Search
  • Follow NativePlanet
Share
» »வயநாடு - சுற்றுலா என்றால் இதுதான்!!!

வயநாடு - சுற்றுலா என்றால் இதுதான்!!!

By Staff

எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள வயநாடு பகுதிக்கு உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதிலும் மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை வயநாட்டின் இயற்கையழகு பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.

வயநாடு ஹோட்டல் டீல்கள்

வயநாட்டின் சுற்றுலாத் தலங்கள்

வயநாட்டின் சுற்றுலாத் தலங்கள்

எடக்கல் குகைகள், மீன்முட்டி அருவி, குருவா டிவீப், சூச்சிப்பாறை அருவி, செம்பரா சிகரம் ஆகிய இடங்கள் வயநாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

வயநாட்டின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Nagesh Jayaraman

செம்பரா சிகரம்

செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலே பயணிகளுக்கு தேவையான மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அதோடு அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு பயண வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செம்பரா சிகரத்தில் டிரெக்கிங் செல்வதற்கு மெப்பாடி வன இலாக்கா அதிகாரியிடம் அனுமதி பெறுவது அவசியம்.

படம் : Sarath Kuchi

டிரெக்கிங்

டிரெக்கிங்

செம்பரா சிகரத்தில் டிரெக்கிங் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Sankara Subramanian

ஹார்டின் ஏரி!

ஹார்டின் ஏரி!

செம்பரா சிகரத்தின் உச்சியில் மனித இதயத்தின் வடிவில் அமைந்துள்ள ஏரி.

படம் : Chandru

உச்சியிலிருந்து....

உச்சியிலிருந்து....

செம்பரா சிகரத்தின் உச்சியிலிருந்து தெரியும் காட்சி.

படம் : Sajith T S

எடக்கல் குகைகள்

எடக்கல் குகைகள்

7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகைகளாக கருதப்படும் எடக்கல் குகைகள் வயநாடு நகரத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன. இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

படம் : Satheesan.vn

படிக்கட்டுகள்

படிக்கட்டுகள்

எடக்கல் குகைகளுக்கு செல்லும் படிக்கட்டுகள்.

படம் : tpms5

மீன்முட்டி அருவி

மீன்முட்டி அருவி

300 அடி உயரத்திலிருந்து விழும் மீன்முட்டி அருவி கேரளாவின் 2-வது மிகப்பெரிய அருவியாக அறியப்படுகிறது. இந்த அருவி வயநாடு நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது. இவ்வருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக 2 கி.மீ ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் அந்த இரண்டு கிலோமீட்டர் நெடுந்தூர பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

படம் : Vssekm

பாணாசுர சாகர் அணை

பாணாசுர சாகர் அணை

பாணாசுர சாகர் அணை வயநாடு நகரிலிருந்து 33 கி.மீ தூரத்தில், கபினி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய கரைத்தடுப்பு அணையாக அறியப்படும் பாணாசுர சாகர் அணை ஆசியாவிலேயே 2-வது பெரிய ‘கரைத்தடுப்பு அணை' எனும் பெருமையையும் பெற்றுள்ளது.

படம் : Dhruvaraj S

ஃபாண்டம் ராக்

ஃபாண்டம் ராக்

ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை ‘சீங்கேரி மலா' அல்லது ‘தலைப்பாறை' என்று அழைக்கின்றனர். தத்ரூபமான ஒரு மனித மண்டையோடு நம்மை உற்று பார்ப்பது போன்று உருவாகியிருக்கும் இந்த மலைப்பாறை அமைப்பானது வயநாடு பகுதியில் அமைந்துள்ளது.

படம் : Vinayaraj

குருவா டிவீப்

குருவா டிவீப்

குருவா டிவீப் என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுத் தீவுத்திட்டு செழிப்பான பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்று காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏராளமான தாவர இனங்களும் காட்டுயிர் அம்சங்களும் வசிக்கின்றன. பல அரிய வகைப்பறவைகளும் இந்த குருவா தீவுத்திட்டினை இருப்பிடமாக கொண்டுள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட விசேஷமான மூலிகைச்செடிகள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் போன்றவற்றை இங்கு பயணிகள் காணலாம்.

படம் : Vijay S

சூச்சிப்பாறை அருவி

சூச்சிப்பாறை அருவி

வயநாடு நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைபயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

படம் : Sarath Kuchi

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

சூச்சிப்பாறை அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : sambit saha

செயின் மரம்

செயின் மரம்

வயநாடு பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக செயின் மரம் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் வழங்கி வரும் கதைகளின்படி, காலனிய ஆட்சியில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் உள்ளூர் ஆதிவாசி இளைஞனின் துணையுடன் வயநாடு பகுதியை சிரமப்பட்டு அடைந்துள்ளார். ஆனால் ஒரு அழகிய மலைப்பிரதேசத்தை கண்டுபிடித்த பெருமை யாவும் தனக்கே சேரவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பும் வழியில் அந்த பொறியாளர், வழிகாட்டி இளைஞனை கொன்று விடுகிறார். அப்படி கொல்லப்பட்ட இளைஞனின் ஆவியானது நெடுநாள் இப்பகுதிக்கு வரும் மக்களை அச்சுறுத்தியவாறு இருந்துள்ளது. இறுதியில் ஒரு பூசாரி தன் சக்தியின் மூலம் அந்த ஆவியை இங்குள்ள அத்தி மரத்தில் ஒரு செயினால் கட்டிவைத்து விட்டார். எனவே அந்த அத்தி மரத்திற்கு செயின் மரம் என்ற பெயர் நாளடைவில் ஏற்பட்டு விட்டது. இன்றும்கூட ஒரு செயினை (சங்கிலி) இந்த அத்தி மரத்தில் தொங்குவதை பார்க்கலாம்.

படம் : Sandwanam

செல்லும் வழி

செல்லும் வழி

வயநாடு செல்லும் வழி.

படம் : Srikaanth Sekar

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

வயநாடு நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்.

படம் : Nagesh Jayaraman

ப்ளூ ஜிஞ்சர் ரிசார்ட் அருவி

ப்ளூ ஜிஞ்சர் ரிசார்ட் அருவி

வயநாட்டில் உள்ள ப்ளூ ஜிஞ்சர் எனும் பிரபலமான ரிசார்ட் வளாகத்துக்குள் இந்த அழகிய அருவி அமைந்துள்ளது.

படம் : Sean Ellis

கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகள்

வயநாடு செல்லும் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள்.

படம் : Dhruvaraj S

சுல்தான் பத்தேரி

சுல்தான் பத்தேரி

வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான சுல்தான் பத்தேரி, முந்தைய காலங்களில் கணபதிவடம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. இந்த தொன்மையான நகரத்துக்கு ஒருமுறை மைசூரின் திப்பு சுல்தான் படையெடுத்து வந்தபோது ஜைன கோயிலில் தன்னுடைய பீரங்கி படையை நிறுத்தியிருந்தார். இதன் காரணமாகவே இந்த நகரம் அன்றிலிருந்து சுல்தான் பத்தேரி (பீரங்கி படை) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

படம் : Nijusby

வயநாடு வனவிலங்கு சரணாலயம்

வயநாடு வனவிலங்கு சரணாலயம்

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

படம் : Kerala Tourism

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

வயநாடு ஹோட்டல் டீல்கள் : http://bit.ly/1rpk7Dq

படம் : Sarath Kuchi

வயநாடை எப்போது மற்றும் எப்படி அடைவது?

வயநாடை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Sarath Kuchi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X