Search
  • Follow NativePlanet
Share
» »எங்கு கொண்டாடலாம் தீபாவளி பண்டிகையை?!

எங்கு கொண்டாடலாம் தீபாவளி பண்டிகையை?!

By

தீபாவளி பண்டிகையை போல எந்த பண்டிகையும் நாடு முழுவதும் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடப்படுவதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவே ஒளிவெள்ளத்திலும், சந்தோஷ மிகுதியிலும் திளைத்திருக்கும் கொண்டாட்டமான திருநாள் தீபாவளி பண்டிகை.

தென்னகத்தை பொருத்தவரை தமிழ்நாட்டில்தான் தீபாவளி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அம்ரித்சர், ஜெய்ப்பூர், டெல்லி, கோவா, வாரணாசி போன்ற பகுதிகளிலும் இதே போன்ற ஒரு உற்சாக கொண்டாட்டத்தை காண முடியும்.

இதில் விசேஷம் என்னவென்றால் நம்ம சிவகாசியில் செய்யப்படும் பட்டாசுகளையே நாடு முழுக்க எல்லா மக்களும் வெடித்து மகிழ்கிறார்கள்!...இந்த முறை எங்கு கொண்டாட போகிறீர்கள் தீபாவளி பண்டிகையை?!

அம்ரித்ஸர்

அம்ரித்ஸர்

அம்ரித்ஸரில் தீபாவளி பண்டிகை பத்து பதினைத்து நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். இங்கு எல்லோரும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும் அலங்காரம் செய்வார்கள். அதோடு பெண்கள் வீடு முழுக்க ரங்கோலி கோலமிட்டு வீட்டையே வண்ணமயமாக மாற்றிவிடுவார்கள். அம்ரித்ஸர் வீதிகள் எங்கும் தீபாவளி இனிப்பு பதார்த்தங்களை விற்கும் கடைகள் வியாபித்து இருக்கும். எல்லாவற்றையும்விட தீபாவளி அன்று மாலை அம்ரித்ஸர் தங்கக்கோயில் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதும், அதன் பிம்பம் நீரில் காணப்படும் காட்சியும் கண்களுக்கு விருந்து படைக்கூடியவை. அதுமட்டுமல்லாமல் வானை நோக்கி சீறிச் செல்லும் தீபாவளி ராக்கெட்டுகளும், வான வேடிக்கைகளும் அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்பவை. மேலும் சீக்கியர்களின் 6-வது குருவான ஹர்கோபிந்த் சிங் 1619-ஆம் ஆண்டு சிறையிலிருந்த வெளிவந்ததை நினைவு கூறும் விதமாக தீபாவளி பண்டிகை அம்ரித்ஸர் பகுதியில் கொண்டாடப்படுவதாகும், 1577-இல் இத்தினத்தில் தங்கக்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் தீபாவளி அன்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

தீபாவளி காலங்களில் பிங்க் சிட்டி என்று பிரபலமாக அறியப்படும் ஜெய்ப்பூர் நகரமே தீப்பற்றி எறிவது போல எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளை போல வீடுகள் மட்டுமில்லாமல் ஜெய்ப்பூர் நகரின் சந்தைகள் அனைத்தும் லட்சக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் தெய்வ விக்ரகங்கள் வடிவில், மனித மற்றும் மிருகங்களின் வடிவில் என்று ஏறக்குறைய 2000 வகையான மண் விளக்குகள் அப்போது ஜெய்ப்பூர் நகர சந்தைகளில் காணப்படும். ஒவ்வொரு தீபாவளி அன்றும் சிறப்பாக அலங்கரிப்பட்டிருக்கும் சந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டு வருகின்றன.

கோவா

கோவா

கோவாவில் தீபாவளி பண்டிகை மிகவும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அதாவது தீபாவளியின் போது யார் மிகப்பெரிய மற்றும் பயப்படும் படியான நரகாசுரனின் உருவ பொம்மையை செய்கிறார்கள் என்று போட்டி நடத்தப்படும். இந்த உருவ பொம்மைகள் தீபாவளியின் முதல் நாள் நரகாசுர சதுர்தசியில் அதிகாலை வேளையில் தீ வைத்து கொளுத்தப்படும். அதே போல தீபாவளி சமயத்தில் கோவாவின் கேசினோக்களில் சூதாட்டமும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும்.

வாரணாசி

வாரணாசி

வாரணாசியில் தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று 'தேவ் தீபாவளி' பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் தேவ் தீபாவளி அன்று நடக்கும் மகா ஆர்த்தி வெகு விசேஷமாக ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. அப்போது கங்கா ஆர்த்தி 21 பிராமண அர்ச்சகர்கள் மற்றும் 24 இளம் மங்கைகளால் நிகழ்த்தப்படுகிறது.

டெல்லி

டெல்லி

டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை முடிந்த உடனேயே ஆரம்பித்துவிடும். தலைநகர் டெல்லியின் வணிக மையங்களும், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளி சிறப்பு விற்பனையில் ஈடுபடும். எனவே டெல்லி வாழ் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குறைந்த விலையில் ஆடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க கூட்டம் கூட்டமாக வரிசை வரிசையாக எல்லா கடைகளுக்கும் சென்று வருவார்கள். மேலும் டெல்லி நகர வீதிகளில் ஆங்காங்கு மேடைகள் அமைக்கப்பட்டு ராம்லீலா நாடகம் அரங்கேற்றப்படும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X