Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதயகிரி » வானிலை

உதயகிரி வானிலை

அக்டோபர் மாதத்தில் குளிர்காலம் ஆரம்பமாகியவுடன், உதயகிரி சுற்றுலாத்துறையும் சுறுசுறுப்படைகிறது. இக்காலத்தின் போது இங்கு பல்வேறு இந்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவதினால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உற்சாகம் அளவிட முடியாததாக இருக்கின்றது. அனைத்து சுற்றுலா செயல்பாடுகளுக்கும் சாதகமாக இருக்கும்படியான மிக ரம்மியமான வானிலை நிலவும். உதயகிரி செல்வதற்கான உகந்த காலம் இக்குளிர்காலமேயாகும்.

கோடைகாலம்

ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகியவையே கோடைகால மாதங்களாகும். இக்காலத்தின் போது வெப்பநிலைகள் 22 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வேறுபடும். இக்காலத்தின் போது இங்கு பயணிப்பதற்கு தடை ஏதுமில்லை; எனினும், இச்சமயத்தில் இங்கு நிலவக்கூடிய தொடர் அனல் அலைகளின் தாக்கம், பயணத்தை மிகவும் கடினமானதாக்கும். இக்காலத்தின் போது இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடை எடுத்துக் கொள்வதோடு, வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கும் லோஷனையும் போதிய அளவில் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மழைக்காலம்

கொளுத்திய வெயிலிலிருந்து மிகப் பெரும் ஆறுதல் அளிப்பதாய் இருக்கும் தென்கிழக்கு பருவமழை ஜூன் மாத இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தின் போது மிதமான மழைப்பொழிவுடன் கூடிய மிகவும் ரம்மியமான வானிலை நிலவும். ஆனால் இக்காலத்தின் போதும் சுற்றுலா செல்வது உசிதமல்ல; ஏனெனில் இதன் அருகில் உள்ள சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இடையிலான தொடர்பை பாதிக்கும் அபாயம் இருப்பதே காரணம் ஆகும்.

குளிர்காலம்

ஒடிஷா முழுவதிலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் பருவகாலம் குளிர்காலமே ஆகும். அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் குளிர்காலம், மார்ச் மாதம் வரையில் நீடிக்கின்றது. உதயகிரியின் வெப்பநிலை சுமார் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும். எலும்புகளை முறிக்கக்கூடிய குளிர் அலைகள் இந்த மூன்று மாதங்கள் முழுவதிலுமே வீசும். இச்சமயத்தில் உதயகிரிக்குள் பயணிக்கும் சுகானுபவத்தை நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டுமெனில், ஏராளமான கம்பளித் துணிகளை கையோடு எடுத்துச் செல்வது நலம்.