Search
  • Follow NativePlanet
Share

வதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்!

48

முந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் சான்றுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களால்,  அகோலா மரங்கள் வளரும் இந்த அங்கோட்டா என்ற சிறு குடியேற்ற பகுதி இன்று அகோடா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் ஒரு கிமீ தொலைவில் கிழக்குப் பகுதியில் வாட் அல்லது ஆல மரங்கள் நிறைந்த அடர்த்தியான கானகம் ஒன்றும் இங்குள்ளது. இந்த பகுதிக்கு வடபத்ரகா என்று பெயர். இந்த பகுதியிலிருந்துதான் இன்றையெ வதோதரா வந்தது. வதோதரா என்ற பெயர் 'வதோதர்' என்ற பெயரிலிருந்து உருவானது.

இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு 'ஆல மரத்தின் வயிற்றுப்பகுதி' என்று பொருளாகும். பிரிட்டிஷாரின் காலத்தில் பரோடா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த பகுதியின் பெயர் சமீபத்தில் மீண்டும் தனது பழைய பெயரை பெற்றது.

வரலாறு

இந்த நகரம் ஒரு காலத்தில் 4 கதவுகளை எல்லைகளாக கொண்டிருந்தது. அந்த கதவுகள் இன்றளவிலும் நிலைத்துள்ளன. 10வது நூற்றாண்டில் சாளுக்கியர்களாலும், அதைத் தொடர்ந்து சோலங்கி, வகேலா மற்றும் டெல்லி மற்றும் குஜராத் சுல்தான்களால் இந்த பகுதி ஆளப்பட்டு வந்திருக்கிறது.

மராத்திய தளபதியான பிலாஜி என்பவர் தான் இந்த நகர நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் வரலாற்றில் உருவாக்கியவர் ஆவார். அவருக்கு முன்னர் பாபி நவாப்களும் வதோதராவின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளனர்.

வதோதராவின் பொற்காலமான மஹாராஜா மூன்றாம் சயாஜிராவின் ஆட்சிக்காத்தில் இந்நகரம் மிகவும் முக்கியமான சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மற்றும் அவற்றின் நடமுறைகளையும் சந்தித்தது.

இந்த நகரின் முடிவில்லாத கலாச்சாரத்தின் பங்களிப்புகளுக்காக இந்நகரம் சன்ஸ்காரி நகரி அல்லது கலாச்சாரங்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

கலாச்சாரம்

குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படும் கார்பா கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன இடம் வதோதரா. உள்ளூர் கார்பா மைதானங்களில் கார்பா அல்லது நவராத்திரி விழாக்கள் ஆட்டம், பாட்டு என முழுவீச்சில் கொண்டாடப்படும்.

இந்நாட்களில் ராஸா மற்றும் கார்பா நடனங்கள் நள்ளிரவு வரையிலும் கூட நடக்கும். தீபாவளி, உத்தராயன், ஹோலி, எய்த், குடி பட்வா மற்றும் கணேச சதுர்த்தி ஆகியவை வதோதராவில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பிற திருவிழாக்களாகும்.

வதோதராவின் 'சன்ஸ்காரி நகரி' என்ற பெயர் அதன் கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் பெயராகும். வதோதரா மியூசியத்தில் உள்ள அளவில்லாத சேகரிப்புகள் மற்றும் மஹாராஜா பதே சிங் மியூசியம், பழைய கீதாமந்திரில் உள்ள நந்தலால் போஸின் பகவத் கீதையைப் பற்றிய முரல் சுவரோவியங்கள், மஹாராஜா சயாஜி பல்கலைக் கழகம் மற்றும் படக்காட்சி சாலை ஆகியவை கெய்க்வாட்-களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சில கலாச்சார முன்றேற்றங்களின் சான்றுகளாகும்.

புவியியல்

விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ள வதோதரா  மத்திய குஜராத்தில் உள்ள நகரமாகும். வழக்கமாகவே கோடைக்காலங்களில் இந்த ஆறு வறண்டு போய் சிறு ஓடையைப் போல தோற்றமளிக்கும்.

மாஹி மற்றும் நர்மதை நதிகளின் இடையிலுள்ள சமவெளியிலேயே இந்நகரம் அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்தி தர நிறுவனம் இந்த பகுதியை 1 முதல் 5 வரையிலான நிலநடுக்க அளவு மானியில், மூன்றாவது நிலநடுக்க எண்ணில் தரப்படுத்தியுள்ளது.

