Search
  • Follow NativePlanet
Share

டுயன்சாங் - பழங்குடி மக்களின் சங்கமம்!

6

நாகாலாந்து மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகவும், அதே பெயரில் தலைநகரமாகவும் உள்ள இடம் தான் டுயன்சாங். அதன் பெரும் பரப்பளவினால் மட்டுமல்லாமல், அரசியலமைப்பால் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகளாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 1947-ம் ஆண்டுகளில் இருந்து வந்த வட கிழக்கு எல்லைப்புற மாகாணங்களை (NEFa – North East Frontier Agency) நிர்வாகம் செய்வதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

கிழக்கு பகுதியில் மியான்மரை எல்லையாக கொண்டிருக்கும் இந்த மாவட்டம், நாகாலாந்தின் பிற மாவட்டங்களை மற்ற திசைகளில் எல்லைகளாக கொண்டுள்ளது.

நேஃபா பகுதியின் தலைமையகமாக இருந்து வந்த டுயன்சாங் மாவட்டத்தின் பகுதிகளாக, இன்றைய மாவட்டங்களான மோன், கிபைர் மற்றும் லோங்லெங் மாவட்டங்கள் இருந்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களும் சேர்ந்து கிழக்கு நாகாலாந்து என்றும் அழைக்கப்படுகின்றன.

1957-ம் ஆண்டு வரையிலும் இந்தியா மற்றும் மியான்மரின் நிலப்பகுதிளில் எந்தவொரு பகுதியாகவும் இருந்திராத டுயன்சாங், பிரிக்கப்படாத அஸ்ஸாமின் கோஹிமா மற்றும் மோகோக்சுங் மாவட்டங்கள் டுயன்சாங்குடன் இணைந்த போது, முறைப்படி இந்திய நிலப்பகுதிகளாக வரையறை செய்யப் பட்டன.

நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்படாத அந்த நாட்களில், டுயன்சாங் நகரம் நாகா மலைகளின் நிர்வாகத் தலைநகரமாக இருந்தது.

பின்னர் 1963-ல், டுயன்சாங், மோகோக்சுங் மற்றும் கோஹிமா ஆகிய மாவட்டங்களைக் கொண்டு நாகாலாந்து மாவட்டம் உருவாக்கப்பட்டது. நாகாலாந்தில் மேலும் சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போது டுயன்சாங்கின் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது.

கடல் மட்டத்திலிருந்து 1371 மீ உயரத்தில் அமைந்திருக்கும் டுயன்சாங் மாநிலத் தலைநகரம் கோஹிமாவிலிருந்து 269 கிமீ தொலைவில் உள்ளது. வோகா மற்றும் மோகோக்சுங் வழியாக பயணம் செய்து வந்தால் ஸுன்ஹுபோடோ வழியாக மாநிலத் தலைநகரத்திலிருந்து 235 கிமீ தொலைவிலேயே டுயன்சாங்கை அடைந்திட முடியும்.

கிழக்கு நாகாலாந்து பகுதியின் வலிமையான மையமாக செயல்பட்டு வரும் டுயன்சாங்கிற்கு, இந்திய அரசியலமைப்பின் படி சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி, இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாகா மத மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு சட்டத்திலும் வரும் நில மாற்றம் தொடர்பான முடிவுகளை டுயன்சாங் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்த முடியாது.

எனினும், இது தொடர்பாக நாகலாந்து மாநில சட்டமன்றம், சட்டம் இயற்றினால் இந்த முடிவில் மாற்றம் கொண்டு வர முடியும்.

வண்ணமயமான கலாச்சாரங்கள்

மினி-நாகாலாந்து என்று பெயர் டுயன்சாங்கில் சில பழங்குடியினத்தினர் ஒன்றாக வசித்து அதன் வளமையான கலாச்சாரத்திற்கு அழகேற்றி, வலுவேற்றி வருகின்றனர்.

துடிப்பான மக்கள், இனரீதியான வழக்காறுகள் மற்றும் சம்பிரதாயங்கள், வண்ணமிகு உடைகள், பல்வேறு வகையான நடனங்கள மற்றும் நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளதால் டுயன்சாங் உண்மையில் ஒரு அற்புதமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.

நாகாலாந்தின் சிறப்பினை அறிய விரும்பினால், டுயன்சாங்கிற்கு உங்களை வழிநடத்திச் செல்வதே வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கும். நாகாலந்தின் பிற மாவட்டங்களைப் போலல்லாமல், டுயன்சாங்கில் நாகாலாந்தின் பல்வேறு பழங்குடியினத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால், இந்த இடம் இனமாறுபாடுகளில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நகரமாக உள்ளது.

சாங், சாங்டாம், யிம்சுங்கெர் மற்றும் கியம்நியுன்கன் ஆகியவர்கள் டுயன்சாங் பகுதியின் நிரந்தர நில உரிமையாளர்களகாவும் மற்றும் நிரந்தர பழங்குடியினராகவும் உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் சுமி நாகாஸ் இனத்தவரும் இந்த நகரத்தில் வசித்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை தூண்டும் தனித்தன்மையான கைவினைப்பொருட்கள், கைத்தறிகள் மற்றும் ஆபரணங்கள் டுயன்சாங் மாவட்டம் அதன் கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கும் மாவட்டமாகும்.

இங்கு வசித்து வரும் நாகா பழங்குடியினரின் உடைகள் இன்றைய உலகப் பிரசித்தி பெற்ற நவநாகரீக ஆடை வடிவமைப்பாளர்களின் வடிவங்களாக உருப்பெற்று வருகின்றன.

அடர்த்தியான சிவப்பு நிறம், கலைநயமிக்க வேலைப்பாடுகள், தனித்தன்மையான ஆபரணங்கள் ஆகியவற்றை டுயன்சாங்கின் சந்தைகளில் உங்களால் எளிதில் வாங்கிட முடியும்.

இந்த பொருட்களை வாங்கிடுவதற்காகவும், பிற கைவினைப் பொருட்களை வாங்கிடுவதற்காகவும் ஒரு நாளை செலவிடுவது என்பது டுயன்சாங்கின் சுற்றுலா பயணத்தில் முக்கிய பகுதியாக இருக்கும்.

மேலும், சுற்றுலா பயணிகள் லோங்ட்ரோக், கிபைர் மற்றும் புங்ரோ ஆகிய பிற சுற்றுலா தலங்களுக்கும் டுயன்சாங் மாவட்டத்திலிருந்து சென்று வரலாம்.

டுயன்சாங் சிறப்பு

டுயன்சாங் வானிலை

சிறந்த காலநிலை டுயன்சாங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டுயன்சாங்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 155 திமாபூரை டுயன்சாங்குடன் இணைப்பதாக உள்ளது. டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் டுயன்சாங்கை அடைகின்றன. நீங்கள் திமாபூர் வரை வந்து விட்டு, அங்கிருந்து சாலை வழியாக டுயன்சாங் நோக்கி பயணப்படலாம். அதே போலவே, மரியானி அல்லது ஆம்குரி வந்து விட்டு அங்கிருந்து சாலை வழியாக டுயன்சாங் நோக்கி பயணத்தை தொடரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    65 கிமீ தொலைவில் உள்ள ஆம்குரி இரயில் நிலையம் டுயன்சாங்கிற்கு மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். மரியானி இரயில் நிலையமும் அருகிலுள்ள இரயில் நிலையமாக உள்ளது. நீங்கள் திமாபூர் வரை இரயில் வந்து விட்டு, அங்கிருந்து 600 கி.மீ தொலைவை சாலை வழியாக வந்தும் டுயன்சாங்கை அடைந்திட முடியும். சுற்றுலா டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளின் வழியாக இரயில் நிலையத்திலிருந்து டுயன்சாங் வர முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டுயன்சாங்கிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திமாபூரில் உள்ளது. திமாபூரிலிருந்து பிற போக்குவரத்து சாதனங்களின் உதவியுடன் டுயன்சாங் வந்து விட முடியும். டுயன்சாங்கிற்கு அருகிலிருக்கும் பிற விமான நிலையங்களாக 113 கி.மீ-ல் உள்ள ஜோர்ஹட் விமான நிலையமும், 183 கி.மீ-ல் லட்சுமிபூரின் லீலாபாரி விமான நிலையமும் மற்றும் 183 கி.மீ-ல் திப்ரூகர் விமான நிலையமும் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri