Search
  • Follow NativePlanet
Share
» »விக்ரமாதித்தியனின் ரகசியங்கள் காண பூமிக்கடியில் இந்த குகைக்கு செல்லுங்கள்

விக்ரமாதித்தியனின் ரகசியங்கள் காண பூமிக்கடியில் இந்த குகைக்கு செல்லுங்கள்

விக்ரமாதித்தியனின் ரகசியங்கள் காண பூமிக்கடியில் இந்த குகைக்கு செல்லுங்கள்

By Udhaya

விக்கிரமாதித்யனின் சகோதரன் பர்த்ரிஹரியின் பெயரில் வழங்கப்படும் இந்த குகைக்குள் நாம் அதிசயங்களைக் காணச் செல்கிறோம். மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது பர்த்ரிஹரி குகைகள். இங்கு செல்லும்போது ஏற்படும் உணர்வு இருக்கிறதே... அதை நீங்கள் தான் உணரவேண்டும். வாருங்கள் செல்லலாம்...

எங்குள்ளது?

எங்குள்ளது?


இந்த குகை பழமையான உஜ்ஜைன் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இது மனதை மயக்கும் இடம் என்று மத்தியப் பிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகம் கூறுகிறது. இந்த குகையில் நுழையும் போது ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதவையாக இருக்கும். இந்த குகையில் இருக்கும் பல சிற்பங்கள் அழிந்த நிலையில் இருந்தாலும், இந்த இடத்தை இன்னும் காணாதவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் காத்திருக்கிறது.

Gyanendra

பழமை

பழமை


இந்த குகையில் பூமிக்கு அடியில் ஆழமாக செல்ல வேண்டும். உள்ளே மூச்சு விட கூட சிரமமாக இருக்கும். விக்ரமாதித்ய அரசரின் மூத்த தமையனின் பெயர் தான் இந்த குகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த இடம் பர்த்ரிஹரியின் யோகப் பயிற்சியால் புகழ் பெற்றது. இவர் நாதா செச்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய பலரில் ஒருவராக விளங்கியவர். இந்த குகையின் வடிவமைப்பை கவனித்தோமானால், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பர்மர் காலத்து இரண்டடுக்கு கவானோடையை நினைவுபடுத்தும்.

 உஜ்ஜைன்

உஜ்ஜைன்

இந்த குகைக்கு அருகிலுள்ள இடம் என்று பார்த்தால், அது உஜ்ஜைன்தான். பழமையான ஹிந்துக்களின் பாரம்பரியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் உஜ்ஜைன் நகரத்தில் உள்ள கால பைரவர் கோவில் ஆன்மீக அறிவியல் சடங்குகளுடன் தொடர்பில் உள்ளது. கால பைரவர் என்பது சிவபெருமானின் கடுமையான ருத்ர தாண்டவத்தை குறிக்கும். புனிதமான இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தினசரி காணலாம். கோவில் வளாகத்தில் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய சாதுக்களை பார்க்கலாம். கோவிலில் அழகிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் நந்தி சிலைக்கு எதிரில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி பல புராணக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. தன் அடிமனதில் இருந்து வேண்டுபவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய திருவிழா நடைபெறும்.

wikimedia

 பிர் மட்ஸ்யேந்த்ரநாத்

பிர் மட்ஸ்யேந்த்ரநாத்

நாதா செக்டின், ஷைவிட்டே தலைவரான மட்ஸ்யேந்த்ரநாத் என்பவரின் பெயரால் பிர் மட்ஸ்யேந்த்ரநாத் என்ற ஆசிரமம் நிறுவப்பட்டது. இதன் தலைவரை பிர் என்று தான் அவரின் சிஷ்யர்கள் அழைத்தனர்.இது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் மதிக்கப்படுகிற இடம். இந்த இடம் ஷிப்ரா நதிக்கரையில், பர்த்ரிஹரி குகைகள் மற்றும் கட்கலிகா கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

உஜ்ஜைன் நகரத்தில் இருந்து இது 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் இங்கு வருவது மிகவும் சுலபம். தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த இடம் தோண்டப்பட்ட போது பல பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த பொருட்கள் கி.மு. 6 மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் பயன்பட்டதாகும். இந்த இடத்தின் கட்டிட அமைப்பை போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஒரு எளிய வெள்ளை கட்டிடமாக காட்சி அளித்தாலும் அதன் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதன் வடிவமைப்பின் தரத்தை ஆராய்வதற்கு அதன் நுட்பகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தினமும் பல பக்தர்கள் இங்கு வருவார்கள்.
wikimedia

கட்கலிகா

கட்கலிகா


புகழ் பெற்ற கட்கலிகா கோவில் உஜ்ஜைன் நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச சுற்றுலா அமைச்சகம் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கிறது. இந்த கோவில் ஹிந்துக்களின் சக்தி வாய்ந்த கடவுளான காளி தேவிக்காக எழுப்பப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. அதன் படி பெரிய கவியான காளிதாசர் இந்த கடவுளின் பெரும் பக்தராக இருந்த காரணத்தால் அவருடைய கவி ஆற்றல் அனைத்தும் இந்த கடவுளின் அருளால் கிடைக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது. இந்த கோவில் 7-ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தனாவால் புதுபிக்கப்பட்டது. இந்த கோவிலை ஒட்டி தான் ஷிப்ரா நதி ஓடுகிறது. இந்த கோவில் பழமையான ஹிந்து பாராம்பரியத்தை குறிக்கும்.

Sauravnarain911

Read more about: travel cave
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X