Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்திலிருக்கும் ஊட்டி,கொடைக்கானலுக்கு இணையான மற்றுமொரு அற்புதமான மலைவாசஸ்தலத்தை பற்றி தெரியுமா?

தமிழகத்திலிருக்கும் ஊட்டி,கொடைக்கானலுக்கு இணையான மற்றுமொரு அற்புதமான மலைவாசஸ்தலத்தை பற்றி தெரியுமா?

By Staff

ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகத்தில் கணினி திரையையே உலகமாக கொண்டு வேலை செய்யும் நமக்கு புத்துணர்ச்சியை தருபவை என்றால் அது வார இறுதி விடுமுறை நாட்களில் அற்புதமான இடங்களுக்கு நாம் மேற்கொள்ளும் பயணங்கள் தான். நகர வாழ்கையின் இரைச்சலிலும், அசுத்தத்திலும் இருந்து தப்பித்து மனதுக்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் தரும் இடங்களுக்கு செல்வது வாழ்கையின் மீதான நம் நேசத்தை அதிகரிக்கும். வாழ்தல் எத்தனை இனிது என்பதை உணர்த்தும்.

அப்படியானதொரு இனிமையான பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஏற்காடு. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ் ஸ்தலங்களாக அறியப்படும் ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகராக ஏற்காடும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திருக்கிறது. வாருங்கள் ஏற்காட்டுக்கு ஒரு பயணம் மேற்கொள்வோம்.

ஏற்காடு :

ஏற்காடு :

சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது அமைந்திருக்கிறது ஏற்காடு என்னும் அற்புதமான மலைவாசஸ்தலம்.

கடல் மட்டத்தில் இருந்து 4970 அடி உயரத்தில் இருக்கும் இங்கே ஆரஞ்சு, பலா, வாழை போன்ற பழ வகைகள் மிக அதிகமாக விளைகின்றன.

Subharnab Majumdar

ஏற்காடு :

ஏற்காடு :

'தென்னிந்தியாவின் ஆபரணம்' என்ற சிறப்புப்பெயருடன் விளிக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன.

சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

Joseph Jayanth

ஏற்காடு :

ஏற்காடு :

சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

Thangaraj Kumaravel

ஏற்காடு :

ஏற்காடு :

இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இருபத்தியேழு மீட்டர் உயரமுள்ள கிளியூர் அருவி தான். ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது.

மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.

Saivin Muthu

ஏற்காடு :

ஏற்காடு :

இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த அருவியை ட்ரெக்கிங் பயணம் மூலமாக அடர்த்தியான வனப்பகுதியினுள் பயணித்தும் சென்றடையலாம்.

Saivin Muthu

ஏற்காடு :

ஏற்காடு :

ஏற்காட்டில் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் ஏரியில் படகு சவாரி செய்வதும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

அந்திசாயும் மாலை நேரத்தில் மனதுக்கு பிடித்தமானாவருடன் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது என்றென்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

Anand

ஏற்காடு :

ஏற்காடு :

'எமரால்டு ஏரி' என்றழைக்கப்படும் இந்த ஏரியின் அருகிலேயே அற்புதமாக பராமரிக்கப்படும் பூங்கா ஒன்றும், மான்கள் காட்சியகம் ஒன்றும் இருக்கிறது.

இந்த ஏரியில் பெடளிங் படகு, துடுப்பு படகு ஆகியவை இருக்கின்றன. படகு சவாரி செய்வதற்கான கட்டணம் சீசன் காலங்களில் சற்று அதிகம் என்றாலும் இங்கு கிடைக்கும் சந்தோசத்தை ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை எனலாம்.

Venkataramesh Kommoju

ஏற்காடு :

ஏற்காடு :

எழில்மிகு எமரால்டு எரி.

Kurumban

ஏற்காடு :

ஏற்காடு :

ஏற்காடு மலையின் மொத்த அழகையும் ரசிக்க விரும்புகிறவர்கள் 'லேடீஸ் சீட்' என்ற இடத்திற்கு செல்லவேண்டும். ஏற்காடு மலையின் மிக உயரமான இடமான இங்கிருந்து இம்மலையின் மொத்த இயற்கை அழகையும் கண்கூடாக கண்டு ரசிக்க முடியும்.

subharnab Majumdar

ஏற்காடு :

ஏற்காடு :

இந்த லேடீஸ் சீட் என்னுமிடத்தில் தொலைநோக்கி கருவியொன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக சேலம் நகரையும், மேட்டூர் அணையையும் கூட நம்மால் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thangaraj Kumaravel

ஏற்காடு :

ஏற்காடு :

ஏற்காடு மலையில் இருந்து பார்க்கும் போது இரவு நேரத்தில் இப்படித்தான் சேலம் நகரம் காட்சியளிக்கிறது.

Ananth BS

ஏற்காடு :

ஏற்காடு :

எப்படி அடைவது? :

ஏற்காடு தமிழ்நாடு மற்றும் பிற சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து வழக்கமான மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் அதே போல் தனியார் பேருந்து சேவைகளும் உள்ளன. கோயம்புத்தூர் (190 கி.மீ.), சென்னை (356 கி.மீ.) மற்றும் பெங்களூரு (230 கி.மீ.) நகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Joseph Jayanth

ஏற்காடு :

ஏற்காடு :

எப்படி அடைவது?

சேலம் ரயில் நிலையம் ஏற்காட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெருங்கிய ரயில் நிலையமாகும். நாட்டின் தென் இந்திய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் சேலம் வழியாக ஈரோடு, மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் கொச்சி ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜோலார் பேட்டை ஏற்காட்டில் இருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சந்திப்பு. சேலம் ரயில் நிலையத்திலிருந்து ஏற்காடு வரை செல்ல டாக்ஸி வாடகை உத்தேசமாக ரூ 700 வசூலிக்கப்படுகிறது.

Thangaraj Kumaravel

ஏற்காடு :

ஏற்காடு :

ஏற்காடு நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Thangaraj Kumaravel

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X