Search
  • Follow NativePlanet
Share
» »வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!

வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!

சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கும் வால்பாறை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஆனைமலை மலை உச்சியின் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் நாடு முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

ஊட்டி, கொடைக்கானல், கூர்க் போன்ற மலை வாசஸ்தலங்களுக்குச் செல்ல விரும்புவோருக்கு, வால்பாறை ஒரு பட்ஜெட் ஃபிரண்ட்லியான இனிய விடுமுறையை வழுங்குகிறது.

நகர்ப்புற வாழ்க்கையின் இரைச்சலில் இருந்து ஓய்வு தேடும் நபர்களுக்கும், இயற்கையை நேசிக்கும் அன்பர்கர்களுக்கும், மலையேற்ற ஆர்வலர்களுக்கும் வால்பாறை ஒரு வரப்பிரசாதமாகும்.

வால்பாறை அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக 'தி செவன்த் ஹெவென்' அதாவது ஏழாவது சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது. வால்பாறை அப்படி அழைக்கப்படுவதற்கான காரணங்கள் இதோ!

ஆனைமலை புலிகள் காப்பகம்

ஆனைமலை புலிகள் காப்பகம்

முன்பு இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்றழைக்கப்பட்ட இந்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாரலில் தனித்துவமான ஏராளமான தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு புகலிடமாக உள்ளது.

வங்காளப் புலி, ஆசிய காட்டு நாய், புள்ளி பூனை மற்றும் சாம்பார் மான் போன்ற விலங்குகளின் பெரும்பாலான இனங்களை பூங்காவில் காணலாம். மனிதகுலத்தின் தொடுதலால் மாசுபடாத அழகை

அதன் உண்மையான வடிவத்தில் கண்டு ரசிக்க
நிச்சயம் இந்த புலிகள் காப்பகத்திற்கு நீங்கள் வருகை தரவேண்டும்.

ஆழியாறு அணை

ஆழியாறு அணை

வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை அனைத்து பக்கங்களிலும் உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்வளக் கழகத்தால் பராமரிக்கப்படும் மீன்வளம், விளையாட்டுப் பகுதியுடன் அணையின் அடிப்பகுதியில் நன்கு பராமரிக்கப்பட்ட பூங்கா ஆகியவற்றால் இது ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாட் ஆக உள்ளது. தென்னந்தோப்புகளும், பல காடுகளும் நிறைந்த அண்டை மலைகளுடன் அணையின் பரந்த காட்சியைப் பார்த்து ரசிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும்.

கிராஸ் ஹில்ஸ்

கிராஸ் ஹில்ஸ்

வால்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராஸ் ஹில்ஸ், வால்பாறையில் பார்க்க வேண்டிய பிரமிக்க வைக்கும் இடங்களில் ஒன்றாகும்.

கேரள மாநிலத்தின் இரவிகுளம் தேசிய பூங்காவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் கிராஸ் ஹில்ஸ் தனித்துவமான ஷோலா-புல்வெளி சூழல் அமைப்பிற்கு பெயர் போனது.

மலைச் சரிவுகளில் உயர்ந்த பச்சைப் புற்களால் சூழப்பட்ட இந்த குளிர்ச்சியான இடம், பார்க்கவும் ஆராய்வதற்கும் மனதைக் கவரும் இடமாக உள்ளது.

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி

வால்பாறையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காடுகளாலும், காற்று வீசும் பாதைகளாலும் சூழப்பட்ட சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, அதன் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது.

ட்ரெக்கிங் செய்பவர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும், பிக்னிக் செல்பவர்களுக்கும் இது புகலிடமாகும்.

சிரபுஞ்சி போல, தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவை பெறும் மலைவாசஸ்தலம் இந்த வால்பாறை ஆகும். ஆகவே, எப்போதும் இங்கு நீர்வரத்து இருந்துக் கொண்டே இருக்கும். இந்த ரம்மியமான, ஈரமான, மூடுபனி நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

லோம்ஸ் வியூ பாயின்ட்

லோம்ஸ் வியூ பாயின்ட்

ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஒன்பதாவது ஹேர்-பின் வளைவில் இந்த வியூ பாயின்ட் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து ரம்மியமான நிலப்பரப்பைக் காணும் வாய்ப்பை இது சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.

பத்தாவது மற்றும் பதினொன்றாவது வளைவில் இருந்து வியூ விரிவடைகிறது, ஆனால் ஒன்பதாவது மிகவும் சிறப்புமிக்கதாகும். ஏனெனில் இது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கும், எண் பாறை மற்றும் நல்லமுடி பூஞ்சோலையை பார்ப்பதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது.

மானாம்பள்ளி

மானாம்பள்ளி

சோலையார் அணைக்கும் வால்பாறைக்கும் இடையே அமைந்துள்ள இந்த மானாம்பள்ளி, வால்பாறையில் மலையேற்றம் செய்வதற்கான சுவாரஸ்யமான இடங்களில் ஒன்றாகும். அடர்ந்த சோலா காடுகள், வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் அழகிய சிகரங்களுக்கு பெயர் பெற்ற மானாம்பள்ளி, சாகச ஆர்வலர்களுக்கு பிடித்த மலையேற்ற இடமாகும். இங்கே அமைந்துள்ள இயற்கை அழகு நிறைந்த மானாம்பள்ளி ஏரியை நீங்கள் கட்டாயம் பாரவையிட வேண்டும்.

சோலையார் அணை

சோலையார் அணை

சோலையார் அணை வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். ஆசியாவின் இரண்டாவது உயரமான அணையாக நம்பப்படும் சோலையார் அணை நிச்சயம் உங்களது வால்பாறை பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் இருக்க வேண்டும். சோலையார் அணையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது.

மேலும், நல்லமுடி வியூபாயின்ட், கருமலை பாலாஜி கோவில், கருமலை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், கூழாங்கல் ரிவர் வியூ, நீரார் அணை, குரங்கு அருவி, ஹார்ன்பில் வியூ பாயின்ட், பிர்லா அருவி ஆகியவையும் உங்கள் வால்பாறை சைட்சீயிங் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

வால்பாறை செல்வதற்கு சிறந்த நேரம்

வால்பாறை செல்வதற்கு சிறந்த நேரம்

வால்பாறை ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான, இதமான காலநிலையை கொண்டிருந்தாலும், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே குளிர்காலம் உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆகவே இந்த இடைப்பட்ட கால நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் இங்கு செல்ல விரும்புகின்றனர். அந்தி சாயும் நேரத்தில் மலைவாசஸ்தலமெங்கும் படியும் மூடுபனி நிலப்பரப்பின் அழகை அதிகப்படுத்துகிறது!

வால்பாறைக்கு எப்படி செல்வது?

வால்பாறைக்கு எப்படி செல்வது?

கோயம்பத்தூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் வால்பாறைக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையங்களாகும். கோயம்பத்தூர் விமான நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 64 கிமீ தொலைவில் உள்ள பொள்ளாச்சி ரயில் நிலையம் வால்பாறைக்கு அருகில் அமைந்துள்ள ரயில் நிலையமாகும்.

வால்பாறை சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மூலம் வால்பாறையை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X