Search
  • Follow NativePlanet
Share
» »உலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீவில் அப்படி என்னதான் இருக்கு?

உலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீவில் அப்படி என்னதான் இருக்கு?

உலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீவில் அப்படி என்னதான் இருக்கு?

வில்லிங்டன் தீவு. உலகெங்கிலும் இதே பேச்சு. இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடமாக கருதும் கொச்சியில் அமைந்துள்ள இந்த தீவில் அப்படி என்னதான் சிறப்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறதா? அப்போ உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை.

கற்பனை செய்து பாருங்கள், சுற்றிலும் நீர் சூழ, அழகிய கடல் பயணத்தின் முடிவில், உலகமே கண்டு பொறாமைப் படும் ஒரு தீவில் உங்களின் முதல் காலடி எடுத்து வைக்கும் தருணம், சற்று பொறுங்கள் உங்கள் காதலியையும் கூட்டிச் செல்லுங்கள். அவரது கைகளை பற்றிக் கொண்டு அவரின் பாதையில் கருத்தாக செயல்படும் அன்பு காதலனாகவோ, கணவனாகவோ நல்ல நண்பனாகவோ நீங்கள் இருந்தால் நிச்சயமாக இந்த தீவுக்கு நீங்கள் சென்று வரவேண்டும். முரட்டு சிங்கிள் என்றாலும் நண்பர்களுடன் சென்று வாருங்களேன்.. இப்போது என்ன குடி முழுகிவிடப் போகிறது. நட்பு, காதல், அன்பு, பாசம் என அத்தனையும் கட்டிப் போடும் வில்லிங்டன் தீவுக்கு ஒரு பயணம் செல்வோமா. வாருங்கள்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

PC: Ref (Roderick Eime)

எங்கே உள்ளது


கேரளத்தின் அழகை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த எர்ணாக்குளம் மாவட்டத்தின் அரபிக் கடலோரம் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது வில்லிங்டன் தீவு. இது கொச்சிக்கும், எர்ணாகுளம் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இரண்டு பகுதிகளுடனும் வெறும் பாலம் ஒன்றை பிணைப்பாகக் கொண்டு உள்ளது.

சிறப்பு

இந்த வில்லிங்டன் தீவு எதற்காக பெயர் பெற்றது தெரியுமா?

இயற்கை ஆர்வலர்கள் மிகுந்து காணப்படும் இந்த சுற்றுலாப் பகுதி, புகைப்படபிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இயற்கை எழில் கொஞ்சும் அதே வேளையில் கட்டிடக்கலைக்கும் சிறந்த மாநகராகவும் உருவாகி வருகிறது வில்லிங்டன்.

சாகச பிரியர்களும் இங்கு அதிகம் வர ஆசைப்படுகிறார்கள்.

நுழைவுக் கட்டணம் மற்றும் முறைகள்

வில்லிங்டன் தீவுக்குள் நுழைய தனியாக கட்டணம் எதுவும் இல்லை. இங்கு வர விருப்பமுள்ளவர்கள் சாதாரணமாக இந்தியாவின் மற்ற இடங்களுக்கு பயணிப்பது போலவே பயணிக்கமுடியும்.

பயணக் கட்டணம், விளையாட்டுக்கான கட்டணங்கள் மற்றும் உணவுகளும் மற்ற இந்திய நகரங்களைப் போலவே சாதாரணமாகவே இருக்கின்றன.

எப்போது செல்லலாம்

மற்ற சுற்றுலாத் தளங்களைப் போல இந்த இடத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்கு செல்லவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை. ஏனெனில் இந்த பகுதி மிகவும் அழகானது, எல்லா காலங்களிலும் அதற்கேற்ற தன்மையில் சுற்றுலாப் பயணிகளை சொக்கவைக்கவல்லது.

நாள்தோறும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்கிறார்கள். பொதுவாக சுற்றுலாப் பயணிகள் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தையே அதிகம் விரும்புகிறார்கள்.

