Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் (திரிபுரா) » வானிலை

உதய்பூர் (திரிபுரா) வானிலை

மே முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்களே உதய்பூரை பார்க்க சிறந்த பருவம் ஆகும். உதய்பூர் அதன் கோயில்களுக்காக பிரபலமானதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தீபாவளி சமயத்தில் இங்கு வருவது நன்மை பயக்கும். தீபாபளி சமயத்தில்தான் திரிபுரா சுந்தரி தேவிக்கு ஒரு புதிய மணமகள் போல் அலங்காரம் செய்யப்பட்டு நீண்ட கால கொண்டாட்டங்கள் நடைபெறும்.

கோடைகாலம்

கோடைகாலத்தில் உதய்பூர் நகரில் ஈரப்பதம் அதிகரித்து, வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதால் சுற்றுலாவுக்கு ஏற்ற காலம் இதுவல்ல. இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடைகாலம் மே இறுதி மற்றும் ஜூன் தொடக்கம் வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் உதய்பூரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மழைக்காலம்

உதய்பூர் நகரில் மழைக்காலம் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே நிலவுகிறது. மே மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் தென் மேற்கு பருவமழை உதய்பூருக்கு நல்ல மழையை கொண்டு வருகிறது.

குளிர்காலம்

திரிபுராவில் உள்ள பிற பகுதிகளைப் போன்றே உதய்பூரில் மிக மிதமான வானிலையே குளிர்காலத்தில் நிலவுகிறது. குளிர்காலத்தில் உதய்பூரின் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் ஆகும். லேசான கம்பளி ஆடைகள் குளிர்காலத்தில் உங்களைப் பாதுகாக்க போதுமானது. உதய்பூரில் அக்டோபர் இறுதியில் தொடங்கும்  குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். ஆகவே இந்தப் பருவமே உதய்பூரை பார்க்க சிறந்ததாகும்.