Search
  • Follow NativePlanet
Share
» »வந்தாச்சு வைகாசி..! இவங்கள மாதிரியே நீங்களும் டாப்புக்கு போக ரெடியா..!

வந்தாச்சு வைகாசி..! இவங்கள மாதிரியே நீங்களும் டாப்புக்கு போக ரெடியா..!

வைகாசியில் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் எந்தக்கோவிலுக்குச் சென்றால் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து, நோய்நொடியற்ற, மகிழ்க்கியான வாழ்க்கையைப்பெற முடியும் என அறிந்துகொள்வோம் வாங்க.

தமிழ் முன்னோர்களின் காலக் கணிப்பு முறைப்படி தமிழ் ஆண்டின் இரண்டாவது மாதத்தை வைகாசியாக கணித்துள்ளனர். இம்மாதத்தின் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரை ஒட்டி ஏற்பட்டது. சூரியன் மேட ராசியைவிட்டு, இடப ராசிக்குள் புகும் இன்றைய நாளே வைகாசி மாதத்தின் பிறப்பாகும். சூரியன் இடப ராசிக்குள் பயணம் செய்யும் காலம் முழுக்க வைகாசி பகுதியாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்களை செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. ஆயுள், செல்வம், புத்திரப்பேறு, புகழ் என அனைத்தையும் அள்ளிக் கொடுக்கக் கூடிய இம்மாதத்தில் சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். அரசனுக்கு உரியதாக இருக்கும் சூரிய பகவான் உழைப்பிற்கு உரிய இடத்தில் பயணிப்பதால் அரசன் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக இது உள்ளது. இத்தகைய சிறப்புகளைக் கொண்டுள்ள வைகாசியில் எந்த ராசிக் காரர்கள் எந்தக் கோவிலுக்குச் சென்றால் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து செல்வந்தராகவும், நோய்நொடியற்ற, மகிழ்க்கியான இல்லற வாழ்க்கையைப் பெற முடியும் என அறிந்துகொள்வோம் வாங்க.

வைகாசி சிறப்பு

வைகாசி சிறப்பு


தமிழர்கள் தமிழ்கடவுளாக கருதப்படும் முருக பெருமானின் அவதார நாளாக வைகாசி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும், புத்த மதத்தில் இந்த நாள் புத்தரின் அவதார நாளாகவும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமாகவும் வைகாசி முதல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்த நாளாகவும் அத்தலத்தில் வைகாசி முதல் நாள் பல்வேறு வழிபாடுகளுடனும், நிகழ்ச்சிகளுடனும் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில், இந்த நான்கு ராசிக்காரர்களும் எந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என தெரிந்துகொள்வோம்.

Vashikaran Rajendrasingh

மயிலம் முருகன் ஆலயம், ரிஷபம்

மயிலம் முருகன் ஆலயம், ரிஷபம்


சனி ரிஷப ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பதால் மனதில் பாரம் உண்டாகி விலகும். வாகன போக்குவரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் குடிபெயரும் இம்மாதத்தில் ரிஷப ராசியுடையோர் மயிலம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம், இதுவரை உங்களுடனேயே பயணித்த பகைவர்கள் விலகிச் செல்வர். வாழ்க்கைத் துணையின் மூலம் குடும்பத்தில் நல்லகாரியம் அரங்கேறும். மேலும், தொழிலில் ஏற்பட்டு வந்த நஷ்டத்தில் இருந்து விடுபட இத்தல முருகளுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அபிஷேக பூஜை செய்து வருவது சிறந்தது.

Ragunathanp

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


சுமார், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் மூலவராக சுப்பிரமணியர் காட்சியளிக்கிறார். சூரபத்மாவின் ஆட்சியினை முடிவினைக் கொண்டு இத்தலத்தின் வரலாறும், சிறப்பும் தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க இத்தலத்தில் வேண்டினார். இதனை ஏற்ற முருகன், மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டார். இதன் காரணமாகவே, இப்பகுதி மயிலம் என இன்று வரை அறியப்படுகிறது.

Lsrvignesh

திருவிழா

திருவிழா


வைகாசி மாதப் பிறப்பில் மயிலம் திருக்கோவில் மூலவருக்கு பல்வேறு அலங்காரங்களுடன் அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. ஆடி 18, ஆடி வெள்ளிக்கிழமை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட சிறப்பு விழாக் காலங்களிளும் இத்தலத்தில் பக்தர்கள் கூடி விழா கொண்டாடுவர்.

Ariharan

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


மயிலம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். இக் கோவிலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் பாண்டிச்சேரியில் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை- திண்டிவணம் செல்லக்கூடிய ரயில்கள் மூலம் மயிலத்தை அடையலாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பிறப் பகுதிகளில் இருந்தும் திண்டிவணத்திற்கு பேருந்துவசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

எட்டுக்குடி முருகன் திருக்கோவில், துலாம்

எட்டுக்குடி முருகன் திருக்கோவில், துலாம்


வைகாசி மாத பிறப்பில் துலாம் ராசியில் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால் நிர்வாகத் திறமையில் சற்று தொய்வு ஏற்படும். இருப்பினும், 10-ம் இடத்தில் சந்திரன் இடம்பெயர்வதால் நோய் அற்ற மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை வந்து சேரும். இம்மாதத்தில் வரும் ஏதேனும் ஒரு வியாழக்கிழமைகளில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் சன்னதிக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டு வருவதன் மூலம் விரைவில் இல்லறத்தில் சுபகாரியம் நடைபெறும்.

arunpnair

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


எட்டுக்குடி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் மூலவர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், முருகன், வள்ளி, தெய்வானை மயில் முத அமர்ந்திருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மயில் தனது இரண்டு கால்களில் மட்டுமே நிற்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. வேறெந்த ஆதாரமும் இன்றி இத்திருவுருவம் உள்ளது. இத்தலத்தில் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

G41rn8

திருவிழா

திருவிழா

சித்ரா பவுர்ணமி அன்று இத்தலத்தில் 10 நாட்களுக்கு மாபெரும் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், வைகாசி மாதப் பிறப்பில் பிரார்த்தனையும் நடைபெறும்.

Kalai

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோவில் நடை காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தை வேளாங்கண்ணி வழியாகவும், வேலூர் வழியாகவும் வந்தடையலாம்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், மகரம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், மகரம்


வாழ்வில் எத்தனை முறை தோல்கண்டாலும் மீண்டும் எழுந்து உங்களது வழியில் வெற்றியைத் தொடம் ஆற்றல் கொண்டவர்கள் மகரம் ராசிக்காரர்கள். இம்மாதத்தில் இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு இடத்தில் சனி அதிபதியாக இருப்பதால் செலவுகளின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும், துணையின் மூலம் வரம் தரும் 7ம் இடத்தில் சந்திரன் பயணிப்பதால் திருக்கோளூரில் அருள்பாலிக்கும் வைத்தமாநிதி பெருமாளை வழிபடுவது ஏற்றதாகும்.

Ssriram mt

திருவிழா

திருவிழா


வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதனைத் தவிர்த்து சித்திரைத் திருநாள், வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாநாட்களில் காலைமுதல் வழிபாடு நடைபெறும்.

Iskconradhakrishnatemple

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பெருமாள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் திருக்கோளூர் வைத்தமாநிதி தலம் 87-வது ஆகும். மேலும், நவதிருப்பதியில் இது 3வது திருப்பதி ஆகும். நவக்கிரகத்தில் செவ்வாய் தலமாகவும் இது விலங்குகிறது.

Richard Mortel

எப்போது, எப்படிச் செல்ல வேண்டும் ?

எப்போது, எப்படிச் செல்ல வேண்டும் ?


தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து பழையகாயல், வாழவல்லாம் வழியாக சுமார் 34 கிலோ மீட்டர் பயணித்தால் வைத்தமாநிதி பெருமாள் தலத்தை வந்தடையலாம். அல்லது, தூத்துக்குடி, புதுக்கோட்டை, அனியபரநல்லூர், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் இத்தலத்தை அடைய முடியும். இக்கோவிலை சென்றடைய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் விழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்வது வழக்கம். தவிர்த்து மாநகர பேருந்து மூலமாகவும், தனியார் வாடகைக் கார்கள் மூலமாகவும் இதனை எளிதில் அடைய முடியும். காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும. அதற்கு ஏற்றவாறு உங்களது பயண நேரத்தை திட்டமிட்டுச் சென்றால் பெருமாளின் சிறப்பு தரிசனத்தை கண்டு அருள்பெறலாம்.

சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி கோவில், மீனம்

சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி கோவில், மீனம்


பூரட்டாதி முன்றாம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி என மூன்று நட்சத்திரங்களும் வெற்றோன பாதையில் பயணிக்கும் ராசி கொண்ட மீனத்தில் பிறந்தவர்களுக்கு இனி புகழும், செல்வமும் கொட்டித் தீர்க்கும காலம் இந்த வைகாசி மாதம். செவ்வாய் 9ம் அதிபதியாக வரவுள்ள இம்மாதத்தில் பாக்கிய ஸ்தானத்தை அடைந்து பண வரவை வரவேற்க விரும்பும் நீங்கள் கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்கிவர வேண்டும்.

Ssriram mt

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


கும்பகோணத்தில் சோழர்களால் கட்டப்பட்ட ராமசாமி திருக்கோவிலில் ராம சகோதரர்கள் நால்வர் அருள்பாலிக்கின்றனர். மேலும், வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் பிற தலங்களில் கதாயுதத்துடன் காட்சியளிக்கும் அனுமான் இத்தலத்தில் வீணையுடன் காட்சி தருகிறார்.

Saminathan Suresh

திருவிழா

திருவிழா

நாமநவமியன்று மூலவரான ராமசாமி சுவாமிக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மாசி, வைகாசி அன்று ராமனும், சன்னதியில் உள்ள சீதையும், இத்தலத்தில் அமைந்துள்ள மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் விழா கொண்டாடப்படுகிறது.

Nsmohan

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்து ராமசுவாமி திருத்தலக் கோவிலை அடைய பேருந்தவசதிகள் அதிகளவில் உள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் என பிற பகுதிகளில் இருந்து எளிதில் இக்கோவிலை அடையும் வகையில் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

PalashKatiyar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X