Search
  • Follow NativePlanet
Share
» »உலகமே கொண்டாடும் தமிழகத்தின் அட்டகாசமான படங்கள் இவை!

உலகமே கொண்டாடும் தமிழகத்தின் அட்டகாசமான படங்கள் இவை!

உலகில் எங்கும் எங்கெங்கும் தமிழர்கள் தொழிலுக்காகவும், குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர். இங்கே ஒரு சிக்கல் குழப்பம் என்றால் அங்கே அவர்கள் மனம் பாடாய் படுகிறது. அந்த அளவுக்கு தொப்புள்கொடியாக உணர்ந்துவர

By Udhaya

உலகில் எங்கும் எங்கெங்கும் தமிழர்கள் தொழிலுக்காகவும், குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர். இங்கே ஒரு சிக்கல் குழப்பம் என்றால் அங்கே அவர்கள் மனம் பாடாய் படுகிறது. அந்த அளவுக்கு தொப்புள்கொடியாக உணர்ந்துவருகின்றனர் உலகத் தமிழர்கள். அப்படிப்பட்ட தமிழர்களின் சாதனைகளை சொல்லி முடிக்கவே பல நாட்கள் ஆகும். அன்றே அறிவியல், மருத்துவம், விருந்தோம்பல், நீதி என உலகத்துக்கு பாடம் கற்பித்து கொடுத்தவன் தமிழன். உலகில் பல மொழி அறிஞர்கள் தமிழர்கள் தான் உலகின் முதல் மனிதர்கள் அல்லது தமிழ்தான் உலகின் முதல் மொழியாக இருக்கவேண்டும் என்ற கூற்றுகளை வெளியிட்டுள்ளனர். உலகமே கொண்டாடும் அட்டகாசமான இடங்கள், கட்டிடங்களை உருவாக்கியவன் தமிழன். அதற்கு அங்கோர்வாட் கோயில் ஒன்றே போதும். தஞ்சாவூர் கோயில்தான் இன்றளவும் இந்தியாவிலேயே அதிக மக்கள் வந்து பார்க்கவிருப்பபடும் இடமாக உள்ளது. தஞ்சாவூர் மட்டுமல்ல உலகமே கொண்டாடும் தமிழகத்தின் அட்டகாசமான படங்களை இங்கு காண்போம்.

குன்னூர்

குன்னூர்


நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம். யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு இணையான உலகப் பாரம்பரியம் மிக்க பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.

editor CrazyYatra

 கொடைக்கானல்

கொடைக்கானல்

"கானகத்தின் கொடை" அல்லது "காடுகளின் பரிசு" என்பது கொடைக்கானல் என்பதன் தமிழ் அர்த்தம். இருப்பினும் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளதால் கொடைக்கானல் என்பதற்கு அர்த்தத்தை நான்கு விதமாக எடுத்துக் கொள்ளலாம். அவைகள் "வனத்தின் முடிவு", "படர்க்கொடி அடங்கிய காடு", "கோடைக்காலத்து காடு" மற்றும் "காடுகளின் பரிசு".

shyam sundar

 ஏழையின் உதகமண்டலம்

ஏழையின் உதகமண்டலம்

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது.

Thangaraj Kumaravel

புளூ மவுண்டைன்

புளூ மவுண்டைன்

ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு. 12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

kerala

கோத்தகிரி

கோத்தகிரி

கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது. கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.

Prateek Rungta

தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி

தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி


மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை அழைக்கப்படுகிறது. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை இதற்கு ஒரு உதாரணம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக இருக்கின்றது. தேனீர் தோட்டங்களின் வழியாக காலையில் நடைபயில்வது உங்கள் ஆன்மாவை இயற்கையின் மடியில் விழித்தெழச் செய்யும் அற்புத உணர்வு. இவ்விடத்தின் காட்டு வாழ்க்கையும், இயற்கை அழகும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Sam Daniel

தேனி

தேனி

தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க மிகவும் ஏற்ற இடமாகும். பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய இந்த புதிய மாநகரம் அதன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளுக்காக மிகவும் பொருள் பெற்றது

Raj

ஏலகிரி

ஏலகிரி


ஏலகிரிக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் ஒருவர் கவனத்தைக் கவருவது இதன் அமைதியான சூழலும் கிராமீய மணம் கமழும் அழகும் தான். பூந்தோட்டங்கள் , புல்வெளிகள் மற்றும் பழத்தோட்டங்களால் சூழப் பட்டிருப்பதால் இவ்விடம் பழங்கள் மற்றும் இலைதழைகளின் வாசம் சூழ்ந்து காணப்படுகிறது. அழகிய இயற்கை வளம் சூழ்ந்த பாதைகளின் வழியே பயணம் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்

cprogrammer

கொல்லிமலை

கொல்லிமலை

இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது.

Simply CVR

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

எங்கு பார்த்தாலும் மிரளவைக்கும் மலைப்பாறைகள், அவற்றின்மீது ஆக்ரோஷமாக விழுந்து சிதறும் நீரின் அசுரத்தனம், பெருகி ஓடும் பிரவாகத்தின் ஓட்டத்தில் தெறிக்கும் நீரின் சக்தி இவை யாவுமே ஒகேனக்கல்லுக்கு செய்யும் பயணிகளை திகைக்க வைத்து விடுகின்றன. அருவிப்பகுதிக்கு அருகில் இடி இடிப்பது போன்று நீர்வீழ்ச்சி உருவாக்கும் ஒலியை வார்த்தைகளில் விவரிப்பது மிகக்கடினம். ஒகேனக்கல் பகுதியில் எங்கு திரும்பினாலும் நம் விழிகளை அகற்ற முடியாத அளவுக்கு இயற்கையின் பிரம்மாண்டமானது விதவிதமான பரிமாணங்களில் நம் கண் முன் விரிகிறது.

Sankara Subramanian

தஞ்சை

தஞ்சை


தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Ashwin Kumar

 இராமேஸ்வரம்

இராமேஸ்வரம்

தமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் தீவுகள் இராமேஸ்வரத்திற்கு அருகிலேயே 50 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தாலும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் 1403 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும்.

Wandering Tamil

பாம்பன் (அன்னை இந்திரா சாலை) பாலம்

பாம்பன் (அன்னை இந்திரா சாலை) பாலம்


இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும்.

இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுதான் முதல் பாலமாகும். 2.3 கிமீ நீளமுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்பாலமாக உள்ளது.

Maximus Audacious

தனுஷ்கோடி கிராமம்

தனுஷ்கோடி கிராமம்

இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி கிராமம் (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும். இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.

Mike Prince

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

தாமரை மலரின் மைய மொட்டாக இந்த கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன. சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.

Francisco Anzola

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

Balaji Photography

நெல்லையப்பர் ஆலயம்

நெல்லையப்பர் ஆலயம்

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

arunp

திருச்செந்தூர்

திருச்செந்தூர்


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவதால் இந்த ஊர் முருக பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

Satish Somasundaram

Read more about: travel temple tamilnadu chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X