விஸ்வாமித்ரி நதி வதோதரா நகரத்தை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளது. கிழக்கு கரையில் உள்ள பழைய நகரம் பழைய வதோதராவாகவும், விஸ்வாமித்ரியின் மேற்கு கரையில் உள்ளத நகரம் புதிய வதோதராவாகவும் உள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதி மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்வமூட்டக் கூடிய இடங்கள்

கடியா துங்கார் குகைகள், லட்சுமி விலாஸ் அரண்மனை, நஸார்பாக் அரண்மனை, மகர்பூரா அரண்மனை, ஸ்ரீ அரபிந்தோ நிவாஸ், அங்கோட்டகா, சயாஜி பாக், சூர்சாகர் தலாவ், டாபோய், சோட்டா உதேபூர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வரலாற்றுப் பார்வையிடங்களாகும்.

வாதவனா சதுப்புநிலப்பகுதி மற்றும் சுற்றுச்சூழலியலிற்கான தங்குமிடம் ஆகியவை இடம் பெயர்ந்த பறவைகளை கொண்டிருக்கும் அற்புதமான இயற்கைப் பூங்காக்களாகும்.

சன்கேடா—என்ற மரப்வேலைப்பாடு இங்கு உற்பத்தி செய்யப்படும் அறைகலன்கள் மற்றும் இதர கைவினைப்பொருட்களில் செய்யப்பட்டு வருவதால், இந்த இடத்திற்கு வருவது இவற்றை வாங்க கிடைக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.

கெய்க்வாட்களின் காலத்திலிருந்தே அனைத்து விதமான கலாச்சார நடவடிக்கைகளும் இன்னமும் உரிமையுடன் உலவிக் கொண்டும், பல்வேறு இயற்கை பூங்காக்களையும் கொண்டிருக்கும் வதோதரா கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

பருவநிலை

வதோதராவில் மிதவெப்ப சவானா பருவநிலை நிலவுகிறது. கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகியவை இங்கு நிலவும் முக்கிய பருவங்களாகும். மழைக்காலத்தைத் தவிர பிற பருவங்களில் பருவநிலை வறட்சியாகவே இருக்கும்.

கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், வறட்சியாகவும் இருக்கும். மழைக்காலத்தில் பருவநிலை ஈரப்பதமாகவும் மற்றும் அவ்வப்போது இடைவிடாத மழை பெய்வதாகவும் இருக்கும். வடக்கத்திய காற்றினால் குளிர்காலம் ஜில்லென்று இருக்கும்.

போக்குவரத்து தொடர்புகள்

டெல்லி, அகமதாபாத், காந்தி நகர் மற்றும் மும்பையுடன் வதோதரா மிகவும் நன்றாக தொடர்பு கொண்டுள்ளது. நகரத்திற்குள் பொது போக்குவரத்து சாதனங்களான பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளும் உள்ளதால் உள்ளூர் போக்குவரத்தும் எளிதானதாக உள்ளது.

கார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களாகும்.

வதோதரா சிறப்பு

வதோதரா வானிலை

சிறந்த காலநிலை வதோதரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வதோதரா

  • சாலை வழியாக
    வதோதரா நகரம் 8-வது தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுடனும் மற்றும் அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற நகரங்களுடன் இந்திய தேசிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை எண் 1-ன் வழியாகவும் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. வல்லபிபூர் போக்குவரத்து கூட்டுறவு சங்கம் அல்லது VTCOS –ன் VTPL பேருந்துகள் வதோதராவில் காணப்படும் முதன்மையான போக்குவரத்து வசதிகளாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வதோதரா இரயில் நிலையம் இந்நகரத்தின் முதன்மையான இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் ரட்லம், கோடா வழியாக புது டெல்லியுடனும் மற்றும் மதுரா வழியாக அகமதாபாத் மற்றும் மும்பையுடனும் இணைக்கப் பட்டுள்ளது. அகமதாபாத் சதாப்தி, டெல்லி சாராய் ரோஹில்லா காரிப் ரத், குஜராத் மெயில், கர்னாவதி எக்ஸ்பிரஸ், சூர்யாநகரி எக்ஸ்பிரஸ், ரானக்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வதோதரா இரயில் நிலையத்தில் கிடைக்கும் சில இரயில்களாகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    வதோதரா விமான நிலையம் அல்லது ஹர்னி சிவில் விமான நிலையம் என்ற உள்நாட்டு விமான நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹர்னியில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ ஆகிய விமான சேவை நிறுவனங்கள் மும்பை, புது டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat