Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாகமண் » வானிலை

வாகமண் வானிலை

குளுமையான பருவநிலையை கொண்டிருப்பதால் வருடத்தின் எல்லா நாட்களிலும் வாகமண் மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் கோடைக்காலத்தில் இம்மலைப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது. இயற்கை அழகு பொலிவுடன் பிரகாசிப்பதால் இக்காலம் சுற்றுலாவுக்கு மிக ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

வாகமண் மலைவாசஸ்தலப் பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. மிக இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 25° C வரை மட்டுமே வெப்பநிலை காணப்படுகிறது. குறைந்தபட்சமாக 10° C வரை குறைகிறது. இக்காலத்தில் வாகமண் நகரத்துக்கு விஜயம் செய்வது மிக விசேஷம்.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை வாகமண் மலைவாசஸ்தலத்தில் மழைக்காலம் நிலவுகிறது. தொடர்ந்து மழைப்பொழிவு காணப்படும் இப்பருவம் சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது வாகமண் மலைவாசஸ்தலம் மிகக்குளிருடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் 10° C முதல் 22° C வரை வெப்பநிலை நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற கேரள நகரங்களைப்போல் அல்லாமல் இங்கு குளிர்காலம் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர்காலச்சூழல் நிலவுவது ஒரு வியக்கத்தக்க அம்சமாகும். சில சமயம் 0° C வரை கூட வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதால் குளிருக்கான உடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.