Search
  • Follow NativePlanet
Share
» » 1000 வருடங்களுக்கு முன்பே உலகை ஆண்ட ராஜராஜ சோழன்! #NPH 9

1000 வருடங்களுக்கு முன்பே உலகை ஆண்ட ராஜராஜ சோழன்! #NPH 9

8 மண்டலங்கள்! ஒரே நாடு! 1000 வருடங்களுக்கு முன்பே மாமாங்கு ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழன்!

By Udhaya

ராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சி காலத்தை சோழ வம்சத்தின் பொற்காலம் என்று வரலாற்றில் கூறுகிறார்கள். கிபி 985ம் ஆண்டு முதல் 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த ராஜராஜன சோழ மரபை கடல்கடந்தும் பரவச் செய்தார். இவரது குடையின் கீழ் உலகின் பெரும்பான்மையான நாடுகள் இருந்தன. எஞ்சியவையுடன் நல்லமுறையில் நட்பு பாராட்டி வாணிபம் செய்து வந்துள்ளார் ராஜராஜ சோழன். இவர் ஆட்சி செய்த இடங்களைப் பற்றி பார்க்கும்போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. வாருங்கள் ராஜராஜ சோழன் ஆட்சியில் இருந்த வரலாற்று இடங்கள் தற்போது எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

ராஜராஜன் காலத்து சோழ மண்டல நாடுகள்

ராஜராஜன் காலத்து சோழ மண்டல நாடுகள்

ராஜராஜ சோழன் காலத்தில் 9 நாடுகள் இருந்தன. அவற்றை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார் ராஜராஜ சோழன். அந்த ஒன்பது நாடுகளும் முறையே அருண்மொழித் தேவ வளநாடு, உய்யக்கொண்டான் வளநாடு, ராசராசவளநாடு, நித்திவிநோத வளநாடு, ராசேந்திர சிங்க வளநாடு, ராசாசிரிய வளநாடு, கேரளாந்தக வளநாடு, சத்திரிய சிகாமணி வளநாடு, பாண்டிகுலாசனி வளநாடு என்பவையாகும்.

உலகம் போற்றும் ராஜராஜனின் ஆட்சி

உலகம் போற்றும் ராஜராஜனின் ஆட்சி


உலகமே போற்ற ஆட்சி செய்த ராஜராஜனின் ஆட்சி முறையில் இந்த காலத்தில் இருக்கும் மாவட்டங்கள், வட்டங்கள், பஞ்சாயத்துகள் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருந்துள்ளது.

அதிராசராச மண்டலம், ராசராசபாண்டி மண்டலம், செயங்கொண்ட சோழ மண்டலம், சோழமண்டலம், நிகரிலி சோழ மண்டலம், மலை மண்டலம், மும்முடிச் சோழ மண்டலம், வேங்கை மண்டலம் என எட்டு பிரிவுகளாக இருந்தன ராசராசனின் சோழ மண்டலங்கள். இவற்றுக்குள் உட்பிரிவுகளும் இருந்தன.

Thiyagu Ganesh

அதிராசராச மண்டலம்

அதிராசராச மண்டலம்

சோழர்களின் ஆட்சிப்பகுதியான அதிராசராச மண்டலம், மூன்று பெரும் மாவட்டங்களையும் மற்ற மாவட்டங்களின் சில பகுதியையும் உள்ளடக்கியது. அதில் கோயம்புத்தூர் மேற்கு திசையிலும், திருச்சி கிழக்கு திசையிலும் சேலம் மாவட்டத்தின் தென்பகுதிகள் வட திசையிலும் எல்லைகளாக இருந்தன.

இந்த வரைபடத்தில் தோராயமாக இந்த மண்டலத்தின் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.

 நிகழ் காலத்தில் அதி ராசராச மண்டலம்

நிகழ் காலத்தில் அதி ராசராச மண்டலம்

கோயம்புத்தூரின் பெரும்பான்மையான பகுதிகள், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு என பெரும்பான்மையான பகுதிகளைக் கொண்டிருந்தது இந்த மண்டலம்.

நிகழ் காலத்தில், இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. பவானி கூடுதுறை, காளிங்கராயன் அணை, பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், தவளகிரி முருகன் கோயில், பழைய கோட்டை அரண்மனை, ஈரோடு பெரியார் நினைவகம், திம்பம், வெள்ளையங்கிரி மலை, ஆனைமுடி, சிறுவாணி நதி, அணைக்கட்டு, கோவைக் குற்றாலம், திருப்பூர் குமரன் நினைவிடம், சுக்ரீஸ்வரர் கோயில், அமராவதி அணை, திருப்பூர் திருப்பதி, அழகு மலை பெருமாள் கோயில், திருச்சி மலைக்கோட்டை, திருவரங்கம், திருவானைக்கோயில், முக்கொம்பு, கல்லணை, வயலூர் முருகன் கோயில், வண்ணத்துப்பூச்சி பூங்கா என எக்கச்சக்க சுற்றுலாத் தளங்கள் இப்போது உள்ளன.

Adam63

ராசராச பாண்டி மண்டலம்

ராசராச பாண்டி மண்டலம்

பாண்டி மண்டலம் என்ற பெயரிலேயே நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, சோழர்கள் பாண்டியர்களின் ஆட்சிப்பகுதிகளை வென்று, அதே பெயரை வைத்துள்ளனர் என்பதுதான். ராசராச சோழன் காலத்தில் கிட்டத்தட்ட பாண்டி நாடு முழுவதுமே கைப்பற்றப்பட்டது.

மதுரை மாவட்டத்துக்கு தெற்கேயும், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டம் என தென்னகத்தை கைக்குள் வைத்திருந்தார் ராசராசன். பாண்டியர்களின் பகுதியான இவற்றை வென்று மாமாங்கு ஆட்சிபுரிந்தார் ராசராசன்.

 நிகழ் காலத்தில் ராசராச பாண்டி மண்டலம்

நிகழ் காலத்தில் ராசராச பாண்டி மண்டலம்

நிகழ் காலத்தில் பாண்டி மண்டலம் பல்வேறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களே இரண்டு மூன்றாக பிரிக்கப்பட்டு தற்போது தென்னகமாக வழங்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம், காந்தி மியூசியம், கூடலழகர் கோயில், குட்லாம்பட்டி அருவி, திருமோகூர் கோயில், மீனாட்சியம்மன் கோயில், ஆயிரங்கால் மண்டபம், நாயக்கர் மஹால், பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம், திருக்குறுங்குடி, முண்டந்துறை, களக்காடு, அகத்திய பொதிகை மலை, ராமநாதபுரம் அரண்மனை, பாம்பன் பாலம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை என எண்ணற்ற இடங்கள் காணப்படுகின்றன. இவை இந்த பகுதியின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக பார்க்கப்படுகிறது. .

Duraionly

செயங்கொண்ட சோழமண்டலம்

செயங்கொண்ட சோழமண்டலம்


செயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு, சித்னர் மாவட்டங்களை அதாவது வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் வரை இந்த மண்டலம் இருந்தது.

சோழர்காலத்தில் இந்த பகுதிகள் மிகவும் வளமாகவும், சிறப்புடனும் காணப்பட்டது. இதுதான் சோழ மண்டலத்தின் வடப்புற எல்லையாகவும் இருந்தது.

நிகழ்காலத்தில் செயங்கொண்ட சோழமண்டலம்

நிகழ்காலத்தில் செயங்கொண்ட சோழமண்டலம்

நிகழ்காலத்தில் இந்த இடம் மிகவும் மாறியுள்ளது.

ஏலகிரி, ஆற்காடு, வேலூர்கோட்டை, ஜலகண்டேசுவரர் ஆலயம், அருங்காட்சியகம், ரத்னகிரி முருகன் ஆலயம், பொற்கோயில், அமிர்தி உயிரியல் பூங்கா, டெல்லி கேட், திப்பு மஹால், ஹைதர் அலி மகால், கண்டி மகால், பேகம் மகால், அருணாச்சலேசுவரர் கோயில், கிரிவலப்பாதை, சாத்தனூர் அணை, மாமண்டூர், செய்யாறு, செங்கம், ஆரணி, வந்தவாசி, ஏகாம்பரநாதர் கோயில், கைலாசாநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ராஜிவ்காந்தி நினைவிடம், ஆலம்பரை கோட்டை, செய்யர், உத்திரமேரூர், வாலாஜாபாத் என எக்கச்சக்க சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது இந்த மண்டலம்.

Keshav Mukund Kandhadai

சோழமண்டலம்

சோழமண்டலம்

சோழமண்டலம் எனப்படுவது நம் எல்லோருக்கும் தெரிந்த தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளாகும். மேலும் இதில் திருச்சி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளும் அடங்கும்.

திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை என தஞ்சாவூரைச் சுற்றி மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்துள்ளார் ராஜராஜன். மேலும் கங்கைகொண்ட சோழபுரமும் தஞ்சைக்கு நிகரான மதிப்பைக் கொண்டுள்ளது.

