 800 கிலோ எடையும் 2.8 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய பகவத் கீதையை கொண்டுள்ளது.

4) ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், உடுப்பி: கோயிலின் கருவறையில் தெய்வமாக இருக்கும் குழந்தை வடிவில் உள்ள கிருஷ்ணரின் சிலை துவாரகாவிலிருந்து ஒரு கப்பலில் வந்தது என்றும் மாதவாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உடுப்பி கிருஷ்ண மடம் உருவானது என்றும் கூறுகின்றனர்.

5) குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்: 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலில் கிருஷ்ணரின் நான்கு கரங்களுடன் நிற்கும் உருவம் மற்றும் கிருஷ்ணரின் பெற்றோரான வசுதேவ் மற்றும் தேவகிக்கு அவர் பிறந்த நேரத்தில் வெளிப்படுத்தப்பட்ட விஷ்ணுவின் தரிசனத்தை நாம் காணலாம்.

6) ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி: ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் கோயிலின் முக்கிய தெய்வமான கிருஷ்ணர் இங்கு காட்சியளிக்கிறார். குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுடன் ராஜகோபாலசுவாமி கோயிலும் தட்சிண துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

7) ஸ்ரீ ஜெகநாதர் கோயில், பூரி: ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயில் புகழ்பெற்ற கிரிஷா கோயிலாகும். இந்த பழமையான கோவிளும் மற்றும் அதன் புகழ்பெற்ற ரத யாத்திரையும் பழம்பெருமை வாய்ந்தது.

8) நௌலாகா கோயில், ஜார்கண்ட்: நௌலாகா கோயில் என்பது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகரில் உள்ள அழகிய ஸ்ரீ கிருஷ்ணர் கோயில். கோவில் வடிவமைப்பு கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தை போலவே இருக்கிறது.

9) துவாரகாதீஷ் மந்திர், துவாரகா: கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபாவால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படும் இக்கோயில் உலகின் மிகப் பழமையான கிருஷ்ணர் கோயிலாகும். துவாரகாதீஷ் கோவிலில் முதன்மைக் கடவுள் கிருஷ்ணர், இருப்பினும், கோவில் வளாகத்தில், வாசுதேவ், தேவகி, ருக்மணி, ராதா, சத்யபாமா மற்றும் பிறருக்கு கோவில்கள் உள்ளன.

10) ஸ்ரீநாத்ஜி மந்திர், ராஜஸ்தான்: ஸ்ரீநாத்ஜி கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலை கோவர்தன் மலையில் இருந்து கருங்கல்லால் உருவான சிலை என்று நம்பப்படுகிறது , கோவர்தன் மலையை இடது கையின் சுண்டு விரலால் உயர்த்துவது போன்ற தோற்றத்தை நாம் இங்கே காணலாம்.

ஆகவே இந்த புனித நாளில், பகவான் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து அவரை மகிழ்வித்து பூஜை செய்த பின்னர், நாம் இந்த நன்னாளில் அவரை வழிபட்டு புண்ணியமும் பகவான் ஆசீர்வாதத்தையும் சேர்த்திடலாம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X