Search
  • Follow NativePlanet
Share
» »ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

தமிழ்நாட்டில் ஊட்டியும், கொடைக்கானாலும் பிரபலமான அளவிற்கு ஏலகிரி பிரபலமாகவில்லை. எனினும் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் சவால் விடும் அளவிற்கு சமீபகாலங்களில் சுற்றுலாத்துறையில் ஏலகிரி வளர்ச்சியடைந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிவரும் அதே சமயம் மற்ற மலைவாசஸ்தளங்களை போல வணிகமயதிற்கு உட்படாமல் கொஞ்சமும் மாசுபடாமல் இயற்கையின் பரிசுத்தத்தை கொண்டிருக்கிறது. வாருங்கள் இத்தனை சிறப்புகளுடைய ஏலகிரிக்கு ஒரு சுற்றுலா சென்று வருவோம்.

ட்ரெக்கிங் செல்ல பெஸ்ட்! :

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன.

அவற்றுள் அங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இது பலராலும் விரும்பப்படுவதோடு இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து ஏலகிரி மலையின் மொத்தத் அழகையும் தரிசிக்கலாம்.

நிலாவூர் ஏரி, ஏலகிரி:

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

Photo: Sayowais

ஏலகிரி மலையில் படகு சவாரி செய்ய விரும்புகிறவர்கள் போக வேண்டிய இடம் நிலாவூருக்கு தான். அங்கே உள்ள நிலாவூர் ஏரியில் படகு சவாரி செய்தபடியே ஏலகிரி ஏரியை சுற்றி நிறைந்திருக்கும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்தபடி ஏகாந்தத்தில் ஆனத்தம் கொள்ளலாம். மற்ற இடங்களில் இருக்கும் நீரைக் காட்டிலும் இந்த ஏரியில் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருப்பது மற்றுமொரு சிறப்பாகும்.

தொலைநோக்கி இல்லம்:

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

Photo: Akarsh Simha

பொன்னேரியில் இருந்து ஏலகிரி செல்லும் வழியில் மலைப்பாதையின் நுழைவாயிலில், 13-வது வளைவுக்கு சற்று முன்பாக 1002 மீட்டர் உயரத்தில் தொலைநோக்கி இல்லம் அமைந்துள்ளது. இங்கிருந்து தொலைநோக்கியின் உதவியுடன் சமவெளிகளின் அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழலாம் .மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு பள்ளத்தாக்கின் அழகு, செங்குத்தான சரிவுகள், ஜோலார்பேட்டை சமவெளி மற்றும் வாணியம்பாடி ஆகியவற்றைக் காணவும் வழிவகை செய்கிறது.

கோடை விழா:

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

Photo: Nagesh Jayaraman

கோடை விழா எல்லா ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா ஏலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தையும் , பழக்கவழக்கங்களையும் சுற்றுலாப்பயணிகள் அறிந்து கொள்ள சிறந்த ஒரு தளமாக விளங்குகிறது. இது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. இங்குள்ள மக்கள் , மற்றும் அருகிலுள்ள ஊர்களில் இருந்து வருபவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இந்த சமயத்தில் அதிகளவில் இங்கு வந்து குவிகிறார்கள். அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா ஏலகிரியில் நடக்கும் மிகமுக்கியமான நிகழ்வாகும்.

ஏலகிரியில் இருக்கும் சாகச விளையாட்டுகள்:

ஏலகிரி - நாம் அதிகம் அறிந்திராத அழகு சொர்க்கம்

Photo: McKay Savage

மேலே குறிப்பிட்டது போல தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற மலைவாசஸ்தளங்கள் அளவிற்கு இங்கே இயற்கையாக அமைந்த இடங்கள் இல்லை என்றாலும் அதனை சரி கட்டும் விதமாக தமிழ் நாட்டில் வேறெங்கும் இன்னும் அறிமுகமாகியிராத சாகச விளையாட்டுகள் இங்கே இருக்கின்றன. மலை குன்றின் மேல் இருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கும் 'பாராக்ளிடிங்', சவால் நிறைந்த உயரமான கோபுரத்தின் மீது ஏறுவது போன்ற விளையாட்டுகள் இங்கே உண்டு. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போன்றது என நீங்கள் நினைப்பவரானால் நிச்சயம் ஏலகிரிக்கு சென்று சாகசத்தில் ஈடுபடுங்கள்.

ஏலகிரிக்கு எப்போது, எப்படி செல்வது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X