சுற்றி சுற்றி சிறப்பிக்கலாம்


கற்பனை செய்து பாருங்கள். வெண்ணிற மேகங்கள் உங்கள் கண்ணருகே கலைந்து சென்று, பார்ப்பதற்கு மிகவும் தூய்மையான தெளிந்த நீருடைய கடலில் வெள்ளை மணலில் கால்களை புதைத்து மீட்டு வலக்கையை பற்றும் ஒரு துணையுடன் காதல் நடை போட்டு, பின்னணியில் ராஜாவுக்கு ரஹ்மானுக்கு விடுப்பு கொடுத்து ஜிப்ரானின் இசை கேட்க, கற்பனை செய்து பாருங்கள் இந்த தீவை சுற்றி சுற்றி சுற்றுலாவை சிறப்பிக்கலாம்.

பார்க்கும் நேரம்

இங்கு எவ்வளவு நேரம் சுற்றினாலும் நமக்கு நேரம் போவதே தெரியாது. பார்ப்பதற்கு அயல் நாட்டில் இருப்பதைப் போல் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சாதாரணமாக அனைத்து இடங்களையும் சராசரி வேகத்தில் சுற்ற 2 முதல் 3 மணி நேரம் எடுக்கும்.

இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா போதுமானது.

செயற்கையான தீவு

என்ன? அதிர்ச்சி அடைய வேண்டாம் இது செயற்கையான தீவுதான். இதை திட்டமிட்டு கட்டியிருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அதிர்ச்சி எப்போது வந்தது? நிச்சயமாக சொல்கிறோம் அது முதல்முறை வில்லிங்டன் தீவுக்கு செல்லும்போது உங்களுக்கு கிடைக்கும். அந்த அனுபவம் மிகவும் அலாதியானது. மிகவும் நினைவுக்கூறத் தக்கது. நினைத்து நினைத்து பூரிக்கத் தக்கது.

காதலியுடன் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் தவழும் நினைவு மழலைகளைப் போல இதயத்தின் மய்யத்தில் நிரந்தர நாற்காலியுடன் அமர வைப்பது. ஆம்.. செயற்கைத் தீவை அவ்வளவு அருமையாக கட்டமைத்திருக்கிறார்கள்.

பயணிகளுக்கான டிப்ஸ்

மறக்காமல் குடையோ அல்லது தொப்பியோ எடுத்துச் செல்லுங்கள். வெய்யில் வாட்டி வதைக்கும் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளவும்

குளிர்ந்த நீரை குடிப்பதையும் தவிர்க்கவும். சளி உள்ளிட்ட சிக்கல்களும் வர வாய்ப்பிருக்கிறது.

என்னென்ன செய்யலாம்

வளர்ந்து வரும் சிங்கார நகரத்தை கண்டு வியக்கலாம். கட்டிடக் கலையை பார்த்து புகைப்படமெடுத்து நினைவில் கொள்ளலாம்.

தீவையும் நகரத்தையும் இணைக்கும் பாலத்தில் நடந்து காதலிக்கலாம். காதல் மொழி உரைக்கலாம்.

கடற்கரையில் கிடைக்கும் வித்தியாசமான அழகிய சுவையுடன் கூடிய உணவுகளை சாப்பிட்டு மகிழலாம்.

வழிகாட்டிகளும் சுவாரசியத் தகவல்களும்


இங்கு பெரிய அளவில் வழிகாட்டிகள் என்பவர்கள் யாரும் இல்லை. ஆனால் நீங்களே உள்ளூர் மக்களின் உதவியுடன் செல்லவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்ந்துவிடலாம். மேலும் உள்ளூர் மக்கள் அன்பும் கனிவும் கொண்டவர்கள்.

1936ல் கட்டப்பட்ட தீவு நகரம் இது
இந்த தீவைச் சுற்றி இருப்பது கடலா இல்லை ஏரியா என்பதே தெரியாது.


இதுதான் இந்தியாவிலேயே பெரிய மனிதனால் கட்டப்பட்டா செயற்கைத் தீவு இதுமட்டும்தான் இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.


கொச்சியையும் தீவையும் இணைக்கும் ஒரு பாலம் மிகவும் சிறப்பானதாகும்.


இங்கு குடியிருப்புகள், கோவில்கள், அலுவலகங்கள் என பல்வேறு வசதிகளும் வந்துவிட்டன.

Read more about: travel kochi island
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X