Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஐந்து இடங்களை பற்றியும் நீங்கள் இன்றே தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

இந்த ஐந்து இடங்களை பற்றியும் நீங்கள் இன்றே தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

இந்த ஐந்து இடங்களை பற்றியும் நீங்கள் இன்றே தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

By Udhaya

இந்தியாவில் பல இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு பெருமை இருக்கிறது. இதில் கருத்தளவில் தமிழர்கள் ஆதி மனிதர்களாக நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கிறோம். எனினும் அதிகம் பேரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், தமிழர்கள் ஆதி மனிதர்களாக இருந்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அப்படி பல்வேறு இனங்களுக்கும் சிறப்பான இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்

 மாமல்லபுரம்

மாமல்லபுரம்

எத்தனையோ இடம் இருக்க மாமல்லபுரத்தை கொண்டாடுவதற்கு அவசியம் என்ன என்று கேட்கலாம். மகாபலிபுரம் - பேரைக் கேட்டவுடனே மனம் சிலாகிக்கிறதா... அப்போ நீங்க சென்னையை சுற்றி வசிப்பவரா இருக்கணும்.... காதலிப்பவரா இருக்கணும்.. இல்ல அதிகம் சினிமா பார்ப்பவரா இருக்கணும்... அப்ப மகாபலிபுரம் காதலின் சின்னமா என்று கேட்கிறீர்களா மகாபலிபுரம் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளம் ஆகும். காதலர்கள் அதிகம் மொய்க்கும் பகுதி என்று நம்பப்பட்டாலும், பலருக்கு அதன் அருமைத் தெரிவதில்லை. மகாபலிபுரம் அதன் வரலாற்று சிறப்புக்கும், கட்டடக்கலைக்கும் பெயர் பெற்றது. சிக்கலான சிற்பங்களும், பாறைகளை செதுக்கி கட்டிய கட்டிடங்களையும் தவறாமல் காண வேண்டும். சரி...அப்படி மகாபலிபுரத்தில் என்னதான் இருக்கு ?

PC: Andrey Korchagin

பழமை

பழமை


மகாபலிபுரம் 7ம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ கட்டப்பட்டிருக்கவேண்டும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 7ம் நூற்றாண்டு என்பது தற்போதைய ஆண்டு கணக்கீட்டின் படி , 0700 முதல் 0799 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், அதாவது குறைந்தபட்ச அளவீட்டில் 1200 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கின்றனர் அவர்கள்.

PC: Patrick N

பஞ்சபாண்டவ தூண்கள்

பஞ்சபாண்டவ தூண்கள்

மகாபலிபுரத்தை பல்லவர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு குடைவரை கோயில்களைக் கட்டினர். அவற்றுள் முக்கியமானவையே இந்த பஞ்சபாண்டவ கோயில். தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கே சவால் விடும் வகையில் ஏறக்குறைய 1300 ஆண்டுகள் கட்டடத்தைத் தாங்கி நிற்கின்றன இந்த தூண்கள்.


PC: Sivanjali Sivapatham

கற்சிற்பங்கள்

கற்சிற்பங்கள்

மகாபலிபுரத்தில் பல்வேறு மனித உருவங்கள், யானை போன்ற விலங்குகள் பொறிக்கப்பட்ட பாறையைக் காணலாம். இவை அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. கிட்டத்தட்ட நூறு உருவங்கள் மகாபலிபுரம் பாறைகளில் வரையப்பட்டுள்ளன.
PC: Manishmjoshi

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

மொழிபெயர்த்தால், ஆரஞ்சுகளின் பூமி என்ற அர்த்தத்தில் வரக்கூடியதான சிரபுஞ்சி, வருடம் முழுவதும் கடும் மழைப் பொழிவைப் பெறுகிறது. அதன் நிலங்கள் அனைத்தும் தரிசாக இருப்பதினால் அவற்றில் விவசாயம் செய்வது என்பது இயலாத ஒன்று. இதற்கு காரணம், தொடர்மழை மற்றும் பல வருடங்களாக காடுகள் அழிக்கப்பட்டு வருவது போன்றவை அதன் மேற்புற மண்ணை வலுவிழக்கச் செய்து, அடுத்தடுத்த மழைகளில் அதனை அடித்துச் சென்றதே ஆகும். ஆனால், இத்தொடர் மழை காரணமாக விளைந்துள்ள நன்மை யாதெனில், இப்பகுதியில் ஏராளமான மனம் மயக்கும் சுற்றுலாத் தலங்கள் அமையப்பெற்றுள்ளதே ஆகும்.
pc: Sayowais

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, நோகலிகை நீர்வீழ்ச்சி, டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி ஆகியவை மலைகளின் வழியே புகுந்து புறப்பட்டு, பள்ளங்களில் விழும் காட்சி நம் நினைவை விட்டு அகலாது நிலைத்திருக்கக்கூடியதாகும். நாட்டின் உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகிய அழகிய நோகலிகை நீர்வீழ்ச்சி, சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு ஸ்தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வண்ணம், ஸா-ல்-மிகா பூங்கா மற்றும் உல்லாச விடுதிகளில் உள்ளத்தை மகிழ்விக்கும் ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பெறுகின்றன.
pc: Rishav999

லொனாரின் விண்கல் பள்ளம்

லொனாரின் விண்கல் பள்ளம்

லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த மாபெரும் விண்கல் பள்ளத்தை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், 'க்ரீச்.. க்ரீச்' ஒலியுடன் அங்குமிங்கும் பறந்து செல்லும் எண்ணற்ற பறவை இனங்களும் ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
pc: Vivek Ganesan

 லொனார் ஏரி

லொனார் ஏரி

லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது. லொனார் ஏரியின் பேரழகை அந்தி வெளிச்சத்தில், சூர்ய அஸ்த்தமனத்துக்கு சற்று முன்பு காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். லொனார் சரோவர் என்றும் அழைக்கப்படும் இந்த ஏரி, பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகைகள் மற்றும் நறுமணச் செடிகளுக்கும் உறைவிடமாக இருந்து வருகிறது. மேலும் இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கம்ல்ஜா மேடம் எனும் பெயரில் கோயில் ஒன்றும் உள்ளது.

pc: Pranabk

 ஜெனரல் சோராவர் கோட்டை

ஜெனரல் சோராவர் கோட்டை


ஜெனரல் சோராவர் கோட்டை, லே அரண்மனை மற்றும் நம்க்யால் செமோ மடத்தின் மேலே அமைந்துள்ளது. ரியாசி கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தொல்பழங்காலத்திய நினைவுக்கட்டிடம் இப்பொழுது பாழடைந்து கிடந்தாலும், ஒரு காலத்தில் ஜம்முவில் இருந்த டோக்ரா அரசாங்கத்தினர் தங்கள் செல்வத்தை பாதுகாக்க இந்த கோட்டையை பயன்படுத்தினர்.

சீன அரசாட்சியுடன் லடாக்கை மீட்க தொடர்ச்சியாக போராடிய ஜெனரல் சோராவர் சிங் என்ற முக்கியமான படை வீரரின் கோட்டை இது. பெரிய அளவிலான நாணய திரட்டல்கள் மற்றும் இன்றைய அஞ்சல் தலையின் பிரதிகளும் விலைமதிப்பில்லாத அக்காலத்து புதையல்களும் இப்போது இந்த கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.

pc: Deeptrivia

காசி

காசி

உத்திர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இன்னும் இயங்கி கொண்டிருக்கும் நகரங்களில் உலகிலேயே மிகப் பழமையானது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இங்கு குறிப்பிடத்தகுந்த பல கணித அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஆன்மீக குருக்களும் வாழ்ந்திருக்கின்றனர். இங்கு இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் முக்கிய யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என்று அழைக்கப்படும் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், சம்பூர்னானந்த் சமஸ்கிரத காசி வித்யாபீடம் போன்ற தொன்மையான கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. இந்தியாவின் உண்மையான முகத்தை பார்க்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் காசிக்கு வரவேண்டும்.

pc: Achilli Family | Journeys

புஷ்கர்

புஷ்கர்

ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் சிறிய நகரம் தான் இந்த புஷ்கர். இங்கு வருட வருடம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒட்டகத் திருவிழா உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாபயணிகளை ஈர்க்கிறது. இந்த சந்தை மட்டுமே பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். இங்கிருக்கும் புஷ்கர் ஏரியை ஒட்டி பிரம்ம தேவனுக்கு உலகில் இருக்கும் ஒரே ஒரு கோயில் அமைந்திருப்பது இவ்விடத்தின் தனிச்சிறப்பாகும். ஒட்டகத் திருவிழா நடக்கும் சமயம் இங்கு வருவதற்கு சிறந்த நேரமாகும். அப்போது இங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறலாம், ஒட்டக சவாரி செய்யலாம் மேலும் இங்கு கிடைக்கும் சுவையான ராஜ ராஜஸ்தானி உணவுகளை சுவைத்து மகிழலாம்.
Pc: Koshy Koshy

உஜ்ஜைனி

உஜ்ஜைனி


மகாபாரத்தில் குறிப்பிடப்படும் அளவு பழமை வாய்ந்த இந்நகரம் மத்திய பிரதேச மாநிலத்தில் க்ஷிர்பா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. முற்காலத்தில் அவந்தி பேரரசின் தலைநகரமாக விளங்கிய இது உஜ்ஜைனி என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பெரும் ஆன்மீக திருவிழாவான 'கும்ப மேளா' நடக்கிறது. 12 முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றான மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலும் இங்கே அமைந்திருக்கிறது. இதன் பழமையான கோயில்களை காணவும், இங்கிருக்கும் வரலாற்று சுவடுகளை காணவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
Pc: Bernard Gagnon

 மதுரை

மதுரை


தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை தென் இந்தியாவின் முக்கிய கலாச்சார கேந்திரங்களுள் ஒன்று. இந்நகரத்தில் தான் சங்கம் வைத்து அக்கால புலவர்கள் தமிழ் வளர்த்துள்ளனர். அப்படிப்பார்த்தால் இந்நகரம் 2500 ஆண்டு கால பழமை உடையதாகும். இங்கிருக்கும் மதுரை மீனாட்ச்சியம்மன் கோயில் கட்டிடக்கலை அதிசயம். இக்கோயிலை மையமாக வைத்து தாமரை வடிவில் அதை சுற்றிய பகுதிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக இங்கு அதே பூஜை புனஸ்கார முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வருடம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள தொன்மையான இடங்களைக்கான வருகின்றனர்.

Pc: McKay Savage

பாட்னா

பாட்னா


இந்தியாவில் இத்தனை சிறப்புகளை உடைய வேறு நகரம் இருக்குமா என்பது சந்தேகமே. உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான புத்த மதத்தை தோற்று வித்த புத்தர் பிறந்த இடம் இது. மேலும் 4ஆம் நூற்றாண்டிலேயே பல்கலைக்கழகம் அமைத்து நற்க்கல்வி போதித்திருக்கின்றனர். ஏறத்தாழ இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகத பேரரசின் தலைநகரமாக விளங்கிய இந்நகரம் சிறந்த சுற்றுலாவுக்கான இடங்களை அதிகம் கொண்டிருக்க விட்டாலும் அகழ்வாராய்ச்சி செய்பவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரும் புதையலாக பாட்னா விளங்குகிறது.

Pc: Andrew Moore

Read more about: travel india places
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X