நிகழ்காலத்தில் சோழ மண்டலம்

நிகழ்காலத்தில் சோழ மண்டலம்

நிகழ்கால சோழ மண்டலம் தஞ்சையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமேயாகும். தஞ்சைப் பெரியகோயில், தஞ்சை சரசுவதி நூலகம், கல்லணை, கொள்ளிடம் ஆறு, பிள்ளையார் பட்டி, கும்பகோணம், நாச்சியார்குப்பம் என எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன.

rajaraman sundaram

நிகரிலி மண்டலம் மற்றும் மும்முடிச் சோழ மண்டலம்

நிகரிலி மண்டலம் மற்றும் மும்முடிச் சோழ மண்டலம்

இந்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவை இரண்டு மண்டலங்களாகும். பெல்லாரி மாவட்டத்தின் பகுதிகளும், மைசூர் மாவட்டத்தின் தெற்குப்பகுதிகளும் நிகரிலி மண்டலத்துக்கு எல்லையாக இருந்துள்ளன. மேலும் மும்முடிச் சோழ மண்டலத்துக்குள் சேலம் முதல் மைசூர் வரையிலான எல்லைகள் அமைந்துள்ளன.

ஒட்டுமொத்தத்தில் இந்த இடங்கள் எல்லாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 நிகழ் காலத்தில் இவ்விருமண்டலங்கள்

நிகழ் காலத்தில் இவ்விருமண்டலங்கள்


தென் கர்நாடக மாநிலமே ராஜராஜனின் கைக்குள் தான் இருந்துள்ளது. மைசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களும், அதனுடன் கூடிய பல்வேறு சுற்றுலாத் தளங்களும் இங்கு காணப்படுகின்றன.

பெங்களூரு நன்கு வளர்ச்சியடைந்து மாபெரும் நகரங்களுள் ஒன்றாகிவிட்டது. மைசூரு கர்நாடகத்தின் கலாச்சார நகரமாக கொண்டாடப்படுகிறது. சோழ தமிழர்களின் எஞ்சியவை என பல கோயில்கள் இன்னமும் கர்நாடக மாநிலத்தில் காணப்படுகிறது.

இந்த இடங்களை ஆட்சி செய்தவர்களுள் விஜயநகர பேரரசும், சோழப் பேரரசும்தான் மிக அதிக வலிமை வாய்ந்தவை என்று நம்பப்படுகிறது.

Nikkul

வேங்கை மண்டலம்

வேங்கை மண்டலம்


வேங்கை மண்டலமாக சோழ காலத்தில் பிரிக்கப்பட்டிருந்த இடங்கள் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட இடங்களாகும்.

ஐதராபாத், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா படுகைகள், நல்லமலைக் காடுகள், நெல்லூர் என நிறைய பிரதேசங்கள் சுற்றுலா அம்சங்களோடு திகழ்கின்றன.

மலை மண்டலம்

மலை மண்டலம்


சோழர்காலத்திலேய கேரளாவை மலைமண்டலம் என்றுதான் பிரித்து வைத்துள்ளனர். திருவாங்கூர் மற்றும் கொச்சியை உள்ளடக்கியுள்ள பகுதிகள் இவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம், கொல்லம், திருவல்லா, ஆலப்புழா உள்ளிட்ட திருவிதாங்கூர் ஆட்சிப்பகுதியையும், கொச்சி உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கியது இந்த மலைமண்டலமாகும். கிட்டத்தட்ட சேரநாட்டு கிழக்கு கடற்கரைப் பகுதி முழுவதையும் கைப்பற்றியுள்ளார் சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னரான ராஜராஜ சோழன்.

 சோழர்களின் பாதிப்பு இருந்த பகுதிகள்

சோழர்களின் பாதிப்பு இருந்த பகுதிகள்

இதுவரை சோழ மண்டலம் எப்படி பிரிக்கப்பட்டிருந்தது. அது தற்போது என்னவாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். சோழர்களின் அதிகாரத்தின்கீழ் அல்லது நட்புப் பட்டியலில் இத்தனை தேசங்கள் இருந்தன.

வங்கதேசம், கலிங்கதேசம், ஒடிய தேசம், பேகு, சகாயா, கடாரம், பனை, சிரிவிசய தேசம் என எண்ணற்ற தேசங்கள் இவரின் ஆட்சியின் போது நட்புபாராட்டி வந்தன. ராஜராஜ சோழன் கடல் தாண்டிய வாணிபத்திலும், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கினான்.

இன்று நாம் பார்க்கும் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் சோழர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டதேயாகும்.

Read more about: travel temple history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X