Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » வானிலை

உத்தர்காஷி வானிலை

ஏகப்பட்ட விசேஷங்கள் கொண்டாடப்படும் கோடைகள் மற்றும் மழைக்காலங்களே உத்தர்காஷி செல்வதற்கு உகந்த காலங்களாக கருதப்படுகின்றன.   

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): உத்தர்காஷியில், ஏப்ரல் மாதம் தொடங்கும் கோடைகாலமானது ஜூன் வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் இங்கு நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலைகள் தலா 30 டிகிரி செல்சியஸாகவும், 15 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவும் மழைக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு இருக்கும். உத்தர்காஷியின் பெரும்பாலான விசேஷங்கள் மழைக்காலத்திலேயே கொண்டாடப்படுகின்றன.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): அக்டோபர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில், இங்கு நிலவும் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலைகள் தலா 0 டிகிரி செல்சியஸாகவும், 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.