Search
  • Follow NativePlanet
Share
» »வோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா!

வோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா!

By Udhaya

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது. 1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

ஏராளமான மலைகள்

ஏராளமான மலைகள்

வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது. வோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள்.
wokha.nic.in

 சுற்றுலா

சுற்றுலா

வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

உட்புற அனுமதிச்சீட்டு

உட்புற அனுமதிச்சீட்டு

வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Kalyanvarma

டொயாங் நதி

டொயாங் நதி


டொயாங் நதி நாகலாந்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய நதிகளுள் ஒன்றாகும். நகரத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்நதி வோக்கா மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது.

இது உள்ளூர் பழங்குடியினரால் ட்சூ என்றும் ட்சூலூ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நதி ட்சூயி, டல்லோ மற்றும் இவற்றை விட பெரியதான டிஷி ஆகிய கிளை நதிகளைக் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் டொயாங் நதியுடன் சென்று கலக்கின்றன. இது மாவட்டத்தின் வடக்குப்புறத்தில் தோன்றி, கிழக்குப்புறமாகத் திரும்பி பின் முடிவாக சஜு நதியுடன் சேர்கிறது.

இந்நதி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.

இந்நதி சஜூ நதியோடு இயைந்து, அதன் நீரோட்டத்தில் அமைந்துள்ள நிலங்களில் காய்கறிகள் மற்றும் வாழை, பைனாப்பிள், பப்பாளி போன்ற கனி வகைகளின் அமோக விளைச்சலுக்கு உதவி, அந்நிலங்களை வளமானதாக ஆக்குகிறது.

இந்நதிப் பள்ளத்தாக்கு, மனதை மயக்கும் காட்சிகளைக் கொண்டு இயற்கை விரும்பிகளை கட்டிப் போட்டு வைக்கக்கூடிய இடமாகக் காணப்படுகிறது. இந்நதி வோக்காவிலிருந்து சூன்ஹேபோட்டோ மாவட்டத்தினுள் நுழைந்து பின் அங்கிருந்து பிரவகித்து அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் தன்ஸிரி நதியுடன் சென்று கலக்கிறது.

டோக்கு இமாங் திருவிழா

டோக்கு இமாங் திருவிழா


டோக்கு இமாங் திருவிழா, வோக்காவில் கொண்டாடப்படும் மிகப் பெரும் திருவிழாக்களுள் ஒன்றாகும். இத்திருவிழா, அறுவடைக்குப் பின் சுமார் ஒன்பது நாட்கள், மிக்க ஆர்வத்தோடு லோதா பழங்குடியினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுப்படுகிறது.

அறுவடை காலத்தின் முடிவில் இத்திருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம் லோதா பழங்குடியினர் தங்களின் பல மாத கால உழைப்பின் பலனை வெகுவாக அனுபவித்து களிப்புறுவர்.

இத்திருவிழாவின் போது ஆண்களும், பெண்களும் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளை உடுத்தி எங்கெங்கும் ஒற்றுமையும், சகோதர பாவமும் மேலோங்க வளைய வருவர். இந்த சமயத்தில் இச்சமூகத்தினர் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வர்.

நீங்கள் நாகா பாரம்பரியத்தை அருகில் இருந்து அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினால், இத்திருவிழாவுக்குச் செல்வதன் மூலம் அத்தகைய சிறப்பான அனுபவம் கிடைக்கப் பெறலாம்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்கள் உங்கள் புலன்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

பல்வேறு இறைச்சிகளைக் கொண்டு நாவூற வைக்கும் சுவையில் சமைக்கப்படும் நாகா உணவுப் பதார்த்தங்களை சுவைக்க மறவாதீர்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X